Current Affairs Today: 10-01-2019 in Tamil

Current Affairs Today-2019 in Tamil,
TNPSC, UGC-NET, RRB, IBPS and the Competitive Examination.

நடப்பு செய்திகள்-10-01-2019,

தமிழ்நாடு
 1. இணைய வழியில் சம்பளப் பட்டியல் தாக்கல் செய்யும் புதிய திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்.
 2. ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கு: தமிழக அரசு
 3. தமிழகத்தில் 77 ஆயிரம் பெண்களுக்கு தலா 50 நாட்டுக் கோழிகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
 4. பிரதமர் அறிவித்த, 59 நிமிட துரித கடன் திட்டத்தில், திருப்பூர் மாவட்டத்தில், 102 கோடி ரூபாய்க்கு தொழிற்கடன் வழங்கப்பட்டுள்ளது.
 5. ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து ஆலந்தூர், பரங்கிமலை, நந்தம்பாக்கம், மணப்பாக்கம் போன்ற பகுதிகளுக்கு செல்ல எலக்ட்ரிக் ஆட்டோ சேவை துவக்க விழா நேற்று காலை ரயில் நிலைய வளாகத்தில்  நடந்தது.மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர் நரசிம்ம பிரசாத், நம்ம ஆட்டோ திட்ட இயக்குநர் மஞ்சு மேனன் ஆகியோர் கொடியசைத்து எலக்ட்ரிக் ஆட்டோ சேவையை துவக்கி வைத்தனர்.
 6. தமிழக கேரளா எல்லையில் உள்ள சிவ பார்வதி ஆலயத்தில் பத்து கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 111.2 அடி உயரம் கொண்ட சிவலிங்கம் உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம் என இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டில் இடம் பிடித்தது.
 7. ஸ்டாலினுக்கு 'சிறந்த மனிதர்' விருது: "இந்திய அரசால் 2002 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட 'ப்ரவசி பாரதிய திவாஸ்' அமைப்பின் சார்பில், கேரளாவில் 'ப்ரவசி பாரதிய நாள் விழா' நடத்தி, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9 ஆம் நாளன்று, நம் நாட்டின் பொருளாதார மற்றும் சமுதாய முன்னேற்றத்திற்கு பாடுபடும் உலகம் முழுவதுமுள்ள என்ஆர்ஐ  எனப்படும் அயலக இந்தியர்களில் சிறந்தவர்களையும் - இந்தியாவில் சமுதாயத்தில் மற்றும் அரசியலில் சிறந்து விளங்குபவர்களையும் தேர்ந்தெடுத்து, அவ்விழாவில், அவ்வாண்டின் 'சிறந்த மனிதர்' என்ற விருது வழங்கப்பட்டு வருகிறது.அதன் தொடர்ச்சியாக, கேரள மாநிலம், திருவனந்தபுரம், பாளையம், வி.ஜே.டி. அரங்கத்தில், வியாழக்கிழமை நடைபெற்ற 'ப்ரவசி பாரதிய நாள் விழா' நடத்துவோர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, 'சிறந்த மனிதர்' விருதினை கேரள மாநில ஆளுநர் நீதிபதி பி.சதாசிவம் வழங்கிட, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பாக, அமைப்புச்  செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி பெற்றுக்கொண்டார்.
 8. 77 ஆயிரம் கிராமப்புற ஏழைப் பெண்கள் பயன்பெறும் தலா 50 நாட்டுக் கோழி அசில் இன நாட்டுக் கோழிகள் மற்றும் அவற்றின் பாதுகாப்புக்கு கூண்டு வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைக்கும் அடையாளமாக 5 பயனாளிகளுக்கு நாட்டுக் கோழி கள் மற்றும் கூண்டுகளை வழங்கி முதல்வர் பழனிசாமி நாட்டுக் கோழி வளர்ப்புத் திட்டம்: முதல்வர் பழனிசாமி சென்னையில் தொடங்கிவைத்தார்.
இந்தியா
 1. சிபிஐ இயக்குனர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, தீயணைப்புத்துறை மற்றும் ஊர்காவல்படை இயக்குனராக அலோக் வர்மா நியமிக்கப்பட்டார்.
 2. ரூ.40 லட்சம் வரை வருவாய் ஈட்டும் சிறுதொழில்களுக்கு வரி விலக்கு: ஜிஎஸ்டி வர்த்தக வரம்பு உயர்வு.
 3. முத்தலாக் தடை காலாவதி ஆனதால் மீண்டும் முத்தலாக் தடை அவசர சட்டம்: அமைச்சரவை ஒப்புதல்

