தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ,
TNPSC Road Park Town, V.O, C. Nagar, Chennai, Tamil Nadu 600003
தமிழக அரசுத் துறையில் காலியாக உள்ள உதவி இயக்குநர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அதிகாரி ஆகிய பணிகளுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி சார்பில் புதிய வேலை வாய்ப்பு குறித்த விளம்பர அறிவிப்பை செய்தித்தாள்களில் வெளியிடப்பட்டுள்ளது.
Name of the Posts:
உதவி இயக்குநர்
குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அதிகாரி
இந்த இரு பணிகளுக்குமே பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதியான வயது வரம்பு, இட ஒதுக்கீடு, தேர்வு திட்டம், கட்டணம் மற்றும் இதர விவரங்கள் வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதியன்று டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 13 முதல் செப்டம்பர் 11, 2019 வரை ஆன்லைனில் http://www.tnpsc.gov.in, http://www.tnpsc.exams.net அல்லது http://www.tnpsc.exam.in ஆகிய இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான எழுத்துத் தேர்வு செப்டம்பர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
EmoticonEmoticon