Purukottai Village Assistant Recruitment-2020 | Interview Date:31-01-2020

Government of Tamilnadu,
 Revenue and Rescue Service Department
Thirumayam Taluk, Pudukottai district,


தமிழக அரசிற்கு உட்பட்டு புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகாவில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 5-வது தேர்ச்சி பெற்ற, சைக்கிள் ஓட்டத்தெரிந்தவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் ஜனவரி 29ம் தேதியன்று நடைபெறும் நேர்முகத்  தேர்வில் பங்கேற்று பயனடையலாம்.

நிர்வாகம் : புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா அலுவலகம் 

மேலாண்மை : தமிழக அரசு 

பணி : கிராம உதவியாளர் 

மொத்த காலிப்பணியிடங்கள் : 06 

வேலைவாய்ப்பு உள்ள வருவாய் கிராமத்தின் பெயர்கள் 
  1. சீரத்தக்குடி 
  2. கண்ணங்காரக்குடி 
  3. பிலயவயல் 
  4. கண்ணனூர் 1 பிட் 
  5. பிலிவலம் 
  6. நெய்க்கோணம் 


கல்வித் தகுதி : 
மேற்கண்ட பணியிடத்திற்கு 5-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் சைக்கிள் ஓட்டத் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருத்தல் அவசியம். (விண்ணப்பத்தாரர் மேற்கண்ட கிராமத்தையோ அல்லது அதனைச் சுற்றியுள்ள குக்கிராமத்தையோ சேர்ந்தவராக இருக்க வேண்டும்.) 

வயது வரம்பு : 
18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். பி.சி, எம்.பி.சி, சீர் மரபினர் பிரிவைச் சேர்ந்தவர்கள் 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 

தேர்வு முறை : 
கிராம உதவியாளர் பணியிடத்திற்கு நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : 
வட்டாட்சியர் அலுவலகம், திருமயம் 

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 
29.01.2020 இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், 

விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.pudukkottai.nic.in என்னும் அதிகாரப்பூர்வ லிங்க்கை கிளிக் செய்யவும்.


EmoticonEmoticon