Current Affairs Today-2019 in Tamil,
TNPSC, UGC-NET, RRB, IBPS and the Competitive Examination.
தமிழ்நாடு
- தமிழகத்தில் 5.91 கோடி வாக்காளர்கள் : இறுதிப் பட்டியல் வெளியீடு:தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப் பட்டது. அதன்படி, மொத்த வாக்காளர் எண்ணிக்கை 5.91 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பரில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர்.
- எழுத்தாளர் சாந்தனுக்கு பிரேம்சந்த் ஃபெல்லோஷிப் விருது:இலங்கைத் தமிழ் எழுத்தாளர் ஐ.சாந்தனுக்கு பிரேம்சந்த் ஃபெல்லோஷிப் விருது புதன்கிழமை வழங்கப்பட்டது.
- மூத்த எழுத்தாளர் சாருகேசி காலமானார்:மூத்த எழுத்தாளரும், இசை விமர்சகருமான சாருகேசி உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 80.
இந்தியா
- பெங்களூருவில் மிராஜ் 2000 ரக போர் விமானம் விபத்து: 2 விமானிகளும் பலி:பெங்களூருவி உள்ள எச்ஏஎல் விமான தளத்தில் இருந்து வழக்கமான ரோந்துப் பணிக்குச் சென்ற மிராஜ் 2000 சிறிய ரக போர் விமானம் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு விமானிகளும் உயிரிழந்தனர்.
- தனிநபர் வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பு ரூ.5 லட்சமாக அதிகரிப்பு:தனிநபர் வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்தி இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- மீனவர்களுக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்படும்: மீனவர்கள் நலனுக்காக மீன்வளத்துறை என்ற தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
- அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு புதிய மெகா ஓய்வூதியத்திட்டம் அறிவிப்பு:மாதம் ரூ.15 ஆயிரத்திற்கும் கீழ் ஊதியம் பெறும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு புதிய மெகா ஓய்வூதியத்திட்டம் அறிவித்துள்ளார் .
உலகம்
- ஜனவரியை தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு மாதமாக அறிவித்த அமெரிக்க மாகாணம் :ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு மாதமாக அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணம் அறிவித்துள்ளது.
- சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் தமிழ் மாணவி:பிரிட்டனில் வசிக்கும் இலங்கை தமிழ் மாணவி, சர்வதேச விண்வெளி நிலையம் செல்லவுள்ளார்.இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் சியோபன் ஞானகுலேந்திரன். இவர் லண்டனில், விண்வெளி அறிவியல் குறித்து கல்வி கற்று வருகிறார். செயற்கை கோள்களை விண்வெளிக்கு ஏவுவது, விண்வெளியில் இருந்து நில அளவை செய்வது என, பல்வேறு துறைகளில், 30 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.இவர்களில், திறமைமிக்க இரு மாணவர்களை விண்வெளிக்கு அனுப்ப, பிரிட்டன் விண்வெளி ஆராய்ச்சி மையம் முடிவெடுத்தது. அதில், சியோபன் ஞானகுலேந்திரன் மற்றும் பிரிட்டனை சேர்ந்த டியானா ஆகியோர் தேர்வாகியுள்ளார். இருவரும் நுண்ணியிரிகள் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளனர். விண்வெளி ஆராய்ச்சியிலும் திறமையாக செயல்பட்டு வருகின்றனர்.சர்வதேச விண்வெளி ஓடத்தில் பல நாட்கள் தங்கியிருந்து, இருவரும் நுண்ணுயிரிகள் குறித்த ஆய்வில் ஈடுபட உள்ளனர்
வர்த்தகம்:
விளையாட்டு
- உலக சாதனை படைத்த மிதாலி ராஜ்: மகளிர் கிரிக்கெட்டில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ள இந்திய ஒருநாள் அணி கேப்டன் மிதாலி ராஜ், புதிய உலக சாதனையை இன்று நிகழ்த்தியுள்ளார். ஹேமில்டனில் நியூஸிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட்டில் பங்கேற்றதன் மூலம் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 200 ஒருநாள் ஆட்டங்களை விளையாடிய முதல் வீராங்கனை என்கிற சாதனையை நிகழ்த்தியுள்ளார் மிதாலி ராஜ். 1999-ம் ஆண்டு தனது முதல் ஒருநாள் கிரிக்கெட்டை விளையாடிய மிதாலி ராஜ், 20 வருடங்களாக விளையாடி இச்சாதனையைப் புரிந்துள்ளார். மிதாலிக்கு அடுத்ததாக இங்கிலாந்தின் சார்லோட்டே எட்வர்ட்ஸ் 191 ஆட்டங்கள் விளையாடி 2017-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
EmoticonEmoticon