Chief Postmaster General, Chennai - 600002
தமிழ்நாடு அஞ்சல்துறை வட்டத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி, பல்துறை பணிக்கு (MTS Multi Tasking Staff) 300 க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது GDS (Gramin Dak Sevak) பதவிக்கான தேர்வு ஆகும். அதாவது கிராமங்களில் உள்ள அஞ்சல் நிலையங்களில், அரசு ஊழியர்களாக இல்லாமல், பகுதி நேர ஊழியர்களாக GDS பணியாளர்கள் இருப்பார்கள். அவர்கள் இந்த MTS தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவதன் மூலம், அரசு வேலை பெற முடியும்.
பணியிடம்: தமிழகம் முழுவதும்
பணி GDS பல்துறை பணி (Multi Task)
காலியிடங்கள் 300
கல்வித்தகுதி 10
இது தொடர்பாக தமிழ்நாடு முதன்மை அஞ்சல் அலுவலகத்தில் இருந்து வெளியான சுற்றறிக்கையின்படி, GDS ஊழியர்கள் MTS அரசு ஊழியர்களாக பணிபுரிவதற்கு, 2018, 2019 காலக்கட்டத்தில் இருந்த காலியிடங்களை நிரப்புவதற்கும் வரும் மார் 15 ஆம் தேதி தேர்வு நடத்தப்படுகிறது. இது நேரடி நியமனம் இல்லை. விண்ணப்பதாரர்கள் GDS பதவியில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும்.
எழுத்துத்தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். லெவல் 1ன் படி சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 300 க்கும் அதிகமான பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
MTS பணிக்கான தேர்வு மார்ச் மாதம் 15 ஆம் தேதி நடைபெறுகிறது. மொத்தம் 2 தாள்கள் கொண்டதாக தேர்வு இருக்கும். முதல் தாள் காலை 10 மணி முதல் 11 மணி வரையிலும், இரண்டாம் தாள் காலை 11 மணி முதல் 12 மணி வரையிலும் நடைபெறும்.
முக்கிய நாட்கள்:
- அறிவிக்கை வெளியான நாள்: 4 பிப்ரவரி 2020
- விண்ணப்பம் முடியும் நாள்: 17 பிப்ரவரி 2020
- தேர்வு நடைபெறும் நாள்: 15 மார்ச் 2020
Detailed Advertisement
EmoticonEmoticon