தமிழகம்
- விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சியை தனியாக பிரித்து புதிய மாவட்டமாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு.இதோடு சேர்த்து தமிழகத்தில் 33 மாவட்டமாக உயர்கிறது.
- தமிழக கல்வித்துரையில் புதிய திருப்பமாக 9 ம் வகுப்பு பாட புத்தகங்கள் மூன்று பருவமாக இருந்ததை தவிர்த்துவிட்டு தற்போது ஒரே பருவமாக மீண்டும் கொண்டுவந்துள்ளது. ஆனால் 1 முதல் 8 ம் வகுப்பு வரை முப்பருவம் முறை உண்டு.
- மதுபானங்களுக்கு 14.5 சதவிகிதம் வரியை உயர்த்தி தமிழக சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் குடிமகன்கள் அதிர்ச்சியில் உரைந்துள்ளனர்.
- தமிழகத்தில் 100 பிங்க் நிரத்திலான சிறப்பங்காடிகள் திறக்க முதல்வர் உதத்ரவு.இதில் 300 வகையான தரமான கம்பெனி பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்படும்.
இந்தியா:
- ஸ்டெர்லைடே ஆலையை திறக்கலாம் என்ற தீர்ப்பினை சுப்ரீம் கோர்ட் வழங்கி உள்ளது.
- இட ஒதுக்கீடு:பொருளாதாரத்தில் பின்தங்கிய உயா் வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு மசோதா தாக்கல்.
- சி.பி.ஐ. இயக்குநா் அலோக் வர்மா மீதான மத்திய அரசின் நடவடிக்கையை ரத்து செய்த உச்சநீதிமன்றம், அவரை மீண்டும் சி.பி.ஐ. இயக்குநராக பணியாற்றலாம் என்று உத்தரவிட்டுள்ளது.
- செய்திதாள்கள், காகித தாள்கள், மறுசுழற்சி செய்யத்தக்க பிளாஸ்டிக்களில் உணவு பொருட்களை விற்பனை செய்தால் அபராதம் விதிக்கப்படும் என இந்திய உணவு பாதுகாப்பு தர கட்டுப்பாட்டு ஆணையம் எச்சரித்துள்ளது.
- குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானை சேர்ந்த முஸ்லிம்கள் அல்லாதவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை! - இந்து, ஜைன, கிறிஸ்தவ, புத்த, பார்சி மதத்தினை சேர்ந்தவர்களுக்கு இந்தியக்குடியுரிமை அளிக்கும் வகையில், குடியுரிமைச்சட்டம் 1955-ல் திருத்தம் செய்யப்பட்டு மக்களவையில் மசோதா நிறைவேற்றம்.
- அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் பெயர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் பாப்தே, ரமணா, யு.யு.லலித், சந்திரசூட் இடம் பெற்றுள்ளனர்.
- அமெரிக்காவின் மான்சான்ட்டோ நிறுவனம் இந்தியாவில் விற்கும் மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைக்கு காப்புரிமைத் தொகைக்கு உரிமை கொண்டாடலாம் என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
- டிஜிட்டல் பேமென்ட் ஊக்குவிக்க நந்தன் நிலகேனி தலைமையில் உயர்நிலைக் குழவை ரிசர்வ் வங்கி நியமித்துள்ளது.இவர்தான் ஆதார் கார்ட ஆரம்ப நிலை தலைவர் இருந்தவர். இதில் டிஜிட்டல் பேமெண்டு கால இடைவேளைகள், இடற்பாடுகள், அதன் பாதுகாப்புத்தன்மை பற்றி பணிகளை மேற்கொளவர். இதல் முன்னால் ரிசர்வ் வங்கி துணை கவர்னர் ஹெச்.ஆர்.கான், விஜயா வங்கியின் முன்னால் நிர்வாக இயக்குநர், தலைமை செயல் அதிகாரி கிஷோர் சான்ஸி, தகவல் தொழில்நுட்பதுறை முன்னால் செயலர் அருணா சர்மா மற்றும் ஹைத்ராபாத் ஐ.ஐ.எம் தலைமை புத்தாக்க அதிகாரி சஞ்சய் ஜெயின் ஆவார்கள்.
- டி.என்.ஏ(பயன் மற்றும் பயன்பாடு) தொழில்நுட்ப ஒழுங்கு மசோதா மக்களவையில் குரல் ஓட்டு மூலம் நிரைவேற்றப்பட்டது. இத்திட்டம் பாதிக்கிப்பட்டவர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்கள், சந்தேகிப்படும் நபர்கள், விசாரணை கைதிகள்,காணாமல் போனலர்கள் பற்றி அறய இது உதவும்.
உலகம்:
- உலக வங்கியின் தலைவராக இருக்கும் ஜிம் யாங் கிம் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இதன்மூலம் புதிய தலைவரை டிரம்ப் தன் விருப்பத்துகேற்ப நியமிக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.
- ஐஎம்எப் பொருளாதார நிபுணராக இந்தியா வம்சாவளி பெண் பதவி ஏற்பு தற்போது இந்த பதவியில் இருந்த ஓப்ஸ்ட்பெல்ட் என்பவர் கடந்த டிச.,31ல் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, மைசூருவில் பிறந்து அமெரிக்காவில் வசிக்கும் கீதா கோபிநாத் (47) என்பவர், ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நிதியத்தின் தலைமை பொருளாதார அலுவலராக நியமிக்கப்பட்டார். இந்த பதவிக்கு வரும் முதல் பெண்ணான இவர் பதவி ஏற்றுக்கொண்டார்.
விளையாட்டு:
- ஐ.சி.சி.டெஸ்ட் தரவரிசை; கோஹ்லி மீண்டும் முதலிடம்
வர்த்தாகம்:
விருதுகள்:
- பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு அரிவராசனம் விருது கேரள அரசு அறிவிப்பு ஒவ்வொரு ஆண்டும் அய்யப்பன் பற்றிய சிறப்புகளைப் பரப்பும் கலைஞர்களைக் கவுரவப்படுத்தும் வகையில் அரிவராசனம் விருது வழங்கி வருகிறது.
EmoticonEmoticon