Cuddalore District Voters List: சட்டமன்ற வாரியாக வாக்காளர் பெயர்கள்

Public (Elections) Department,Secretariat, Fort St George,Chennai - 600 009

கடலுார் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.கடலுார் மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 1.9.2018ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 
ஆண் வாக்காளர்கள்: 9 லட்சத்து 93 ஆயிரத்து 71 , 
பெண் வாக்காளர்கள்: 10 லட்சத்து 5 ஆயிரத்து 515 , 
இதரர் 100 என 19 லட்சத்து 98 ஆயிரத்து 686 வாக்காளர்கள் இருந்தனர்.

மாவட்டத்தில் கடந்த 1.9.2018 முதல் 31.10.2018 வரையிலான காலத்தில் சிறப்பு சுருக்க திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் தொடர்பான படிவங்கள் பெறப்பட்டது. உரிய பரிசீலனைக்கு பின்னர் அவற்றின் மீது தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலர்களால் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டது.சிறப்பு சுருக்க திருத்தம் 2019 காலத்தின்போது மாவட்டத்தில் பெறப்பட்ட மொத்த மனுக்கள் விபரம் வருமாறு: 

படிவம் 6 வாக்காளர்கள் சேர்த்தலுக்காக 45, ஆயிரத்து 575 மனுக்கள் பெறப்பட்டதில், 45 ஆயிரத்து 94 மனுக்கள் ஏற்கப்பட்டன; 481 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.படிவம் 7 (நீக்கல்) விண்ணப்பங்கள் 5 ஆயிரத்து 126 விண்ணப்பங்கள் பெறப்பட்டதில், 4 ஆயிரத்து 864 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன; 262 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. படிவம் 8 (திருத்தம்) 8 ஆயிரத்து 421 மனுக்கள் பெறப்பட்டதில் 7 ஆயிரத்து 703 மனுக்கள் ஏற்கப்பட்டன; 718 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

மேலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் நேரடி விசாரணை செய்யப்பட்டு பரிந்துரைக்கப்பட்டாவாறு இதர விசாரணைகளின்படி இறந்த வாக்காளர்கள் மற்றும் இடம் பெயர்ந்த வாக்காளர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கம் செய்திடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி இறப்பு, இடம் பெயர்வு, இரட்டைப்பதிவு ஆகியவற்றால் 7 ஆயிரத்து 704 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட தேசிய மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடப்பட்ட 2019ம் ஆண்டிற்கான வாக்காளர் புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியலின்படி, கடலுார் மாவட்டத்திற்குட்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 20 லட்சத்து 36 ஆயிரத்து 76 வாக்காளர்கள் உள்ளனர். 

இதில், கடலுார், திட்டக்குடி, பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம் தொகுதிகளில் பெண் வாக்காளர்கள் கூடுதலாக உள்ளனர். அதன்படி, ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் 15 ஆயிரத்து 435 பேர் கூடுதலாக உள்ளனர்.கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வரைவு வாக்காளர் பட்டியலை டி.ஆர்.ஓ., ராஜகிருபாகரன் வெளியிட்டார். தி.மு.க., சார்பில் நாராயணன், அ.தி.மு.க., நகர செயலாளர் குமரன், காங்., செய்தி தொடர்பாளர் குமார், சி.பி.எம்., சுப்ராயன், சி.பி.ஐ., குளோப், பகுஜன் சமாஜ் சுரேஷ் உடனிருந்தனர்.

Election commission Press Report: 

திட்டக்குடி-கிளிக் 
விருத்தாசலம்-கிளிக்
நெய்வேலி-கிளிக்
பண்ருட்டி-கிளிக் 
கடலூர்-கிளிக்
குறிஞ்சிப்பாடி-கிளிக்
புவனகிரி-கிளிக்
சிதம்பரம்-கிளிக்
காட்டுமன்னார்கோயில்-கிளிக்

Tamil: Click here

English Click here


EmoticonEmoticon