Life Insurance Corporation(LIC) Assistants Recruitment Notification-2019 | Vacancies: 8000 | Last Date:1 அக்டோபர் 2019

Life Insurance Corporation of India ,
Corporate Office : Yogakshema Building, Jeevan Bima Marg, 
P.O. Box No – 19953, Mumbai – 400 021 

மத்திய அரசிற்கு உட்பட்டு இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் தேசிய காப்பீட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மொத்தம் 8 அயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

எல்ஐசி மண்டலங்கள்:-
மண்டலங்கள் வாரியாக நாடு முழுவதும் எல்ஐசி கிளைகள் விரிந்துள்ள நிலையில் தற்போது வடக்கு மண்டலம், வடக்கு மத்திய மண்டலம், கிழக்கு மண்டலம், கிழக்கு மத்திய மண்டலம், மத்திய மண்டலம், தெற்கு மண்டலம், தெற்கு மத்திய மண்டலம், மேற்கு மண்டலம் என மொத்தம் 8 மண்டலங்கள் வாரியாக வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

முக்கிய நாட்கள்:- 
  1. விண்ணப்பதிவு தொடங்கும் நாள் : 17 செப்டம்பர் 2019 
  2. விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 1 அக்டோபர் 2019 
  3. நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்ய : 15 அக்டோபர் முதல் 22 வரை 
  4. முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாள் : 21, 22 அக்டோபர் 2019 
  5. முதன்மைத் தேர்வு நடைபெறும் நாள் : பின்னர் அறிவிக்கப்படும்.

மொத்த பணியிடங்கள்:   8000

பணி:
உதவியாளர் 

ஊதியம்:
மாதம் ரூ.14,435 முதல் ரூ.40,080 வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:- 
ஏதேனும் ஓர் துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:- (செப்டம்பர் 1, 2019 தேதியின்படி):
விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
  1. SC/ST 5 YEARS
  2. OBC 3 Years
  3. PwBD(Gen) 10 YEARS
  4. PwBD(SC/ST) 15 YEARS
  5. PwBD(OBC) 13 YEARS
  6. ECO/SSCO (GEN) 5 YEARS
  7. ECO/SSCO (SC/ST) 10 YEARS
  8. ECO/SSCO (OBC) 8 YEARS
  9. Confirmed LIC employees Further Relaxation of 5 YEARS 

விண்ணப்பக் கட்டணம்:
பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.600, 
எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ.50 ஆகும். 
விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலமாகச் செலுத்த வேண்டும். மேலும், பணப்பரிமாற்ற சேவைக்குக் கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படும்.

தேர்வு முறை:- 
இத்தேர்வானது முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். இதில் தேர்வு செய்யப்படுவோருக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும். இவை அனைத்திலும் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதார்கள், தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

தேர்வு நடத்தப்படும் இடங்கள்: Click Here

விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://licindia.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று, அதனை பூர்த்தி செய்து, வரும் 1 அக்டோபர் 2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை, பாடத்திட்டம், கேள்வி அமைப்புகள், கல்வித்தகுதி, பணியிடம் உள்ளிட்ட முழுமையான விபரங்களுக்கு எல்.ஐ.சி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைக்காணஇங்கேகிளிக் செய்யவும்.


இணையதள பக்கத்தில் விண்ணப்பப் படிவம்





EmoticonEmoticon