List of Voter in Tamilnadu in District Wise-2019 | Name of Local body and List

Government  of  Tamilnadu 
Election  Commission  of Tamilnadu 

தமிழகத்தில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 2 கோடியே 92 லட்சத்து 56 ஆயிரத்து 960 ஆகவும், பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 2 கோடியே 98 லட்சத்து 60 ஆயிரத்து 765 ஆகவும் உள்ளது. மூன்றாம் பாலினத்தவர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 472 ஆகவும் உள்ளது. தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5 கோடியே 91 லட்சத்து 23 ஆயிரத்து 197 ஆக உள்ளது.


திருவள்ளூர் 
மாவட்டத்தில், ஒரு மாநகராட்சி, நான்கு நகராட்சிகள், 10 பேரூராட்சிகள் மற்றும் 14 ஊராட்சி ஒன்றியங்களில், வார்டு வாரியாக வாக்காளர் பிரிக்கப்பட்டு, திருத்திய வாக்காளர் பட்டியலை, கலெக்டர் மகேஸ்வரி, நேற்று வெளியிட்டார்.

இதில், 10 லட்சத்து, 7,627 ஆண்கள்; 10 லட்சத்து, 32 ஆயிரத்து, 819 பெண்கள்; 355 திருநங்கையர் என மொத்தம், 20 லட்சத்து, 40 ஆயிரத்து, 801 வாக்காளர்கள் உள்ளனர்.இந்த திருத்திய வாக்காளர் பட்டியலை, கலெக்டர் அலுவலகம், அந்தந்த நகராட்சி அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள், ஊராட்சி அலுவலகங்களில், பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளன.

இந்த வாக்காளர் பட்டியலில், பாகம், வார்டு உள்ளிட்டவை தவறாக இருந்தால், அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பொதுமக்கள் பார்வைக்கு...திருவள்ளூர் மாவட்டத்தில், ஒரு மாநகராட்சி, நான்கு நகராட்சிகள், 10 பேரூராட்சிகள் மற்றும் 14 ஊராட்சி ஒன்றியங்களில், வார்டு வாரியாக வாக்காளர் பிரிக்கப்பட்டு, திருத்திய வாக்காளர் பட்டியலை, கலெக்டர் மகேஸ்வரி, நேற்று வெளியிட்டார்.இதில், 10 லட்சத்து, 7,627 ஆண்கள்; 10 லட்சத்து, 32 ஆயிரத்து, 819 பெண்கள்; 355 திருநங்கையர் என மொத்தம், 20 லட்சத்து, 40 ஆயிரத்து, 801 வாக்காளர்கள் உள்ளனர்.


காஞ்சிபுரம் 

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 30.40 லட்சம் வாக்காளர்களும், திருவள்ளூரில், 20.40 லட்சம் வாக்காளர்களம் இருப்பது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள், ஒவ்வொருவராக, வாக்காளர் பட்டியலை, கலெக்டரிடமிருந்து பெற்றனர்.சட்டசபை தொகுதி வாரியான வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கொண்டு, உள்ளாட்சி தேர்தலுக்கான, மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகளுக்கு, இந்த வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், 13 ஊராட்சி ஒன்றியங்கள், ஒன்பது நகராட்சிகள், 17 பேரூராட்சிகளுக்கு, உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.


மதுரை

ஒரு மாநகராட்சி, 3 நகராட்சிகள், 9 பேரூராட்சிகள், 13 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 420 கிராம ஊராட்சிகளில் 25 லட்சத்து 94 ஆயிரத்து 854 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களை விட 33 ஆயிரத்து 4 பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.

உள்ளாட்சிகளில் 4,265 பதவிகள்

மதுரை மாநகராட்சி நான்கு மண்டலங்களில் நுாறு வார்டு உறுப்பினர்கள், ஒரு மேயர், மூன்று நகராட்சிகளில் 78 வார்டுகளில் உறுப்பினர்கள், மூன்று தலைவர்கள், 9 பேரூராட்சிகளிலுள்ள 144 வார்டுகளில் உறுப்பினர்கள், 9 தலைவர் உட்பட 335 பேரும், மாவட்ட ஊராட்சி 23 வார்டுகளில் உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் 214 உறுப்பினர்கள், கிராம ஊராட்சிகளிலுள்ள 3273 வார்டு உறுப்பினர்கள், 420 ஊராட்சி தலைவர்கள் உட்பட 3930 பேர் தேர்தலில் தேர்வு செய்யப்படவுள்ளனர்.


