Current Affairs Today: 18-01-2019 in Tamil

Current Affairs Today-2019 in Tamil,
TNPSC, UGC-NET, RRB, IBPS and the Competitive Examination.


நடப்பு செய்திகள்-18-01-2019,
தமிழ்நாடு
  1. வானூர்தி தொழில் கொள்கைக்கு அனுமதி: தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
  2. தமிழகம், குஜராத்தில் புதிதாக கடற்படை விமானப் பிரிவுகள்:மத்திய அரசு ஒப்புதல்
  3. ஓய்வூதியதாரருக்கான தனி இணையதளம் www.tnpensioner.tn.gov.in: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்
  4. ஆடுதுறை 53 புதிய நெல் ரகம் அறிமுகம்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள ஆடுதுறை நெல் ஆய்வு நிலையத்தில் ஆடுதுறை 53 (ஏடிடீ 53) என்ற புதிய நெல் ரகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியா
  1. தமிழகம், குஜராத்தில் புதிதாக கடற்படை விமானப் பிரிவுகள்:மத்திய அரசு ஒப்புதல்
  2. இளம் விஞ்ஞானிகள் திட்டம்: இஸ்ரோவில் 108 மாணவர்களுக்கு ஆய்வுப் பயிற்சி: கே.சிவன்
  3. யுரேனியம் கொள்முதல்: உஸ்பெகிஸ்தானுடன் ஒப்பந்தம்
  4. இந்திய அணு உலைகளுக்கான எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக, உஸ்பெகிஸ்தானில் இருந்து யுரேனியம் தாதுவை நீண்ட கால அடிப்படையில் இறக்குமதி செய்வது குறித்து அந்நாட்டுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.காந்திநகரில் வெள்ளிக்கிழமை நடந்த எழுச்சிமிகு குஜராத் மாநாட்டில் உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்ஸியோயேவ் கலந்து கொண்டார். மிர்ஸியோயேவ் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் யுரேனிய இறக்குமதிக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
  5. உச்சநீதிமன்ற நீதிபதிகளாக தினேஷ் மகேஸ்வரி, சஞ்சீவ் கன்னா ஆகியோர் வெள்ளிக்கிழமை பதவியேற்றனர்.
  6. விரைவில் இடி, மின்னல் குறித்தும் முன்னெச்சரிக்கை வெளியிடப்படும்: வானிலை ஆய்வு மையம் தகவல்:இடி, மின்னல் தாக்குதல் குறித்து மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் வகையில் புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டு வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் இயற்கை பேரிடரால் ஏற்படும் அழிவு குறித்தும், அதை எதிர்கொள்வது குறித்தும் சர்வதேச மாநாடு 3 நாள்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் தொடக்க விழா வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. அதில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் பொது இயக்குநர் கே.ஜே. ரமேஷ், ஒடிஸா அமைச்சர்கள், ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

உலகம்
  1. ஜப்பான்: செயற்கை விண்கல் மழை: தனியார் நிறுவனம் திட்டம் விண்கற்கள் பூமியில் விழும்போது, அவை பல்வேறு துண்டுகளாக சிதறி எரிந்து விழும் கண்கொள்ளா காட்சியை ஹிரோஷிமா நகர வான்வெளியில் செயற்கையான முறையில் உருவாக்க ஜப்பானைச் சேர்ந்த தனியார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.இதற்காக, சிறிய வகை செயற்கைக்கோளை ராக்கெட் மூலம் அந்த நிறுவனம் வெள்ளிக்கிழமை விண்ணில் செலுத்தியது.விண்கல் பூமியில் விழும் நிகழ்வு செயற்கையான முறையில் நடத்தப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
  2. ஸ்வீடன்: ஸ்டெஃபான் லாஃப்வென் மீண்டும் பிரதமராகத் தேர்வு ஸ்வீடனில் நிலவி வந்த நான்கு மாத அரசியல் குழப்பத்துக்குப் பிறகு, அந்த நாட்டின் புதிய பிரதமராக ஸ்டெஃபான் லாஃப்வென் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டு:
  1. இரட்டை தொடர் வெற்றி: வரலாறு படைத்தது இந்தியா 3-ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் 7 விக்கெட்  வித்தியாசத்தில் ஆஸி.யை நொறுக்கியது ஆஸ்திரேலிய மண்ணில் முதன்முறையாக தலா 2-1 என  டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்களை கைப்பற்றி இந்திய அணி  அபார சாதனை படைத்துள்ளது. மெல்போர்னில் நடைபெற்ற இறுதி மற்றும் 3-ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸி.யை நொறுக்கியது.









EmoticonEmoticon