Current Affairs Today: 19-01-2019 in Tamil

Current Affairs Today-2019 in Tamil,
TNPSC, UGC-NET, RRB, IBPS and the Competitive Examination.


நடப்பு செய்திகள்-19-01-2019,

தமிழ்நாடு
  1. உணவு பூங்கா திட்டம் :தமிழகத்தில், ஒருங்கிணைந்த உணவுப் பூங்கா அமைப்பது தொடர்பாக, அதிகாரிகளுடன், முதல்வர் பழனிசாமி, நேற்று ஆலோசனை நடத்தினார்.வேளாண் விளைபொருட்களை சந்தைப்படுத்துவதற்காக, திண்டுக்கல், தேனி, விருதுநகர், திருநெல்வேலி, விழுப்புரம், கடலுார், சேலம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ஈரோடு ஆகிய, 10 நகரங்களில், மெகா உணவு பூங்காக்களை, மத்திய அரசு அமைக்க உள்ளது.தலா, 10 ஏக்கரில், மெகா உணவு பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. இங்கு, குளிர்பதன கட்டமைப்புகள், வணிகம் செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
  2. மண்வளம் அறியும் கருவியில் ஜி.பி.எஸ்., : 'சிக்ரி':மத்திய மின்வேதியியல் ஆய்வகமான 'சிக்ரி' விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள மண்வளம் அறியும் கருவியில், கூடுதலாக ஜி.பி.எஸ்., வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது.மண்ணின் வளம் அறிய விவசாயிகள் வேளாண்துறை அலுவலகத்துக்கு செல்வதுடன், முடிவுக்காக பல நாட்கள் காத்திருப்பர். அதனால், விவசாயிகளே விளைநிலத்தில் மண்ணின் கார, அமில தன்மை, மின்கடத்தும் திறனை கண்டறியும் வகையில், மண்வளம் அறியும் கருவியை சிக்ரி விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.
  3. தமிழகத்தின் பாரம்பரிய கலைகளை பறைசாற்றும் ‘வீதி விருது விழா’:சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில் லயோலா மாணவர் அரவணைப்பு மையம், லயோலா கல்லூரி மற்றும் மாற்று ஊடக மையம் இணைந்து நடத்தும் ‘வீதி விருது விழா’ நேற்று காலை தொடங்கியது. இன்று மாலையுடன் இந்த விழா நிறைவடைகிறது. விழாவில் மரபுவழி கோலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மருத்துவ முகாம், மரபுவகை உணவுகள், கலைஞர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகள் உள்ளிட்டவை குறித்து விளக்குவதற்கு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. 
  4. உலக சாதனை ஜல்லிக்கட்டுக்காக விராலிமலையில் விரிவான ஏற்பாடுகள்:விராலிமலை அம்மன் குளம் திடலில் மக்கள் நல்வாழ் வுத் துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கரின் ஏற்பாட்டில் இன்று நடைபெற உள்ள ஜல்லிக் கட்டை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் காலை 7 மணிக்கு தொடங்கி வைக்க உள்ளனர். 1353 காளைகள் பங்கேற்பு

இந்தியா
  1. எச்.ஏ.எல்., மூலம் 8 விமானங்கள் :பொதுத்துறையை சேர்ந்த, எச்.ஏ.எல்., எனப்படும், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து, 8 சுகோய் ரக போர் விமானங்களை வாங்க, இந்திய விமானப் படை முடிவு செய்துள்ளது.

உலகம்
  1. அமெரிக்காவில் சீக்கியர்களுக்கு எதிராக இருந்த  கொள்கைகளுக்கு எதிராக பிரசாரம் செய்த இந்திய அமெரிக்கரும், சீக்கியருமான குரிந்தர் சிங் கல்சாவுக்கு "ரோசா பார்க்ஸ்' விருது வழங்கி அந்நாட்டு நாளிதழ் கெளரவித்தது.
  2. உலகின் வயதான மனிதர்:25.07.1905 ல், அவர் பிறந்ததாக, கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. டோக்யாவில் இருந்து 900 கி.மீ., தூரத்தில் உள்ள ஹொக்கைடோ தீவில் பிறந்த நோனகாவுடன் 6 சகோதரர்களும், ஒரு சகோதரியும் உடன் பிறந்தனர். அவருக்கு 1931 ல் திருமணம் நடந்தது. 5 குழந்தைகள் உள்ளனர். வயதான காலத்தில் நோனாகா, டிவியில் சுமோ குத்துச்சண்டை போட்டிகளை ரசித்தும், இனிப்புகளை ருசித்ததாக அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.
  3. ஜப்பானில் தான் அதிகம்பேர் நீண்ட வயது வாழ்ந்து வருகின்றனர். அந்நாட்டை சேர்ந்த ஜிரோயிமோன் என்பவர் 116 வயதில் 2013ல் காலமானார். இவருக்கு முன், பிரான்சின், ஜியானே லூயிசி கால்மென்ட் என்பவர் ,122 வயதில், 1997 ம் ஆண்டு காலமானதாக கின்னஸ் புத்தகத்தில் உள்ளது.


வர்த்தகம்
  1. நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 39,735 கோடி டாலராக அதிகரிப்பு நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜனவரி 11-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 39,735 கோடி டாலராக (ரூ.27.81 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது.
EmoticonEmoticon