சேலம்

சேலத்தில், மாவட்ட உள்ளாட்சி தேர்தலுக்கு, வாக்காளர் இறுதிப்பட்டியலை, கலெக்டர் ராமன், நேற்று வெளியிட்டார். அதன்படி, சேலம் மாநகரில், ஆண் வாக்காளர், மூன்று லட்சத்து, 42 ஆயிரத்து, 982 பேர், பெண் வாக்காளர், மூன்று லட்சத்து, 53 ஆயிரத்து, 847 பேர், திருநங்கை, 49 பேர் என, ஆறு லட்சத்து, 96 ஆயிரத்து, 878 பேர் உள்ளனர். நகராட்சி நான்கில், ஆண் வாக்காளர், 80 ஆயிரத்து, 160; பெண் வாக்காளர், 84 ஆயிரத்து, 739; திருநங்கை, 3 என, ஒரு லட்சத்து, 64 ஆயிரத்து, 902 பேர். பேரூராட்சி, 33ல், ஆண் வாக்காளர், இரண்டு லட்சத்து, 12 ஆயிரத்து, 109; பெண் வாக்காளர், இரண்டு லட்சத்து, 14 ஆயிரத்து, 630; திருநங்கை ஆறு என, நான்கு லட்சத்து, 26 ஆயிரத்து, 745 பேர். ஊராட்சி ஒன்றியங்கள், 20ல், ஆண் வாக்காளர், எட்டு லட்சத்து, 11 ஆயிரத்து, 469; பெண் வாக்காளர், ஏழு லட்சத்து, 93 ஆயிரத்து, 258; திருநங்கை, 55 என, 16 லட்சத்து, 4,782 பேர் அடங்கும். மாவட்டத்தில், மொத்தமாக, 28 லட்சத்து, 93 ஆயிரத்து, 307 வாக்காளர் உள்ளனர். அதில், மாநகராட்சி வாக்காளர் பட்டியலை, மாநகராட்சி கமிஷனர் சதீஷ் பெற்றுக்கொண்டார்.

ஓட்டுச்சாவடிகள் எத்தனை? சேலம் மாநகரில், ஆண், பெண் ஓட்டுச்சாவடி, 654; நான்கு நகராட்சிகளில், ஆண், பெண் ஓட்டுச்சாவடி தலா, 80, பொது ஓட்டுச்சாவடி, 39 என, 199; 33 பேரூராட்சிகளில், ஆண், பெண் ஓட்டுச்சாவடி தலா, 62, பொது ஓட்டுச்சாவடி, 448 என, 572; ஊராட்சி ஒன்றியங்கள், 20ல், ஆண், பெண் ஓட்டுச்சாவடி தலா, 43, பொது ஓட்டுச்சாவடி, 2,655 என, 2,741 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. மாவட்டத்தில், மொத்த ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கை, 4,166 ஆகும்.


நாமக்கல்
தமிழ் மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, ஐந்து நகராட்சிகள், 15 ஒன்றியங்கள், 19 பேரூராட்சிகளில், சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதையடுத்து, உள்ளாட்சி தேர்தலுக்காக புகைப்படத்துடன் கூடிய வார்டு வாரியான இறுதி வாக்காளர் பட்டியல், நாமக்கல்லில் வெளியிடப்பட்டது. கலெக்டர் மெகராஜ் வெளியிட்டார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி பெற்றுக் கொண்டார்.

வரைவு வாக்களர் பட்டியல்படி, மாவட்டத்தில், ஆறு லட்சத்து, 87 ஆயிரத்து, 510 ஆண்கள், ஏழு லட்சத்து, 19 ஆயிரத்து, 619 பெண்கள், இதரர், 127 என, மொத்தம், 14 லட்சத்து, 7,256 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். வரும், 15 வரை நடக்கும் சிறப்பு முகாமில், இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காமல் உள்ளவர்கள், தங்கள் பெயரை சேர்த்துக் கொள்ளலாம்.


