Current Affairs Today: 12-01-2019 in Tamil

Current Affairs Today-2019 in Tamil,
TNPSC, UGC-NET, RRB, IBPS and the Competitive Examination.

நடப்பு செய்திகள்-12-01-2019,

தமிழகம்
  1. சிப்ஸ், சாக்லெட் பாக்கெட்களுக்கும் தடை - அமைச்சர் அறிவிப்பு:பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் சிப்ஸ், சாக்லெட் போன்றவைகளுக்கு விரைவில் தடை ஏற்படுத்தப்படும்’  என்று அமைச்சர் கருப்பணன் அறிவித்தார்.சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன், ஈரோட்டில் நிருபர்களிடம் ேநற்று கூறியதாவது:
  2. திருவண்ணாமலை மாவட்டத்துக்கு மத்திய அரசு விருது அறிவிப்பு:மத்திய அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதாக திருவண்ணாமலை மாவட்டத்துக்கு விருது அறிவிக்கப்பட்டது. பெண் குழந்தைகளை பாதுகாப்போம், படிக்க வைப்போம் என்ற திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதாக விருது அறிவிக்கப்பட்டது.  ஜன. 24-ல் டெல்லியில் நடைபெறும் விழாவில் தி.மலை ஆட்சியர் கந்தசாமி மத்திய அரசின் விருதை பெறுகிறார். 
இந்தியா
  1. அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஹர்ஷ்வர்தன் பொறுப்பேற்பு:அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக பணியாற்றி வந்த நவ்தேஜ் சர்னாவின் பதவிக்காலம் கடந்த 31-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, இந்தப் பதவிக்கு ஐஎப்எஸ் அதிகாரி ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லாவை மத்திய அரசு அண்மையில் நியமித்தது. அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
  2. ராஜஸ்தான் மாநிலம், பிகானீரில் சர்வதேச ஒட்டக விழா சனிக்கிழமை தொடங்கியது.
  3. சென்னை-பெங்களூரு விரைவு ரயில் மைசூரு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  4. உஸ்பெகிஸ்தானில் சுஷ்மா ஸ்வராஜ்: மத்திய ஆசிய நாடான உஸ்பெகிஸ்தானுக்கு 2 நாள் பயணமாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சென்றார்.
  5. தேர்தல் அதிகாரிகளை கண்காணிக்க செயலி: தேர்தல் அதிகாரிகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்கு புதிய செயலியை சத்தீஸ்கர் மாநில தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது.
  6. லடாக்கில் உலகின் மிகப்பெரிய சோலார் திட்டம்: எல்லை பகுதியான லடாக்கில் உலகின் மிகப் பெரிய சோலார் திட்டத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும் 12,750 டன் கார்பனை கட்டுப்படுத்தவும், டீசல் சார்ந்த ஜெனரேட்டர்களின் பயன்படாட்டை குறைக்கவும் கார்கிலுக்கு கிழக்கே 200 கி.மீ., தூரம் வரை சோலார் திட்டத்தை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது சீனாவில் உள்ள டெங்கர் பாலைவன சோலார் பூங்காவே உலகின் மிகப் பெரிய சோலார் மின்உற்பத்தி திட்டமாக கருதப்படுகிறது. இதில் 1547 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
  7. லடாக்கில் 5000 மெகாவாட் மின்திறன் கொண்ட சோலார் திட்டத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் ரூ.45000 கோடி முதலீட்டில் அமைக்கப்பட உள்ள இந்த திட்டம் 2023 ம் ஆண்டில் நிறைவடைய உள்ளது.
  8. சீக்கிய குரு பிறந்த நாளை முன்னிட்டு நினைவு நாணயம் வெளியிட்டார் பிரதமர் மோடி: சீக்கிய குரு கோபிந்த் சிங்கின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவு நாணயம் ஒன்றை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டு உள்ளார்.
  9. நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.
  10. சார்தாம் திட்டம்: பத்ரிநாத் உள்பட 4 புனித தலங்களுக்கு செல்லும் சார்தாம் திட்டத்தை தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  11. சீக்கிய மத குரு பெயரில் நாணயம் வெளியீடு:டெல்லியில் சீக்கிய மத குரு கோவிந்த் சிங் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது உருவம் பதித்த நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.
உலகம்
  1. ஹெச் 1 பி விசா வைத்திருப்பவர்களுக்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு

 விளையாட்டு
  1. ஒரு நாள் ஆட்டத்தில் தோனி 10,000 ரன்கள்: இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், மூத்த வீரருமான எம்.எஸ்.தோனி ஒரு நாள் ஆட்டத்தில் (50 ஓவர்கள்) 10 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.
  2. சிட்னி டென்னிஸ் - குவித்தோவா சாம்பியன்:ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சிட்னி சர்வதேச டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், செக் குடியரசு வீராங்கனை பெத்ரா குவித்தோவா சாம்பியன் பட்டம் வென்றார்.இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்தியுடன் நேற்று மோதிய குவித்தோவா 1-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். பின்னர் சுதாரித்துக் கொண்டு விளையாடிய அவர், பார்தியின் கடும் போராட்டத்தை முறியடித்து 1-6, 7-5, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வென்று கோப்பையை முத்தமிட்டார். சிட்னி தொடரில் அவர் 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
  3. ரிச்சர்ட்சை முந்தினார் ரோகித்:ஆஸ்திரேலிய மண்ணில் அதிக சதம் விளாசிய வெளிநாட்டு வீரர்கள் பட்டியலில் இந்தியாவின் ரோகித் ஷர்மா முதலிடம் பிடித்துள்ளார். இதுவரை 22 சதம் விளாசியுள்ள அவர், ஆஸ்திரேலியாவில் மட்டும் 4 சதங்களை அடித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் நட்சத்திரம் விவியன் ரிச்சர்ட்ஸ் 3 சதம் அடித்ததே முந்தைய சாதனையாகும். அதை ரோகித் நேற்று முறியடித்தார். இந்திய அணி கேப்டன் கோஹ்லி உட்பட 9 வீரர்கள் தலா 2 சதம் அடித்துள்ளனர்.

வர்த்தகம்:
  1. 268 கோடி டாலர் அதிகரிப்பு - அந்நிய செலாவணி கையிருப்பு அபாரம்:அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த சில மாதங்களில் முதல் முறையாக அபார வளர்ச்சியை எட்டியுள்ளது. கடந்த 4ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் கையிருப்பு 268 கோடி டாலர் உயர்ந்து 39,608.4 கோடி டாலராக அதிகரித்துள்ளது. 



EmoticonEmoticon