Current Affairs Today:28-01-2019 in Tamil

Current Affairs Today-2019 in Tamil,
TNPSC, UGC-NET, RRB, IBPS and the Competitive Examination.
நடப்பு செய்திகள்-28-01-2019
தமிழ்நாடு
  1. தொழில் முதலீட்டில் தமிழகம் 2-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பெருமிதம் தெரிவித்தார். 
  2. சாகித்ய அகாதெமியின் மொழி பெயர்ப்பு விருதுகள்: தமிழ் மொழிப் பிரிவில் குளச்சல் மு. யூசுஃப் தேர்வு 2018-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி மொழி பெயர்ப்பு விருதுகள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. இதில் கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் மு.யூசுஃப்பிற்கு  தமிழ் மொழி பெயர்ப்புக்கான விருது கிடைத்துள்ளது.
  3. 2025-க்குள் காசநோயை ஒழிக்கத் திட்டம்:இந்தியாவில் வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் காசநோய் முற்றிலும் ஒழிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

இந்தியா
  1. அதிவேக ரயிலின் பெயர் "வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ்:உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிவிரைவு ரயிலுக்கு "வந்தே பாரத்' என்று பெயரிடப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். முன்னதாக "டிரெயின் -18' என்று அந்த ரயில் அறியப்பட்டது.
  2. சிறையில் 111 அடி கம்பத்தில் தேசியக்கொடி:நாடு முழுவதும் நேற்று முன்தினம் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. குடியரசு தினத்தை முன்னிட்டு, டெல்லியில் மண்டோலி சிறை வளாகத்தில் 111 அடி உயர கம்பத்தில் பிரம்மாண்டமான தேசியக் கொடி ஏற்றப்பட்டது.


விளையாட்டு
  1. இந்திய அணியின் '10 ஆண்டு சவால்’: 10 ஆண்டுகளுக்குப்பின் ஒருநாள் தொடரை வென்றது(3-0) ; 7 விக்கெட்டில் நியூசி. படுதோல்வி:10 ஆண்டுகளுக்குப் பின் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை அந்நாட்டிலேயே 3-0 என்ற கணக்கில் வென்று 2-வது முறையாகச் சாதனை படைத்துள்ளது இந்திய அணி.




EmoticonEmoticon