உலகம்
 1. சர்வதேச நாடுகளின் விமர்சனத்தையும் மீறி வெனிசூலா அதிபராக, நிக்கோலஸ் மடூரோ வியாழக்கிழமை இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
 2. காங்கோ குடியரசில் கடந்த மாதம் 30-ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில், எதிர்க்கட்சித் தலைவர் ஃபெலிக்ஸ் ஷிசேகெடி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 3. நிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சீன ரோபோ 5 நாட்கள் துாக்கத்திற்குப்பின் நேற்று மீண்டும் பணிகளை துவங்கியது.நிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்ய சீனா ‛ரேபிட்2' ரோபோ வை அனுப்பியுள்ளது. 140 கிலோ எடை கொண்ட இந்த ரோபோ நிலவின் மறுபக்கத்தில் கடந்த 3-ம் தேதி இறங்கியது. குறிப்பிட்ட சில சூழல்களில் அது தனது இயக்கத்தை நிறுத்திக்கொள்ளும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் நிலவின் வெப்பநிலை கடுமையாக அதிகரித்தது. 200 டிகிரி செல்சியசுக்கும் அதிகமானதால் ரேபிட்2 தனது இயக்கத்தை நிறுத்திக்கொண்டது. 
 4. பூமியிலிருந்து 150 கோடி ஒளியாண்டுகள் தூரத்தில் இருந்து வேற்றுகிரகவாசிகள் அனுப்பிய ரேடியோ சிக்னல் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வெல்ஸ், கனடா மற்றும் பல்வேறு இடங்களில் நவீன ரேடியோ தொழில் நுட்ப கருவிகளின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.நாடிக்கு 3 லட்சம் கி.மீ., வேகத்தில் 150 கோடி ஒளி ஆண்டுகள் பயணித்து, இந்த மர்ம ரேடியோ சிக்னல் வந்தது கண்டறியப்பட்டுள்ளது.
விளையாட்டு:
 1. சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனத்தின் தரவரிசைப் பட்டியலில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனை அந்தஸ்தை பெற்றுள்ளார் இந்தியாவின் மேரி கோம்.
 2. கிராண்ட்ஸ்லாம் பந்தயங்களில் ஒன்றான ஆஸி. ஓபன் டென்னிஸ் போட்டியின் தரவரிசையில் ஜோகோவிச், சிமோனா ஹலேப் ஆகியோர் முதலிடம் பெற்றுள்ளனர்.
 3. ஆசிய கால்பந்து: இந்தியா தோல்வி ஆசிய கால்பந்து போட்டி 2019-இன் ஒரு பகுதியாக அபுதாபியில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற குரூப் ஏ பிரிவு ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஐக்கிய அரபு அமீரக நாடுகளிடம் 2-0 என தோல்வி அடைந்த்து.
வர்த்தகம்
 1. விமான பயணிகளுக்கு ₹50 லட்சம் இலவச காப்பீடு அளிக்க அளிக்க ஐஆர்சிடிசி முடிவு செய்துள்ளது. அடுத்த மாதம் முதல் இது அமலுக்கு வருகிறது.
 2. டெபிட், கிரெடிட் கார்டு மூலம் பணம் திருடுபோவதை தடுக்க புது டெக்னிக்:இதை போக்க புதிய தொழில்நுட்பத்தை ரிசர்வ் வங்கி செயல்படுத்த உள்ளது. அதாவது, வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்துள்ள டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டில் உள்ள எண்ணுக்கு பதிலாக புதிய எண் வழங்கப்படும். இதை பயன்படுத்தி எந்த இணையதளத்திலும் தாராளமாக பயன்படுத்தலாம். வெளிநாடு செல்லும்போதும் இந்த ’டூப்ளிகேட்’ டோக்கன் கார்டு மூலம் பரிவர்த்தனை செய்யலாம். ஆனால், ஒவ்வொரு பரிவர்த்தனை முடிந்ததும் அந்த எண் மாறிவிடும். இதனால் உண்மையான கார்டு எண், வங்கி விவரங்கள் திருடு போகாது. 
 3. சிறு, குறுந் தொழில்களுக்கான ஜிஎஸ்டி வரம்பு: ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.40 லட்சமாக அதிகரிப்பு.


EmoticonEmoticon