ஆவின் நிறுவனம். மதுரை
Madurai district cooperative milk producers union Ltd madurai,
Sathamangalam,Madurai - 625020.
தமிழக அரசின் பால்வளத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தின் மதுரை கிளையில் காலியாக உள்ள மூத்த தொழிற்சாலை உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. மொத்தம் 30 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு 12வது அல்லது ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம். ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!
நிர்வாகம் : ஆவின்
மேலாண்மை : தமிழக அரசு
பணி : மூத்த தொழிற்சாலை உதவியாளர்
மொத்த காலிப் பணியிடங்கள் : 30
ஊதியம் : மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்
கல்வித் தகுதி :
12-வது தேர்ச்சி அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
தேர்வு முறை :
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.250. இதனை General Manager M.D.C.M.P.U. Ltd., என்ற பெயரில் மதுரையில் மாற்றத்தக்க வகையில் வங்கி வரைவோலையாக எடுத்து செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணங்கள் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை : www.aavinmilk.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : General Manager, Madurai District Cooperative Milk Producers, Union Ltd, Sathamangalam, Madurai - 625 020.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 15.07.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் Advertisemet and Application என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.
EmoticonEmoticon