தர்மபுரி: 

தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை, கலெக்டர் மலர்விழி வெளியிட்டு பேசியதாவது: தர்மபுரி நகராட்சியில், 33 வார்டுகளில், 22 ஆயிரத்து, 616 ஆண்கள், 23 ஆயிரத்து, 463 பெண்கள், இரண்டு திருநங்கைகள் உட்பட மொத்தம், 46 ஆயிரத்து, 81 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் உள்ள, 10 பேரூராட்சிகளில், 159 வார்டுகள் உள்ளன. இதில், 59 ஆயிரத்து, 855 ஆண்கள், 61 ஆயிரத்து, 438 பெண்கள், ஆறு திருநங்கைகள் என மொத்தம், ஒரு லட்சத்து, 21 ஆயிரத்து, 299 வாக்காளர்கள் உள்ளனர். மேலும், 2,343 ஊராட்சி ஒன்றிய வார்டுகளில், ஐந்து லட்சத்து, 32 ஆயிரத்து, 914 ஆண்கள், ஐந்து லட்சத்து, 9,242 பெணகள், 116 திருநங்கைகள் என, மொத்தம், 10 லட்சத்து, 42 ஆயிரத்து, 272 வாக்காளர்கள் உள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில், ஆறு லட்சத்து, 15 ஆயிரத்து, 385 ஆண்கள், ஐந்து லட்சத்து, 94 ஆயிரத்து, 143 பெண்கள், 124 திருநங்கைகள் என மொத்தம், 12 லட்சத்து, 9,652 வாக்காளர்கள் உள்ளனர். இப்பட்டியல் நகராட்சி, பேரூராட்சி மற்றும் அனைத்து பஞ்., அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் இதை பார்வையிட்டு, பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட ஏதேனும் திருத்தம் இருந்தால், அதற்கான உரிய படிவம் பெற்று அந்தந்த மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்


கிருஷ்ணகிரி: 
இதன்படி, ஓசூர் மாநகராட்சியில், 1 லட்சத்து, 3,626 ஆண்கள், 96 ஆயிரத்து, 918 பெண்கள், 89 இதரர் என மொத்தம், 2 லட்சத்து, 633 பேரும், கிருஷ்ணகிரி நகராட்சியில், 25 ஆயிரத்து, 751 ஆண்கள், 27 ஆயிரத்து, 86 பெண்கள் என மொத்தம், 52 ஆயிரத்து, 837 வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். ஆறு டவுன் பஞ்.,களில், 39 ஆயிரத்து, 700 ஆண்கள், 40 ஆயிரத்து, 836 பெண்கள், இதரர், 20 பேர் என மொத்தம், 80 ஆயிரத்து, 556 பேரும், 10 யூனியன்களில், 6 லட்சத்து, 39 ஆயிரத்து, 1 ஆண்கள், 5 லட்சத்து, 88 ஆயிரத்து, 296 பெண்கள், இதரர், 12 பேர் என மொத்தம், 11 லட்சத்து, 92 ஆயிரத்து, 318 பேரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 7 லட்சத்து, 72 ஆயிரத்து, 978 ஆண்கள், 7 லட்சத்து, 53 ஆயிரத்து, 136 பெண்கள், இதரர், 230 பேர் என மொத்தம், 15 லட்சத்து, 26 ஆயிரத்து, 344 பேர் இடம் பெற்றுள்ளனர். வாக்காளர் பட்டியல் கிருஷ்ணகிரி மாவட்ட பஞ்., அலுவலகத்திலும், 10 யூனியன் அலுவலகத்திலும், 333 பஞ்.,களிலும், ஓசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி மற்றும் ஆறு டவுன் பஞ்., அலுவலகத்திலும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் பிரபாகர் தெரிவித்தார்.

