UPSC-Civil Services Examination in 2019 | Apply Online | வெற்றி பெற எளியவழிகள்

UNION PUBLIC SERVICE COMMISSION(UPSC),
संघ लोक सेवा आयोग
Dholpur House, Shahjahan Road,
धौलपुर हाउस, शाहजहां रोड,
New Delhi - 110069
नई दिल्ली - 110069

UPSC-Civil Services Examination in 2019

Examination Notice No. 04/2019-CSP 
Dated :19/02/2019
Last date: 18/03/2019

மத்திய அரசின் அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஐஏஎஸ், ஐபிஎஸ் என மொத்தம் 24 விதமான பணிகளுக்கு சிவில் சர்வீசஸ் தேர்வு நடத்தப்படவுள்ளது. தற்போது 2019 ஆம் ஆண்டுக்கான தேர்வில், 896 குடிமையியல் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலியிடங்கள் : 896

 Preliminary Examination of the Civil Services Examination for recruitment to the Services and Posts mentioned below will be held by the Union Public Service Commission on 2nd June, 2019 in accordance with the Rules published by the Department of Personnel & Training in the Gazette of India Extraordinary dated 19th February, 2019.
(i) Indian Administrative Service.
(ii) Indian Foreign Service.
(iii) Indian Police Service.
(iv) Indian P & T Accounts & Finance Service, Group ‘A’.
(v) Indian Audit and Accounts Service, Group ‘A’.
(vi) Indian Revenue Service (Customs and Central Excise), Group ‘A’.
(vii) Indian Defence Accounts Service, Group ‘A’.
(viii) Indian Revenue Service (I.T.), Group ‘A’.
(ix) Indian Ordnance Factories Service, Group ‘A’ (Assistant Works Manager, Administration).
(x) Indian Postal Service, Group ‘A’.
(xi) Indian Civil Accounts Service, Group ‘A’.
(xii) Indian Railway Traffic Service, Group ‘A’.
(xiii) Indian Railway Accounts Service, Group 'A'.
(xiv) Indian Railway Personnel Service, Group ‘A’.
(xv) Post of Assistant Security Commissioner in Railway Protection Force, Group ‘A’
(xvi) Indian Defence Estates Service, Group ‘A’.
(xvii) Indian Information Service (Junior Grade), Group ‘A’.
(xviii) Indian Trade Service, Group 'A'.
(xix) Indian Corporate Law Service, Group ‘A’.
(xx) Armed Forces Headquarters Civil Service, Group ‘B’ (Section Officer’s Grade).
(xxi) Delhi, Andaman & Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli
Civil Service, Group 'B'.
(xxii) Delhi, Andaman & Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli
Police Service, Group 'B'.
(xxiii) Pondicherry Civil Service, Group 'B'.
(xxiv) Pondicherry Police Service, Group ‘B’.

தகுதி: 
ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இறுதியாண்டு தேர்வு எழுதவுள்ளவர்களும், தேர்வு முடிவுக்காக காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். 

வயது வரம்பு :
01.08.2019 தேதியின்படி 21 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவு விண்ணப்பதாரர்களுககு மத்திய அரசின் விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

கல்வித் தகுதி : 
ஏதேனும் ஓர் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இறுதியாண்டு தேர்வு எழுதவுள்ளவர்களும், தேர்வு முடிவுக்காக காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

தேர்வு முறை :
இரண்டு கட்ட எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். முதல்நிலை தேர்வு எனும் முதல் கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்தகட்ட தேர்வான முதன்மை தேர்வான இரண்டாம் கட்ட தேர்வு நடத்தப்படும். பின்னர் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.List of optional subjects for Main Examination :
(i) Agriculture
(ii) Animal Husbandry and Veterinary Science
(iii) Anthropology
(iv) Botany
(v) Chemistry
(vi) Civil Engineering
(vii) Commerce and Accountancy
(viii) Economics
(ix) Electrical Engineering
(x) Geography
(xi) Geology
(xii) History
(xiii) Law
(xiv) Management
(xv) Mathematics
(xvi) Mechanical Engineering
(xvii) Medical Science
(xviii) Philosophy
(xix) Physics
(xx) Political Science and International Relations
(xxi) Psychology
(xxii) Public Administration
(xxiii) Sociology
(xxiv) Statistics
(xxv) Zoology
(xxvi) Literature of any one of the following languages:
Assamese, Bengali, Bodo, Dogri, Gujarati, Hindi, Kannada, Kashmiri, Konkani, Maithili,
Malayalam, Manipuri, Marathi, Nepali, Odia, Punjabi, Sanskrit, Santhali, Sindhi, Tamil, Telugu, Urdu
and English.

