Bharathidasan University Driver Vacancies Notification-2019

 பாரதிதாசன் பல்கலைக் கழகம் ,
பல்கலைப்போரூர், திருச்சிராப்பள்ளி -620 024 

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம். 

நிர்வாகம் : பாரதிதாசன் பல்கலைக் கழகம் 

பணி : ஓட்டுநர் 

மொத்த காலிப் பணியிடம் : 05 

ஊதியம் :
தின ஊதிய அடிப்படையில் (நாளொன்றுக்கு ரூ.264 வீதம்) பணியமர்த்தப்பட்டு, பணி மற்றும் நடத்தைகள் திருப்திகரமாக இருப்பின் பின்னர் அப்பணியாளர்கள் இப்பல்கலைக் கழகத்தில் ஓட்டுநர் பதவியில் ஊதியக்கட்டு மற்றும் தரஊதியத்தில் பதவியில் பணியமர்த்தப்படுவார்கள். 

கல்வி தகுதி : 
எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு : 
09.03.2019 தேதியின்படி பொது பிரிவினர் 30 வயதிற்குள்ளும், பிசி, எம்பிசி, டிஎன்சி பிரிவினர் 32-க்குள்ளும், மற்ற அனைத்து பிரிவினர்களும் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 
  1. General Category – 30 years.
  2. B.C./M.B.C./D.N.C. – 32 years.
  3. SC /SCA/ST/PH/DW – 35 years

விண்ணப்பக் கட்டணம் செலுத்தும் முறை : 
பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.100 எஸ்டி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவினர் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. பதிவாளர், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி என்ற பெயருக்குக் காசோலையாக எடுத்து அனுப்ப வேண்டும். 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : 
பதிவாளர், பாரதிதாசன் பல்கலைக்கழகம், பல்கலைப்போரூர், திருச்சிராப்பள்ளி -620 024 

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 29.03.2019 

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும்  Advertisement and Application என்ற லிங்கை கிளிக் செய்யவும்.


EmoticonEmoticon