Current Affairs Today-2019 in Tamil,
TNPSC, UGC-NET, RRB, IBPS and the Competitive Examination.
நடப்பு செய்திகள்-22-01-2019,
தமிழ்நாடு
- தமிழக காவல்துறை வரலாற்றில் முதன்முதலாக மாணவர் காவல் படை தொடங்கப்பட்டு உள்ளது. இதை சென்னை காவல் ஆணையர் மற்றும் சென்னை ஆட்சியர் தொடங்கி வைத்தனர்.
- தக்கோலம் - அரக்கோணம் இடையே அகல ரயில் பாதை: 25-இல் சோதனை ஓட்டம்தக்கோலம்-அரக்கோணம் இடையே புதிய அகல ரயில் பாதையில் வரும் வெள்ளிக்கிழமை (ஜன.25)அதிக வேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது.
- இந்தியாவின் மிக நீண்ட ரயில்வே சுற்றுப் பாதையாக சென்னை புறநகர் ரயில் மாறுகிறது!இன்னும் 9.5 கி.மீ. நீளப் பாதை அமைந்துவிட்டால் போதும்.. சென்னை புறநகர் ரயில் சேவை ஒரு சுற்றுப் பாதையாக மாறி இந்தியாவிலேயே அதிக நீளம் கொண்ட ரயில்வே சுற்றுப் பாதையாக மாறிவிடும்.
இந்தியா
காபு சமூகத்தினருக்கு 5% உள்ஒதுக்கீடு: ஆந்திர அரசு அறிவிப்பு
உலகம்
- இந்தோனேஷியாவில் சும்பா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.
- ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியல் வெளியீடு:சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், நடிகை உள்பட பல்வேறு பிரிவுகளுக்கான ஆஸ்கர் பரிந்துரை பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியானது.
வர்த்தகம்
எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் புதிய பிரீமியம் வசூல் 32% அதிகரிப்பு
நாட்டின் முன்னணி ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களுள் ஒன்றான எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் புதிய பிரீமியம் வசூல் டிசம்பருடன் முடிவடைந்த ஒன்பது மாத காலத்தில் 32 சதவீதம் அதிகரித்துள்ளது.
விளையாட்டு
ஐசிசி விருதுகள்: மூன்று ஐசிசி விருதுகளை அள்ளிய விராட் கோலி
- 2018-ம் ஆண்டுக்கான ஐசிசியின் ஆண்களுக்கான கிரிக்கெட்டின் ஒருநாள் போட்டிகளின் சிறந்த வீரர் விருது.
- 2018-ம் ஆண்டுக்கான ஐசிசியின்ஆண்களுக்கான கிரிக்கெட்டின் சிறந்த டெஸ்ட் வீரர்,
- 2018-ம் ஆண்டுக்கான ஐசிசியின் சிறந்த வீரருக்கான சர் கர்ஃபீல்டு சோபர்ஸ் விருது
EmoticonEmoticon