Current Affairs June 2018 A Glance in Tamil

Current Affairs-2018 in Tamil,
Dinamalar ,TNPSC, UGC-NET, RRB, IBPS and othe competitive Examinationஜூன்  2018 - ஒரு பின்னோக்கிய பார்வை 
தமிழகம்
 1. ஜூன் 2: தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜசோழன், உலகமாதேவி சிலைகள் காணாமல் போகின. வழக்கு பதிந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மூன்றே மாதத்தில் சிலையை மீட்டனர். 
 2. ஜூன் 5: சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தமிழகத்தில் 2019 ஜன., 1 முதல் பிளாஸ்டிக் பயன்பாடு, உற்பத்திக்கு தடை.
 3. அலைபேசி ஓட்டு - ஜூன் 6: சிவகாசி இன்ஜினியர் குருசாமி தயாரித்த அலைபேசி செயலியில் ஆதார் எண்ணை பயன்படுத்தி 'லாக் இன்' செய்தால் வேட்பாளர் பட்டியல் தோன்றும். விருப்பத்தை கிளிக் செய்தால் ஓட்டு பதிவாகும். 
 4. ஜூன் 12: சிறந்த சாலை கட்டமைப்பு திட்டத்துக்காக சென்னை மாநகராட்சிக்கு ரூ.1.60 கோடி ஜெர்மனி நிறுவன விருது. 
 5. ஜூன் 14: தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செல்லும் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், செல்லாது என நீதிபதி சுந்தரும் தீர்ப்பு. மூன்றாவது நீதிபதி சத்யநாராயணனுக்கு வழக்கு மாற்றம். 
 6. ஜூன் 15: மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் செல்லமுத்து நியமனத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து. 
 7. ஜுன் 17: விருதுநகர், நெல்லையில் மூன்று சோலார் மின் உற்பத்தி நிலையங்களுக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அடிக்கல்.
 8. ஜூன் 20: திருச்சியை சேர்ந்த அனுகீர்த்தி வாஸ், 2018க்கான 'மிஸ் இந்தியா' அழகியாக தேர்வு. 
 9. ஜூன் 22: காவிரி மேலாண்மை ஆணையமும், காவிரி நீர் ஒழுங்காற்று குழுவும் அமைத்து மத்திய அரசு அறிவிப்பு.
 10. ஜூன் 26: தங்கச்சிமடத்தில் கட்டட பணிக்கு தோண்டிய போது, 40 இரும்பு பெட்டிகளில் துப்பாக்கி, புல்லட்கள், கண்ணி வெடிகள் சிக்கின.
 11. * சென்னை - சேலம் இடையே எட்டுவழிச்சாலை திட்டம் தொடங்குவதாக அறிவிப்பு.
 12. சபாஷ் சத்தியஸ்ரீ - ஜூன் 30: நாட்டின் முதல் மூன்றாம் பாலின வழக்கறிஞர் ஆனார் பரமக்குடி சத்தியஸ்ரீ சர்மிளா. தமிழ்நாடு- புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவுசெய்தார். 

இந்தியா
 1. ஜூன் 1: 'கறுப்பு பணம்' தகவல் அளிப்போருக்கு மத்திய அரசு ரூ. 5 கோடி வரை சன்மானம். 
 2. ஜூன் 2: நாட்டின் முதல் விளையாட்டு பல்கலை நிறுவுவதற் கான அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்.
 3. ஜூன் 4: 2019 'நீட்' தேர்வில் தமிழகத்தின் கீர்த்தனா 12வது இடம். 
 4. ஜூன் 7: நாக்பூரில் நடந்த ஆர்.எஸ்.எஸ்., மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்பு. 
 5. ஜூன் 17: நாட்டில் 21 நகரங்களில் 2020ல் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் என அரசு அறிக்கையில் எச்சரிக்கை.
 6. * ஜார்க்கண்ட்டின் உச்வாவல் கிராமத்தில் இருந்து 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற முதல் மாணவியானார் அணு குமாரி. 
 7. ஜூன் 21: ஹரியானாவில் அனைத்து கிராமங்களுக்கும் ஏழு காரணிகள் அடிப்படையில் ஸ்டார் மதிப்பீடு வழங்கும் திட்டம் தொடக்கம். 
 8. * நாட்டின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியம் ராஜினாமா.
 9. ஜூன் 22: செசல்ஸ் அதிபர் டேனி பயுரே இந்தியா வருகை. 
 10. ஜூன் 23: மஹாராஷ்டிரா வில் பிளாஸ்டிக் பயன்பாடு, உற்பத்திக்கு தடை. 
 11. ஜூன் 27: உலகின் செலவின நகரங்களின் பட்டியலில் ஹாங்காங் முதலிடம். மும்பைக்கு 55வது இடம். 

