Thirubuvanam Silk Handloom Weavers Co.Op Production & Sales Society Ltd,
21, Sannathi Street, Thirubuvanam, Tamil Nadu 612103
தமிழக அரசிற்கு உட்பட்ட திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கணினி இயக்குனர், வடிவமைப்பாளர், இளநிலை எழுத்தர், விற்பனையாளர் நிலை (2), அலுவலக உதவியாளர் என மொத்தம் 27 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் ,Thirubuvanam Silk
மேலாண்மை : தமிழக அரசு ,Government of Tamilnadu,
பணியிடம் : தஞ்சாவூர்
மொத்த காலிப் பணியிடம் : 27
பணி மற்றும் காலிப் பணியிடம்:
- Comouter Operator, கணினி இயக்குனர் - 01
- Designer வடிவமைப்பாளர் - 01
- Junior Assistant, இளநிலை எழுத்தர் - 08
- Salesman, விற்பனையாளர் நிலை II - 15
- Office assistant, அலுவலக உதவியாளர் - 02
ஊதியம் :
கணினி இயக்குனர், வடிவமைப்பாளர் - ரூ.5,800 - ரூ.32,970 + ரூ.1,500
இளநிலை எழுத்தர், விற்பனையாளர் நிலை II - ரூ.4,900 - ரூ.27,800 + ரூ.1,200
அலுவலக உதவியாளர் - ரூ.4,000 -ரூ.19,360 + ரூ.900
கல்வித் தகுதி :
8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு மற்றும் பி.எஸ்சி படித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
(அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.)
தேர்வு முறை :
நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
அஞ்சல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட்., இசட் 322, நெ 55 சன்னதி தெரு, திருபுவனம்-612103 தஞ்சாவூர் மாவட்டம் விண்ணப்பம் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 31.10.2019ம் தேதிக்குள் பதிவு தபாலில் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும் அல்லது நேரில் ஒப்படைக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://cooptex.gov.in/ என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.
EmoticonEmoticon