Nobel Prize for Physics and Chemistry-2019

The Nobel Foundation,
Rebecka Oxelström, Nobel Media and Nobel Prize Museum
Press Officer


இயற்பியலுக்கான நோபல் பரிசு

The 2019 #NobelPrize in Physics has been awarded with one half to James Peebles “for theoretical discoveries in physical cosmology” and the other half jointly to Michel Mayor and Didier Queloz “for the discovery of an exoplanet orbiting a solar-type star.”


2019ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு ஜேம்ஸ் பீபிள்ஸ், மைக்கேல் மேயர், டிடியர் கியூலோஸ் ஆகிய மூன்று பேருக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. சுவீடனில் உள்ள ஸ்டால்க்கோமில் இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்பியல் அண்டவியலில் கோட்பாட்டு கண்டுபிடிப்புகளுக்காக ஒரு பகுதி நோபல் பரிசு ஜேம்ஸ் பீபிள்ஸ்க்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பாதி பரிசு தொகை சூரிய வகை நட்சத்திரத்தை சுற்றும் வெளிக்கோளை கண்டுபிடித்ததற்காக மைக்கேல் மேயர், டிடியர் கியூலோஸ்க்கும் பகிர்ந்து அளிக்கப்படும் என நோபல் பரிசு கமிட்டி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக நோபல் கமிட்டி வெளியிட்டுள்ள செய்தியில், கோடிக்கணக்கான விண்மீன் திரள்கள் மற்றும் விண்மீன் கொத்துகளுடன் அகிலம் உருவானது பற்றி எடுத்து சொன்னவர் ஜேம்ஸ் பீபிள்ஸ். அவரது தத்துவார்த்த கட்டமைப்பானது, இரண்டு தசாப்தங்களாக (20 ஆண்டுகளாக) உருவாக்கப்பட்டது, பிக் பேங் முதல் இன்று வரை பிரபஞ்சத்தின் வரலாற்றைப் பற்றிய நமது நவீன புரிதலின் அடித்தளமாகும்.

சூரிய குடும்பத்திற்கு வெளியே இந்த ஆண்டின் இயற்பியல் பரிசு பெற்றுள்ள மைக்கேல் மேயரும் டிடியர் கியூலோஸ்ம் அறியப்படாத உலகங்களான நமது விண்வெளி , பால்வீதியை ஆராய்ந்தனர். 1995 ஆம் ஆண்டில், அவர்கள் நமது சூரிய மண்டலத்திற்கு வெளியே ஒரு கிரகத்தை முதன்முதலில் கண்டுபிடித்தனர், இது ஒரு கோள் ஆகும், சூரிய வகை நட்சத்திரமான 51 பெகாசியைச் சுற்றி வருகிறது.

பல கோள்கள் கண்டுபிடிப்பு இதன் மூலம் மைக்கேல் மேயர் மற்றும் டிடியர் குலோஸ் ஆகியோர் விண்வெளி துறையில் ஒரு புரட்சியைத் தொடங்கி உள்ளார்கள். இதன் காரணமாக 4,000 க்கும் மேற்பட்ட வெளிகோள்கள் பால்வீதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நம்ப முடியாத செல்வ வளத்துடன் விசித்திரமான புதிய உலகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன என நோபல் கமிட்டி குறிப்பிட்டுள்ளது.


வேதியியலுக்கான நோபல் பரிசு


The 2019 #NobelPrize in Chemistry has been awarded to John B. Goodenough, M. Stanley Whittingham and Akira Yoshino “for the development of lithium-ion batteries.”

ஸ்டாக்ஹோம்: 2019-ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு 97 வயது மிக மூத்த விஞ்ஞானி ஜான் குட்எனஃப் உள்ளிட்ட 3 பேருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் அறிவியல், இலக்கியம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2019-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு, வில்லியம் கேலின், பீட்டர் ராட்கிளிப், கிரெக் செமன்சா ஆகியோருக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பிராண வாயுவை திசுக்கள் எப்படி எடுத்து கொள்கின்றன என்கிற ஆய்வுக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இயற்பியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது. பேரண்டம் குறித்த ஆய்வுக்காக ஜேம்ஸ் பீப்லஸு, சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ள கோள்கள் குறித்த ஆய்வுக்காக மிசெல் மேயார் மற்றும் டிடியர் குயல்ஸ் ஆகியோருக்கு நேற்று நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வேதியியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஜான் பி குட்எனஃப் (ஜெர்மனி), ஸ்டான்லி விட்டிகாம் (பிரிட்டன்), அகிர யோஷினோ (ஜப்பான்) மூவருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 97 வயதில் நோபல் பரிசு பெறுகிறார் மிக மூத்த விஞ்ஞானி ஜான் பி குட்எனஃப். லித்தியம் ஐயன் ரீசார்ச்சபிள் பேட்டரியை கண்டுபிடித்ததற்காக 3 பேருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




EmoticonEmoticon