ஈரோடு: 
அதில், 18.18 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். கட்சி பிரதிநிதிகளிடம் வாக்காளர் பட்டியலை வெளியிட்டு, கலெக்டர் கதிரவன் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்காளர் பட்டியல் புகைப்படத்துடன் வடிவமைக்கப்பட்டு, வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட அளவில், 2,889 வார்டுகளுக்காக, 2,775 ஓட்டுச்சாவடிகள் தயார்படுத்தப்படுகிறது. மாவட்ட அளவில் ஆண் வாக்காளர்கள், 8,92,164, பெண் வாக்காளர்கள், 9,25,269, திருநங்கை, 76 என மொத்தம், 18 லட்சத்து, 17 ஆயிரத்து, 509 வாக்காளர்கள் உள்ளனர். தற்போது, அனைத்து உள்ளாட்சி அமைப்புகள், தாலுகா அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலகம், கலெக்டர் அலுவலகம், அந்தந்த அமைப்புக்கான தேர்தல் அலுவலகத்திலும் வாக்காளர் பட்டியல் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


அதில், 18.18 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். கட்சி பிரதிநிதிகளிடம் வாக்காளர் பட்டியலை வெளியிட்டு, கலெக்டர் கதிரவன் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்காளர் பட்டியல் புகைப்படத்துடன் வடிவமைக்கப்பட்டு, வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட அளவில், 2,889 வார்டுகளுக்காக, 2,775 ஓட்டுச்சாவடிகள் தயார்படுத்தப்படுகிறது. மாவட்ட அளவில் ஆண் வாக்காளர்கள், 8,92,164, பெண் வாக்காளர்கள், 9,25,269, திருநங்கை, 76 என மொத்தம், 18 லட்சத்து, 17 ஆயிரத்து, 509 வாக்காளர்கள் உள்ளனர். தற்போது, அனைத்து உள்ளாட்சி அமைப்புகள், தாலுகா அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலகம், கலெக்டர் அலுவலகம், அந்தந்த அமைப்புக்கான தேர்தல் அலுவலகத்திலும் வாக்காளர் பட்டியல் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. 

நீலகிரி
நீலகிரியில், உள்ளாட்சி தேர்தலுக்காக வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், 5 லட்சத்து 57 ஆயிரத்து 693 வாக்காளர்கள் உள்ளனர்.தமிழகம் முழுவதும், 2019 உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் வரைவு பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, நீலகிரியில் உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டார்.இதில், நீலகிரியில் ஊரக மற்றும் நகர்ப்புறத்தில், 788 வார்டுகள் உள்ளன. 790 ஓட்டுசாவடிகளின் எண்ணிக்கையாகும். 'ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை, 2 லட்சத்து 69 ஆயிரத்து 899; பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை, 2 லட்சத்து 87 ஆயிரத்து 787; மூன்றாம் பாலினத்தவர், 7' என மொத்தம், 5 லட்சத்து 57 ஆயிரத்து 693 வாக்காளர்கள் உள்ளனர்.கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், ''உள்ளாட்சி தேர்தலுக்காக, 3, 400 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மின்னணு ஓட்டுபதிவு இயந்திரங்களில் வாக்கு செலுத்தும் முறையை பற்றி தெரிவிக்கப்படும்,'' என்றார்.

கரூர் 
ரூர் மாவட்டத்தில் உள்ள, ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், தேர்தல் நடத்தும் வகையில், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை, கலெக்டர் அன்பழகன் நேற்று வெளியிட்டார். அதில், கரூர், குளித்தலை ஆகிய இரண்டு நகராட்சிகளில், 96 ஆயிரத்து, 419 ஆண்கள், ஒரு லட்சத்து, 4,503 பெண்கள் என, இரண்டு லட்சத்து, 926 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தமுள்ள, 11 டவுன் பஞ்சாயத்துகளில், 61 ஆயிரத்து, 842 ஆண்கள், 65 ஆயிரத்து, 960 பெண்கள் என, ஒரு லட்சத்து, 27 ஆயிரத்து, 803 வாக்காளர்கள், எட்டு பஞ்சாயத்து யூனியன்களில், இரண்டு லட்சத்து, 60 ஆயிரத்து, 91 ஆண்கள், இரண்டு லட்சத்து, 73 ஆயிரத்து, 149 பெண்கள் என, ஐந்து லட்சத்து, 33 ஆயிரத்து, 292 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 67 திருநங்கைகளும் அடங்குவர். கரூர் நகராட்சி பகுதியில், 192 ஓட்டுச்சாவடிகள், குளித்தலையில், 24 ஓட்டுச்சாவடிகள், 11 டவுன் பஞ்சாயத்து பகுதியில், 189, எட்டு பஞ்சாயத்து யூனியன் பகுதிகளில், 983 என, மொத்தம், 1,388 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. நகரப்புற ஓட்டுச்சாவடிகளுக்கு, 980 மின்னணு கட்டுப்பாட்டு கருவிகள், 1,912 ஓட்டுப் பதிவு இயந்திரங்கள், கர்நாடகா மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. ஊரகப்பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடிகளில், 3,460 ஓட்டுப்பெட்டிகள், அந்தந்த பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில், பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல்:

நேற்று திண்டுக்கல் மாநகராட்சி, நகராட்சி - 3, பேரூராட்சிகள் - 23 மற்றும் ஊராட்சி ஒன்றியம் - 14 ல் இறுதி செய்யப்பட்ட வாக்காளர்களின் பட்டியலை கலெக்டர் வெளியிட்டார். அதில் 8 லட்சத்து 78 ஆயிரத்து 190 ஆண்கள், 9 லட்சத்து 15 ஆயிரத்து 593 பெண்கள், 158 இதரர் மொத்தம் 17 லட்சத்து 93 ஆயிரத்து 941 வாக்காளர்கள் உள்ளன. நிகழ்ச்சியில் பல்வேறு கட்சியினரும் கலந்து கொண்டனர். பொதுமக்கள் உள்ளாட்சி மன்றங்களில் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இடம் பெற்றுள்ளதா என உறுதி செய்து கொள்ளலாம்.

திண்டுக்கல் வாக்காளர்கள்
உள்ளாட்சி அமைப்பு ஆண் பெண் இதரர் மொத்தம்
மாநகராட்சி  ஆண்: 83,863 88,518 பெண்: 28 1,72,409
நகராட்சி (3) ஆண்: 55,665 59,290 பெண்: 21 1,14,976
பேரூராட்சி (23) ஆண்: 1,44,636 1,52,600 பெண்: 13 2,97,249
ஊராட்சி ஒன்றியம் (14) ஆண்: 5,94,026 6,15,185 பெண்: 96 12,09,307
மொத்தம் ஆண்: 8,78,190 9,15,593 பெண்: 158 17,93,941

விருதுநகர்:
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் திருச்சியில் இருந்து 850 , கோயம்புத்துாரில் இருந்து 1,650 , ஈரோட்டில் இருந்து 500 மொத்தம் 3 ஆயிரம் வந்துள்ளன. 4,600 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் ஆணையத்தால் விருதுநகர் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 7 நகராட்சி தலைவர் , 225கவுன்சிலர்கள் , 9 பேரூராட்சி தலைவர் , 144 கவுன்சிலர்கள் பதவியிடங்களுக்கு பயன்படுத்தப்பட உள்ளது.

உள்ளாட்சி தேர்தல்களில் 2019 க்கான ஓட்டுச்சாவடி பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. 7 நகராட்சிகளில் ராஜபாளையத்தில் 112, ஸ்ரீவில்லிபுத்துாரில் 66, அருப்புக்கோட்டையில் 72, சிவகாசியில் 62, சாத்துாரில் 25, விருதுநகரில் 64, திருத்தங்கல்லில் 43 என 444 , 9 பேரூராட்சிகளில் செட்டியார்பட்டி 15, சேத்துார் 18, மல்லாங்கிணர் 15, மம்சாபுரம் 19, காரியாபட்டி 15, சுந்தரபாண்டியம் 15, எஸ்.கொடிக்குளம் 15, வ.புதுப்பட்டியில் 18 என 146 ,11 ஊராட்சி ஒன்றியங்களில் அருப்புக்கோட்டையில் 154, விருதுநகரில் 288, காரியாபட்டியில் 149, திருச்சுழியில் 162, நரிக்குடியில் 177, ராஜபாளையத்தில் 214, ஸ்ரீவில்லிபுத்துாரில் 159, வத்திராயிருப்பில் 118, சிவகாசியில் 326, வெம்பக்கோட்டையில் 211, சாத்துாரில் 184 என 2,142 உட்பட விருதுநகர் மாவட்டத்தில் 2,732 ஓட்டுச்சாவடி மையங்கள் தயார் நிலையில் உள்ளது என்றார்.





EmoticonEmoticon