Current Affairs Today-2019 in Tamil,
TNPSC, UGC-NET, RRB, IBPS and the Competitive Examination.
நடப்பு செய்திகள்-29-01-2019
தமிழ்நாடு
- சாகித்ய அகாதெமியின் மொழி பெயர்ப்பு விருதுகள்: தமிழ் மொழிப் பிரிவில் குளச்சல் மு. யூசுஃப் தேர்வு:2018-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி மொழி பெயர்ப்பு விருதுகள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. இதில் கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் மு.யூசுஃப்பிற்கு தமிழ் மொழி பெயர்ப்புக்கான விருது கிடைத்துள்ளது.
- தமிழ் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் உள்பட 24 பேருக்கு சாகித்ய அகாதெமி விருது:பிரபல தமிழ் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட இந்திய மொழிகளைச் சேர்ந்த 24 எழுத்தாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது.
- கனடா நாட்டின் டோரண்டோ பல்கலைக்கழக விருது தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் இமானுக்கு வழங்கபட்டது.
- சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 ஊர்களில் அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இந்தியா
- ஸ்வஸ்த் பாரத் யாத்ரா: தமிழக அரசுக்கு விருது:தேசிய அளவில், ஆரோக்கியமான உணவு முறைகளை, பொதுமக்களிடம், ஊட்டச்சத்துடன் கூடிய உணவு வகைகளை, பொதுமக்கள் உட்கொள்வது குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை,சிறப்பாக விளக்கி, விழிப்புணர்வு ஏற்படச் செய்த மாநிலம் என்ற வகையில், தமிழகத்துக்கு, மத்திய அரசின் விருது கிடைத்துள்ளது.
- யுபிஎஸ்சி உறுப்பினராக ராஜீவ் நயன் செளபே நியமனம்மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின்(யுபிஎஸ்சி) உறுப்பினராக உள்நாட்டு விமானப்போக்குவரத்து துறை செயலர் ராஜீவ் நயன் செளபே நியமிக்கப்பட்டுள்ளார்.
- ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவு: முதல்வர், தலைவர்கள் இரங்கல்முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உலகம்
- ஊழல் நாடுகள் பட்டியல்: இந்தியாவுக்கு 78ஆவது இடம்:ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலில், இந்தியா 78ஆவது இடத்தில் உள்ளது.
- பாகிஸ்தானில் முதலாவது ஹிந்து பெண் நீதிபதியாக சுமன்குமாரி நியமனம்:பாகிஸ்தான் நாட்டில் ஹிந்து மதத்தைச் சேர்ந்த பெண்ணான சுமன்குமாரி சிவில் நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
வர்த்தகம்
- ஆந்திர ஆலையில் சோதனை உற்பத்தியை தொடங்கியது கியா மோட்டார்ஸ் தென் கொரியாவைச் சேர்ந்த கியா மோட்டார்ஸ் கார்ப்பரேஷன், ஆந்திர மாநிலத்தில் அமைத்துள்ள தனது முதல் ஆலையிலிருந்து சோதனை முறையில் உற்பத்தியை செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
விளையாட்டு
- நியூஸி.க்கு எதிரான தொடரை கைப்பற்றியது இந்திய மகளிர் அணி நியூஸிலாந்துக்கு எதிராக இரண்டாவது ஒரு நாள் ஆட்டத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இந்திய மகளிரணி தொடரையும் 2-0 என கைப்பற்றியது.
EmoticonEmoticon