தேர்வு மையம் : 
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் புதுச்சேரி

விண்ணப்பக் கட்டணம் :
ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை : 
தகுதியும் விருப்பமும் உள்ள இளைஞர்கள் www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
Candidates are required to apply Online by using the website https://upsconline.nic.in Detailed instructions for filling up online applications are available on the above mentionedwebsite. Brief Instructions for filling up the "Online Application Form" given in Appendix-II.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 18.03.2019

இப்பணியிடம் குறித்த மெலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப்பெறவும் Detailed Advertisement Download என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

Online Application:
Click Here


ஐஏஎஸ் தேர்வுள நீங்கதான் டாப் வர கீழ்காணும் கருத்துக்களை கடைபிடியுங்கள்

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட மத்திய அரசுப் பணியாளர் தேர்வுக்கு படித்து கொண்டிருக்கும் தேர்வர்களே, என்னதான் முழுநேரம் நீங்கள் படிப்பை மட்டுமே மேற்கொண்டிருந்தாலும் ஓர் சில தனித் திறமை இல்லாவிட்டால் நிச்சயம் உங்களது முயற்சி தோல்வியில் முடியலாம்.

இந்த 7 விசயம் போதும்... ஐஏஎஸ் தேர்வுள நீங்கதான் டாப்பு..!


இங்கே இப்பணியிடங்களுக்கு எனவே பல லட்சக் கணக்கானோர் தங்களது முழு முயற்சியினை பயன்படுத்தி தேர்விற்கு தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களிடம் இருந்து நீங்கள் தனித்து வெற்றிபெற இந்த ஏழு விசயம் மட்டும் தெரிந்திருந்தால் போதும். அப்படி என்னதான் அந்த விசயம் என பார்க்கலாம் வாங்க.

முன்னோட்டம் :

ஐஏஎஸ் போட்டி தேர்வினை வெல்ல கடைப்பிடிக்க வேண்டியதில் முதல் விசயமே முன்னோட்டம் தான். ஐஏஎஸ் போன்ற போட்டித் தேர்வினை குறித்த முழுமையான முன்னோட்டத்தினை நீங்கள் தெரிந்திருக்க வேண்டும். நீங்கள் தேர்வு குறித்து தெளிவாக தெரிந்து கொண்டாலே போதுமானது. வெற்றி நிச்சயம் உங்கள் கையில் வந்தடைந்து விடும்.

சுயதேடல் :

ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற குடிமைப் பணியிடங்கள் குறித்த இடைவிடாத சுய தேடல் உங்களிடம் உள்ளதா என சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள். அதுப்படி சுயதேடல் சரியாக உங்களிடம் இருக்கின்றதென்றால் அது போதுமானது. நீங்கள் சுய தேடலுடன் இருக்கும்பொழுதுதான் உள்ளுணர்வு உங்களை வழிநடத்தும். அதன்படி நீங்கள் வெல்ல எளிமையாக இருக்கும். ஐஏஎஸ் தேர்வினை பொருத்தவரை வெற்றிக் கதைகளை தெரிந்து கொண்டது போல வெற்றி பெறாத கதைகளை தெரிந்து கொண்டால் அந்த தவறை நீங்களும் செய்ய மாட்டீர்கள்.

போட்டி தேர்வில் உங்களின் தகுதி:

போட்டி தேர்வினை எழுத முடிவெடுத்தது முதல் தொடர்ந்து படித்தால் மட்டும் வெற்றியை அடைய முடியாது. தேர்வில் பங்கேற்கும் முன் எந்தளவிற்கு இப்பணிக்காக உங்களை தயார் செய்துள்ளுர்கள் என ஆராய்ந்துகொள்ளுங்கள். உங்களது இலக்கை முன்கூட்டியே துர்மாணிப்பதன் மூலம் வெற்றி எளிதில் அமையும். நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான், உங்களுடைய தகுதியினை எடைபோடுவதே அது. சுய சோதனை செய்யுங்கள், அதென்ன சுயசோதனை என்றால் தேர்வு குறித்த முன்னோட்டம் கிடைத்துவிட்டது, ஐஏஎஸ் தேர்வினை நல்ல ஒரு பாதையும் சுய தேடலால் பெற்றாகிவிட்டது. இனி நீங்கள் செய்ய வேண்டியது என்ன? என்ற கேள்வியை எழுப்ப வேண்டும்.

கட்டமைப்பு
  
போட்டி தேர்வுக்கு படிக்கத் தொடங்கிவிட்டீர்கள், இப்பொழுது உங்களை பற்றிய ஒரு கண்ணோட்டம் உங்களுக்குள் இருக்கும். நீங்கள் தேர்வினை வெற்றி பெற தகுதி பெற்றவர்கள் என்பதை தெரிந்துவிட்டது. ஐஏஎஸ் இலக்கை அடைய ஒரு தனி வழியிருக்கின்றது. அதனை எவ்வாறு முழுமையாக கடைப்பிடிக்க போகின்றீர்கள், ஐஏஎஸ் வெற்றிக்கு நீங்கள் உங்களை சுயமாக கட்டமைப்பது மிகமுக்கியமானதாகும். சுய கட்டமைப்பு என்பது அவசியமாகும். அதனை ஏனோதானோ என்று குருட்டு நம்பிக்கையில் செயல்படுத்த முடியாது. நம்பிக்கையுடன் உழைப்பு இருக்க வேண்டும். அது இருக்கின்றதென்றால் நீங்கள் நிச்சயம் வெற்றி பெறலாம்.

