Current Affairs Today: 05-01-2019 in Tamil

Current AffairsToday-2019 in Tamil,
TNPSC, UGC-NET, RRB, IBPS and the competitive Examination


நடப்பு செய்திகள்-05-01-2019 
தமிழகம்

 1. அரசு ஈ.சேவை மையங்களில் வில்லங்க சான்று பெறும் வசதி:பத்திரபதிவுத்துறை.
 2. தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி கோரிக்கை பரிசீலனை செய்ய -உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 3. 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து 10 தொழிற்சங்கங்கள் வரும் 8,9 ஆகிய தேதிகளில் தேசிய அளவிலான வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.8,9 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை
 4. சர்வதேச உவர்நீர் மீன்வளர்ப்பு குறித்த மாநாடு சென்னையில் வரும் ஜன.22-ஆம் தேதி தொடங்கவுள்ளது.
 5. அதிவேகம் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய "தேஜஸ்' ஐ.சி.எஃப் தயாரித்தது ரயில் சோதனை ஓட்டம் சனிக்கிழமை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. சோதனை ஓட்டத்தின்போது, இந்த ரயில் மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டது.
 6. சென்ட்ரலில் இருந்து சனிக்கிழமை காலை 10 மணிக்கு புறப்பட்டு பேசின்பாலம், ராயபுரம், கடற்கரை, எழும்பூர் வழியாக விழுப்புரத்தை மதியம் ஒரு மணிக்கு சென்றடைந்தது. பின்னர் விழுப்புரத்தில் இருந்து 1.45 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமை மாலை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தது. சோதனை ஓட்டத்தின்போது, இந்த ரயில் 110 கி.மீ. வேகம் வரை இயக்கி பார்க்கப்பட்டது. ரயிலில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளும் சோதித்து பார்க்கப்பட்டது.
 7. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் நுண் கதிரியல்.
 8. அங்கன்வாடிகளில் துவக்கப்பட உள்ள, எல்.கே.ஜி., வகுப்புகளுக்கு, ஆசிரியைகளை மட்டும் நியமிக்க, தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
 9. அனைத்து அரசு பள்ளிகளிலும், 'மொபைல் ஆப்' வாயிலாக, வருகை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
 10. நியூஸ் 18 தமிழ்நாடு' தொலைக்காட்சியின் முதன்மை ஆசிரியர், குணசேகரனுக்கு, 'ராம்நாத் கோயங்கா இதழியல் சிறப்பு விருது' வழங்கப்பட்டது.
 11. இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனர், ராம்நாத் கோயங்கா நினைவுகளை போற்றும் வகையில், 2004 முதல், ஒவ்வொரு ஆண்டும், ஊடகத்துறை சாதனையாளர்களுக்கு, 'ராம்நாத் கோயங்கா இதழியல் சிறப்பு விருது' வழங்கப்படுகிறது.பத்திரிகையாளர்களின் நேர்மையான, மிகச் சிறப்பான பங்களிப்பை போற்றும் வகையில், இந்த விருது வழங்கப்படுகிறது.
 12. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதிக்குள், வனத்துறையினருடன் இணைந்து சுற்றுலா செல்லும், 'வனபூரணி' திட்டத்தில், கடந்தாண்டு, 7,500 பேர் பயணித்துஉள்ளனர்.
 13. :ராமேஸ்வரம் அருகே பாம்பன் ரயில் துாக்கு பாலத்தில் பணிகள் முடிந்ததும் ஜன.,16ல் ரயில் போக்குவரத்து துவங்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது.டிச.,4ல் பாம்பன் ரயில் துாக்கு பாலம் சேதமடைந்தததால் கடந்த 31 நாட்களாக துாக்கு பாலத்தில் புதிய இரும்பு பிளேட் பொருத்தி வலுசேர்த்தனர். 
 14. அஞ்சல் துறையின் 'இந்தியா போஸ்ட் பேமன்ட்' வங்கியில் தமிழகத்தில் கடந்த ஆண்டு 1 லட்சத்து 11 ஆயிரத்து 180 கணக்குகள் துவக்கப்பட்டுள்ளது.கிராம மக்களுக்கு வங்கி சேவைகள் எளிதாக சென்று சேரும் வகையில் 2018 செப்.,1ல் 'இந்தியா போஸ்ட் பேமன்ட் பேங்க்' சேவையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.


இந்தியா:

 1. மகளிருக்கு வட்டியில்லா கடன்: ஒடிஸா அரசு அறிவிப்பு
 2. கேட் நுழைவுத் தேர்வில் 11 பேர் சென்டம்: தமிழகத்தை சேர்ந்த 2 மாணவர்கள் 99.99 சதவீதம் மதிப்பெண் பெற்று சாதனை
 3. அகஸ்தியர்கூட மலைக்குப் பெண் செல்ல கேரள உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இதையடுத்து, அங்கு டிரக்கிங் செல்ல ஆன்-லைன் மூலம் முன்பதிவு செய்யும் வசதி நேற்று தொடங்கப்பட்டுள்ளது.
 4. இந்திய ரயில்வே, தனது பயணங்களை அதிகப் பாதுகாப்பானதாக மாற்ற ஏராளமான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. முன்னதாக 139 என்ற எண்ணை அழைத்து ரயில் எங்கே வந்துகொண்டிருக்கிறது என்ற தகவலைப் பயணிகள் பெற்றுக்கொண்டிருந்தனர். ஆனால் ஒரே எண்ணை, ஒரே நேரத்தில் ஏராளமானோர் அழைத்தால், சர்வர் பிரச்சினை ஏற்பட்டு 139-ஐ உடனடியாகத் தொடர்பு கொள்ள முடியாத நிலை இருந்தது.தற்போது அனைத்துமே இணைய மயமாகி விட்ட சூழலில், ரயில்வே வாட்ஸ் அப் மூலம் ரயில் பயண சேவையை லைவ் ஆக உடனுக்குடன் அளிக்க ஆரம்பித்துள்ளது.முதலில் 7349389104 என்ற எண்ணை மொபைலில் சேமித்துக் கொள்ளுங்கள்.வாட்ஸ் அப் செயலிக்குச் செல்லுங்கள்.வாட்ஸ் அப்பில் நீங்கள் சேமித்து வைத்துள்ள 7349389104 எண்ணிற்கு நீங்கள் தகவல் பெற விரும்பும் ரயிலின் எண்ணை அனுப்புங்கள். அடுத்த 2 நொடிகளில் உங்கள் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வரும்.அதில் ரயில் எண், அதன் பெயர், எந்தத் தேதியில் ரயில் கிளம்பியது, எந்த ரயில் நிலையத்தைத் தாண்டியுள்ளது, அடுத்த ரயில் நிலையத்தை எப்போது வந்தடையும் உள்ளிட்ட தகவல்கள் அடங்கி இருக்கும்.
 5. ஆதார்அட்டையுடன் ஓட்டுனர் உரிமம் விரைவில் இணைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறுகையில், எந்த ஒரு தனிநபர் குறித்த விவரங்களையும் தெரிந்து கொள்வதற்கு ஆதார் எண் சமூக ரீதியான மிகப் பெரிய மாறுதலை ஏற்படுத்தி உள்ளது. ஆதார் எண்ணுடன் வாகனர் ஓட்டுனர் உரிமம் இணைக்கப்பட உள்ளது. இதற்கான மசோதா பார்லி.,யில் நிலுவையில் உள்ளது.
உலகம்:

 1. பாகிஸ்தான் பெஷாவர் நகரில் உள்ள பழங்கால இந்து மத தலமான பஞ்ச தீர்த்தம் தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிப்பு.
 2. சீனா- அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை (நாளை) ஜன.7, 8 தேதிகளில் சீன தலைநகர் பீஜிங்கில் நடக்கிறது.
 3. யேமனில் சண்டை நிறுத்தம் தொடர்பான நடவடிக்கைகளை துரிதப்படுத்த, அந்த நாட்டின் ஹுதைதா நகருக்கு யேமனுக்கான ஐ.நா. சிறப்பு தூதர் மார்டின் கிரிஃபித் சனிக்கிழமை வந்தார்.
 4. வங்கக் கடலில் உருவாகியுள்ள பபுக் புயல் தாக்கத்தால் தாய்லாந்தில் 3 பேர் உயிரிழந்தனர். சுமார் 34 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


விளையாட்டு:

 1. 6வது ப்ரோ கபடி லீக் தொடரில் இறுதிப்போட்டியில் பெங்களுர் புல்ஸ் அணி 38-33 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத் பார்ச்சுன் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது.
 2. மராட்டிய ஓபன் டென்னிஸ்: புனேயில் நடந்த போட்டியில் இந்திய இணையான போபண்ணா-திவிஜசரன் இணை இங்கிலாந்தின் லுக் பாம்பிரிட்ஜ்-ஜானி ஓமரா இணையுடன் விளையாண்டு 6-3, 6-4 என்ற நேர் செட்டில் எளிதில் வெற்றி பெற்றது.
 3. தேசிய பள்ளிகள் விளையாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோர் 64-ஆவது தேசிய டேபிள் டென்னிஸ் போட்டியில் தமிழக அணி 1 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை வென்றது.
 4. 30 ஆண்டுகளுக்குப்பின் உள்நாட்டில் 'பாலோஆன்' பெற்றது ஆஸி. 300 ரன்களில் ஆல்அவுட்: குல்தீப் அபாரம்

வர்த்தாகம்

 1. ரிசர்வ் வங்கி அன்னிய செலாவணி கையிருப்பு 12 கோடி டாலர் உயர்வு.
 2. டிசம்பர் இறுதி நிலவரப்படி, பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.51,553 கோடி கூடுதல் மூலதானம்.
 3. நடப்பு நிதியாண்டில் மறைமுக வாரியாக ரூ.11.15 லட்சம் கோடி வருவாய் ஈட்ட மத்திய அரசு இலக்கு.
 4. வெளிநாட்டு கடன்பத்திர விற்பனை மூலம் ரூ.10,500 கோடியை (150 கோடி டாலர்) திரட்ட பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) திட்டமிட்டுள்ளது.EmoticonEmoticon