உலகம்
 1. ஜூன் 2: ஸ்பெயின் பிரதமராக பெட்ரோ சான்செஸ் பொறுப்பேற்பு. 
 2. சிங்கப்பூரில் மகாத்மா - ஜூன் 2: சிங்கப்பூரில் காந்தியடிகள் அஸ்தி துாவப்பட்ட கிளிபோர்டு கடல் பகுதியில் அவருக்கு சிங்கப்பூர் அரசு சார்பில் நினைவிடம் அமைக்கப்பட்டது. இதனை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். 
 3. ஜூன் 3: கவுதமாலாவில் 'பியூகோ' எரிமலை வெடித்ததில் 160 பேர் பலி. 
 4. * நைஜீரியாவில் வசிக்கும் இந்தியருக்கு அபுதாபி பிக் டிக்கெட் லாட்டரியில் ரூ. 18 கோடி பரிசு. 
 5. ஜூன் 5: ஜோர்டான் பிரதமராக ஒமர் ரஜாஜ் பதவியேற்பு. 
 6. ஜூன் 6: துனிசியா கடற் பகுதியில் ஆப்ரிக்க நாடுகளை சேர்ந்த அகதிகள் சென்ற கப்பல் கவிழ்ந்ததில் 100 பேர் பலி. 
 7. ஜூன் 12: அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் - வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையே சந்திப்பு சிங்கப்பூரில் நடந்தது. 
 8. ஜூன் 17: கொலம் பிய அதிபராக இவான் டிகியூ தேர்வு. 
 9. ஜூன் 18: மேசி டோனியா நாட்டின் பெயரை வடக்கு மேசி டோனியா என மாற்றுவதாக கிரீசுடன் ஒப்பந்தம். 
 10. * எத்தியோப்பியா - எரீத்திரியா இடையே 20 ஆண்டுகளுக்குப்பின் விமான சேவை துவக்கம். 
 11. ஜூன் 19: உலகின் பணக் காரர்கள் பட்டியலில் ஜெப் பெஜாஸ் முதலிடம். 
 12. ஜூன் 20: நீண்ட நாட்கள் விண்வெளியில் தங்கிய வீராங்கனை பெக்கி விட்சன், நாசாவில் இருந்து ஓய்வு. 
 13. ஜூன் 21: நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டெர்னுக்கு பெண் குழந்தை பிறந்தது. 
 14. புதுமை பெண் - ஜூன் 24: உலகளவில் சவுதியில் மட்டுமே பெண்கள் கார் ஓட்ட தடை விதிக்கப்பட்டிருந்தனர். பல ஆண்டுகள் போராட்டத்துக்குப்பின் பெண்கள் கார் ஓட்ட அனுமதி. 
 15. ஜூன் 25: துருக்கி அதிபர் தேர்தலில் அதிபர் எர்டோகன் மீண்டும் வெற்றி.
 16. ஜூன் 27: பிரான்சில் இளைஞர்களுக்கு ராணுவ பயிற்சி கட்டாயம் என உத்தரவு.
 17. * பிரான்சில் அனைத்து இளைஞர்களும் ராணுவ பயிற்சி பெறுவது கட்டாயம் என அறிவிப்பு.
டாப் 3
 1. ஜூன் 30: உலகில் முதன்முதலாக மேற்கு ஆப்ரிக்காவின் காபோன் நாட்டில், ஆரஞ்சு நிற முதலை கண்டுபிடிப்பு. 
 2. ஜூன் 18: உலகின் சக்தி வாய்ந்த சூப்பர் கம்ப்யூட்டர் அறிமுகம். வினாடிக்கு 2 லட்சம் டிரில்லியன் கணக்குகளை கணக்கிடும். 
 3. ஜூன் 19: காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சிக்கான ஆதரவை பா.ஜ., வாபஸ் பெற்றது. முதல்வர் மெகபூபா முப்தி ராஜினாமா


EmoticonEmoticon