Current Affairs Today: 23-01-2019 and 24-01-2019 in Tamil

Current Affairs Today-2019 in Tamil,
TNPSC, UGC-NET, RRB, IBPS and the Competitive Examination.

நடப்பு செய்திகள்-23-01-2019 and 24-01-2019

தமிழ்நாடு-24-01-2019
 1. பெண் குழந்தைகள் பாதுகாப்பு: தமிழக அரசுக்கு 2 விருதுகள்:தேசிய பெண் குழந்தைகள் தினம் நேற்று வியாழக்கிழமை(ஜன.24) கொண்டாடப்பட்டது. இதில், மத்திய அரசின் திட்டமான பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் என்ற திட்டத்தை இந்திய அளவில் சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
 2. மக்கள் மத்தியில் இந்த திட்டத்தை சிறப்பாக எடுத்து சென்றதில் முதலிடம் பெற்ற திருவண்ணாமலை மாவட்டத்திற்கும் விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், குழந்தை பருவத்தில் தனக்கு நடைபெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தியவரும், தமிழக அரசின் விருது பெற்ற குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வாளருமான திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி நந்தினி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
 3. தீயணைப்புத் துறை துணை இயக்குநர் மீனாட்சிக்கு குடியரசுத் தலைவர் விருது:தீயணைப்புத் துறையின் துணை இயக்குநர் மீனாட்சி விஜயகுமார், மாவட்ட அதிகாரி மனோகரன், நிலைய அதிகாரி அரிராமன் முத்து, தீயணைப்பு வாகன ஓட்டுநர் அருணாசலம், தீயணைப்பாளர் ரமேஷ்குமார் ஆகிய 5 பேருக்கு குடியரசுத் தலைவரின் மெச்சத்தக்க விருதுகள் வழங்கப்படுகின்றன.
 4. ரயில் நிலையத்தில் பயன்பாட்டுக்கு வந்தது 100 அடி உயர கொடிக் கம்பம்:கோவை ரயில் நிலையத்தில் 100 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள தேசியக் கொடிக் கம்பம் வியாழக்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. 
 5. 304 ஒப்பந்தம், ரூ.3 லட்சம் கோடி முதலீடு: உலக முதலீட்டாளர் மாநாடு நிறைவுரையில்  முதல்வர் :தமிழக அரசின் இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாட்டில் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக, ரூ.3 லட்சத்து 431 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
 6. வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. சி-44 ராக்கெட்:ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து 'மைக்ரோசாட்-ஆர்', 'கலாம் சாட்' ஆகிய 2 செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
 7. 3.26 நாக் புள்ளிகள் கொண்ட கல்லூரிகளுக்கு நேரடி தன்னாட்சி அந்தஸ்து: யுஜிசி அறிவிப்பு:நாக் (தேசிய ஆய்வு மற்றும் அங்கீகார கவுன்சில்) புள்ளிகள் 3.26 பெற்றிருக்கும் கல்லூரிகளில் நிபுணர் குழு ஆய்வு இல்லாமலேயே தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்படும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.
 8. விரைவில் புதிய சூரிய ஒளிக் கொள்கை: அமைச்சர் பி.தங்கமணி:தமிழகத்தில் சூரிய மின் சக்தித் துறைக்கு மேலும் ஊக்கம் அளிக்கும் வகையில் புதிய சூரிய ஒளிக் கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.

23-01-2019
 1. தமிழக அரசின் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, இங்கி லாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடு களைச் சேர்ந்த 5,000-க்கும் அதிகமான முதலீட் டாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
 2. தமிழகத்திலேயே முதல்முறையாக சேலம் பேருந்து நிலையத்தில் பிளாஸ்டிக் மறுசுழற்சி இயந்திரம்: பயன்படுத்துவோருக்கு சலுகைகள் அறிவிப்பு:தமிழகத்தில் முதல்முறையாக பிளாஸ்டிக் மறுசுழற்சி இயந்திரம் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
 3. தமிழக நீதிமன்றங்களில் காணொலிக் காட்சி வசதி தொடக்கம்:தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் அமைக்கப்பட்டுள்ள காணொலிக் காட்சி வசதிகளை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹில ராமாணீ புதன்கிழமை தொடக்கம்.
 4. அண்ணா பல்கலை.க்கு டிஜிட்டல் நூலகம்: முன்னாள் மாணவர்கள் ஏற்பாடு அண்ணா பல்கலைக்கழகத்துக்கு 1958 ஆம் ஆண்டு பிரிவு முன்னாள் மாணவர்கள் ரூ. 10 லட்சம் மதிப்பில் டிஜிட்டல் நூலகத்தை உருவாக்கித் தந்துள்ளனர். 