கடின உழைப்புடன், புத்தியும் வேலை செய்ய வேண்டும்:

ஐஏஎஸ் என்ற ஒரு இலக்கை அடைய எடுத்த எடுப்பில் ஓடுவது முட்டாளாக்கிவிடும். முதலில் சரியாக நிற்க கற்றுகொண்டு, பேலன்ஸ் செய்து ஓட கற்றுகொள்வது நல்லதாகும். மாங்கு, மாங்கு என்று படித்துவிட்டு மண்டை வழிக்கின்றது என்றால் தவறு உங்களிடத்தில்தான் உள்ளது. எவ்வளவு படித்தாலும், எப்படி படித்தாலும் படிப்பவற்றை ஈடுபாடோடு படிக்க வேண்டும். தேர்வு என்பதை கடந்து படிக்க வேண்டும். புத்திசாலித்தனமாக திட்டமிட்டு படிக்க வேண்டும். பிராட்டிக்கலாக நீங்கள் படிப்பதை ஒப்பீடு செய்து படியுங்கள்.

ஐஏஎஸ் தேர்வை பொருத்தவரை வருத்தி படிப்பதைவிட விரும்பி படிக்க வேண்டும். படித்தவற்றை பரிசோதித்து பார்க்க வேண்டும். உதாரணத்திற்கு தனிமனித வருமானம் பற்றி படிக்கிறீர்கள் என்றால் அதை நடைமுறையில் உங்கள் குடும்ப மற்றும் சுற்றாத்தார் வருமானம் குறித்து ஒப்பீடு செய்ய வேண்டும்.

நாட்டு வருமானம் படிக்கிறீர்கள் என்றால் அது குறித்த கணக்கீடுகளை மக்களோடு அப்ளை செய்து பார்க்க வேண்டும். அடிப்படை உரிமை, கடமைகள் பற்றி படிக்கின்றீர்கள் என்றால் அதனை எவ்வாறு நடைமுறையில் நாம் கடைப்பிடிக்கின்றோம். எவ்வாறு உங்கள் படிப்பு திட்டங்கள் இருக்க வேண்டும், என்ற சுமார்ட்டாக சிந்திக்க தெரிந்தால் நீங்கள்தான் சாம்பியன்.

படித்தவற்றை தேர்வறையில் பயன்படுத்த தெரிய வேண்டும்

ஐஏஎஸ் தேர்வுக்கு நீங்கள் நிறைய படித்து கொண்டிருக்கின்றீர்கள் என்றால் அது சிறந்த முயற்சி ஆகும். நீங்கள் சுயமாக படித்தாலும் அல்லது பயிற்சி வகுப்பில் படித்தாலும் அது தனிப்பட்ட உங்களது விருப்பம். ஆனால் எப்படி படித்தாலும் படித்தவற்றை தேர்வறையில் பயன்படுத்தும் அளவிற்கு உங்களை தயார்ப்படுத்தி செல்ல வேண்டும். தேர்வறையில் உங்கள் படிப்பின் ஆழம் மற்றும் அளவுகள் எளிதாக தெரிந்து கொள்ளலாம். ஆகவே படித்தவற்றை சரியாகப் பயன்படுத்த தெரிந்துவிட்டால் நிச்சயம் நீங்கள் வெற்றி பெறலாம்.
  
விதிமுறைப்படி பயணித்தல் :


ஐஏஎஸ் தேர்வானது கடினமானது இல்லை, ஆனால் சரியாக கணிக்க தவறினால் தவறாகிவிடும். ஐஏஎஸ் தேர்வினை பொருத்தவரை மேலே கூறிய அனைத்து வழிகளையும் முழுமையாக நீங்கள் புரிந்துகொண்டீர்கள் என்றால் நிச்சயம் ஐஏஎஸ் தேர்வு குறித்த உங்கள் பார்வையில் பெரிய மாற்றம் இருக்கும். அது உங்களை நிச்சயம் வழிநடத்தும். தேர்வுக்கான வெற்றி பாதையினை தெளிவாக கற்றுகொள்வதுடன் கடைப்பிடிக்க வைக்கும். தேவையற்ற எந்த ஒரு சிக்கலிலும் உங்களை சிக்க வைக்காது.


EmoticonEmoticon