முதன்மை மாவட்ட நீதிமன்றம்,
திருப்பூர் மாவட்டம்,
திருப்பூர்– 641 602.
Advt..No. 82/2019
Advt.Dated: 29.05.2019
Last date:13.06.2019
திருப்பூர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள இளநிலை, முதுநிலை கட்டளைதாரர், ஓட்டுநர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.60 ஆயிரம் வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்கு 8-வது தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையுங்கள்.
நிர்வாகம் : திருப்பூர் மாவட்ட நீதிமன்றம்
மேலாண்மை : தமிழக அரசு
பணி : ஓட்டுநர்
காலிப் பணியிடங்கள் : 02
ஊதியம் : ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்
கல்வித் தகுதி : 8-வது தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி : முதுநிலை கட்டளைதாரர்
காலி பணியிடங்கள் : 10
ஊதியம் : ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்
கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி : ஜெராக்ஸ் மெஷின் ஆப்பரேட்டர்
காலிப் பணியிடங்கள் : 13
ஊதியம் : ரூ.16,600 முதல் ரூ.52,400 வரையில்
கல்வித் தகுதி : 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஜெராக்ஸ் மெஷின் ஆப்பரேட்டர் பட்டப்படிப்புடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி : இளநிலை கட்டளைதாரர்
காலிப் பணியிடங்கள் : 28
ஊதியம் : ரூ.19,000 முதல் ரூ.60,300 வரையில்
கல்வித் தகுதி : 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி : பதிவுரு எழுத்தர்
காலிப் பணியிடங்கள் : 17
ஊதியம் : ரூ.15,900 முதல் ரூ. 50,400 வரையில்
கல்வித் தகுதி : 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி : அலுவலக உதவியாளர்
காலிப் பணியிடங்கள் : 49
ஊதியம் : ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்
கல்வித் தகுதி : 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி : மசால்சி, வாட்ச்மேன், இரவுக்காவலர், துப்புரவுப் பணியாளர், தோட்டக்காரர், மசால்சி- முழு நேரப்பணி, சுகாதார பணியாளர்
காலிப் பணியிடங்கள் : 37
ஊதியம் : ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்
கல்வித் தகுதி : தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு :
01.05.2019 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
குறைந்தபட்ச கல்வித்தகுதிக்கு மேற்பட்ட தகுதி படைத்தவர்களுக்கு வயது வரம்பு இல்லை.
தேர்வு முறை :
எழுத்துத்தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
https://districts.ecourts.gov.in/tiruppur என்னும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து உரிய இடங்களில் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டப்பட்டு கையொப்பத்துடன் அனைத்து கல்வி, ஜாதி, முன்னுரிமைக்கான சான்றிதழ்கள் மற்றும் ஏனைய சான்றிதழ்களின் நகல்கள் உரிய சான்றொப்பமுடன் கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :
முதன்மை மாவட்ட நீதிபதி, திருப்பூர் மாவட்டம்,
திருப்பூர் - 641 602.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 13.06.2019
அறிவிப்பு மற்றும் விண்ணப்பம்,
EmoticonEmoticon