இந்தியா-24-01-2019
 1. 10% இடஒதுக்கீடு அடிப்படையில் பிப்.1 முதல் பணியிடங்களுக்கு ஆள்தேர்வு: மத்திய அரசு அறிவிப்பு:பொதுப் பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்போருக்கு அளிக்கப்பட்டுள்ள 10 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் வரும் பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி முதல் அனைத்து பணியிடங்களுக்கும் ஆள்கள் தேர்வு.
 2. அந்தமான் தீவில் ‘ஐஎன்எஸ் கொஹசா’ விமானப்படை தளம்:அந்தமானின் வடக்குப் பகுதியில் உள்ள திக்லிபூரை அடுத்த ஷிப் பூரில், கடற்படைக்கு சொந்த மான விமான நிலையம் 2010 முதல் செயல்பட்டு வந்தது. இங்கு பெரும்பாலான வசதிகள் இல்லை.
 3. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் அகமது வானிக்கு "அசோக சக்ரா' விருது:ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின்போது வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் நஸீர் அகமது வானிக்கு (38), "அசோக சக்ரா' விருது வழங்கி கெüரவிக்கப்படுகிறது.
 4. "ரயில் 18' சேவை ஒரு வாரத்தில் தொடங்கும்!:பயணிகள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் "ரயில் 18' விரைவு ரயிலை இயக்குவதற்கு அரசின் பொறியியல் துறை ஆய்வாளர் அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளது.
 5. ரூ.1,600 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் கட்கரி:மகாராஷ்டிரத்தில் ரூ.1,600 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை திட்டங்களுக்கு மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினார்.

23-01-2019
 1. தில்லி செங்கோட்டையில் சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்:சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 122-ஆவது பிறந்ததினத்தையொட்டி, தில்லி செங்கோட்டையில் போஸ் அருங்காட்சியகத்தை பிரதமர் நரேந்திர மோடிதிறந்து வைத்தார்.
 2. 2022-இல் மின்னணு முறையில் வேளாண்மை சந்தை: மத்திய அமைச்சர் தகவல்:2022-ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் உள்ள 22,000 வேளாண் பொருள் சந்தைகளை மின்னணு முறையில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

உலகம்-24-01-2019
 1. மலேசியாவின் புதிய மன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அப்துல்லா சுல்தான் அஹமது ஷா வரும் 31ம் தேதி பதவியேற்க உள்ளார்.
 2. வெனிசூலா எதிர்க்கட்சித் தலைவரை அதிபராக அங்கீகரித்தது அமெரிக்கா:வெனிசூலாவின் இடைக்கால அதிபராக, தம்மை  அந்த நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் ஜுவான் குவாய்டோ அறிவித்துக் கொண்டதை அமெரிக்காவும், பிற முக்கிய தென் அமெரிக்க நாடுகளும் அங்கீகரித்துள்ளன.
 3. பாகிஸ்தான்: நாஸர் ஏவுகணை வெற்றிகர சோதனை:தரையிலிருந்து தரை இலக்குகளைத் தாக்கி அழிக்க வல்ல பாகிஸ்தானின் நாஸர் ஏவுகணை, பயிற்சி நோக்கில் வியாழக்கிழமை வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது.


23-01-2019
 1. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை: சீனா சோதனை:தனது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ஐசிபிஎம்) சீனா சோதனை பரிசோதித்துப் பார்த்ததாக அந்த நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.நிலத்துக்கு அடியே அமைக்கப்பட்டுள்ள சுரங்கத்திலிருந்து, அந்த ஏவுகணை பரிசோதித்துப் பார்க்கப்பட்டதாக அந்த ஊடகம் தெரிவித்தது.ஊடுருவலில் ஈடுபடுபவர்களை அழிப்பதிலும், இதர தாக்குதல்களின்போதும் இந்த ஏவுகணை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டின் தரைப்படையில் இணைக்கப்பட்டுள்ள இந்த ஐசிபிஎம் ஏவுகணை அமெரிக்காவை இலக்காக கொண்டு 12 ஆயிரம் கி.மீ.தூரம் பாய்ந்து சென்று துல்லியமாக தாக்கக்கூடியதாகும். 

வர்த்தகம்-24-01-2019
 1. கோதுமை உற்பத்தி 10 கோடி டன் சாதனை அளவைத் தாண்டும்:நாட்டின் கோதுமை உற்பத்தி நடப்பு ரபி பருவத்தில், முன்னெப்போதும் இல்லாத வகையில் 10 கோடி டன்னைத் தாண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 2. இண்டிகோ சிஇஓ -வாக ருனோஜாய் தத்தா நியமனம்:இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) ருனோஜாய் தத்தா நியமிக்கப்பட்டுள்ளார். நிறுவனத் தின் சர்வதேச விரிவாக்கப் பணி களை இவர் கவனிப்பார். ஐந்து ஆண்டுகளுக்கு இப்பொறுப்பை வகிப்பார் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
 3. யெஸ் வங்கி சிஇஓ ரவ்னீத் கில்:யெஸ் வங்கியின் புதிய தலைமை செயல் அதிகாரியாக ரவ்னீத் சிங் கில் என்பவர் நியமிக்கப் பட்டுள்ளார். தற்போதைய தலைமை செயல் அதிகாரி ராணா கபூருக்குப் பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.


EmoticonEmoticon