Current Affairs Today: 09-01-2019 in Tamil

Current Affairs Today-2019 in Tamil,
TNPSC, UGC-NET, RRB, IBPS and the Competitive Examination.

நடப்பு செய்திகள்-09-01-2019,

தமிழகம் 
 1. வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களைத் தவிர பிறருக்கு ரூ.1000 வழங்கக் கூடாது: உயர் நீதிமன்றம் தடை.
 2. காவல் முன் நடத்தை சரிபார்ப்பு சேவை’ என்ற ஒரு புதிய இணைய வழி சேவையினை தமிழக காவல் துறைஅறிமுகப்படுத்தியுள்ளது.பொதுமக்கள் தகவல் சரிபார்ப் புக்காக காவல்துறையின் புதிய இ-சேவை தொடக்கம்.
 3. ஊடக சுதந்திரத்திற்கான கூட்டணி அமைப்பின் தலைவராக ஹிந்து என்.ராம் நியாயமனம்.
 4. மத்திய குற்றப்பிரிவு காவல் பணியில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு இனிமேல் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே பணி நேரமாக வழங்கப்படுகிறது.
 5. பொங்கல் பரிசு தொகுப்பில், 1,000 ரூபாய் ரொக்கத்தை வாங்க விரும்பாதோர், அதை தமிழக அரசுக்கு விட்டு கொடுக்கும் வசதியை, உணவு துறை துவக்கியுள்ளது.
 6. தமிழக அரசு சார்பில், 500 நலிவுற்ற கலைஞர்களுக்கு, மாதந்தோறும், 2,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட உள்ளது; இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதற்கு, 58 வயது முழுமையாக பூர்த்தியடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருமானம், 72 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். விண்ணப்ப படிவங்களை, சம்பந்தப்பட்ட  மாவட்டத்தைச் சேர்ந்த உதவி இயக்குனர், இணை இயக்குனர், மண்டல கலை பண்பாட்டு மையத்தில் பெறலாம்.தாசில்தார், கோட்டாட்சியர் பரிந்துரைகளுடன், அந்தந்த மாவட்ட உதவி இயக்குனர், இணை இயக்குனர், மண்டல கலைபண்பாட்டு மையத்தில் சமர்ப்பிக்கலாம்.
 7. எஸ்.ஆர்.எம். தமிழ்ப்பேராய விருதுகள் அறிவிப்பு
இந்தியா
 1. முதன்முறையாக தேசிய நிர்வாகியான திருநங்கை: மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் அப்சரா ரெட்டி.
 2. 77 நாட்கள் கட்டாய விடுப்பு: உச்ச நீதிமன்ற உத்தரவால் மீண்டும் அலுவலகம் வந்த அலோக் வர்மா.
 3. உயர் சாதி ஏழைகளுக்கும் 10%  இட ஒதுக்கீடு மாநிலங்கவையிலும் நிறைவேற்றம்.
 4. குஜராத் கட்ச் வலைகுடாவி லிருந்து தமிழக கன்னியாகுமரி வரை  சரக்கு கப்பல் இயக்க புதிய கடல் வழித்தடம் உருவாக்க மத்திய அரசு முடிவு. மீனவர்கள் எதிர்ப்பு.
 5. ஆந்திர மாநிலத்தில் கட்டிவரும் போலவரம் அணை கின்னஸ் சாதனை படைத்து உள்ளது. 15,000 கோடி செலவு, 24 மணி நேரத்தில் 32,315 கியூபிக் சிமெண்ட் கான்கிரீட் பணிகள் போடப்பட்டுள்ளதால் இது கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
உலகம்
 1. ‘‘உரத்துக்கு பதில் இரும்பு’’ - ஈரானுடன் பண்டமாற்று வர்த்தகம்: இந்தியா அடுத்த அதிரடி: ஈரானிடம் இருந்து உரத்தை வாங்கிக் கொண்டு அதற்கு நிகரான தொகைக்கு இரும்பு பொருட்களை ஈரானுக்கு ஏற்றுமதி செய்ய இந்தியா முன் வந்துள்ளது. ஈரான் அமைச்சர் ஜாவேத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் இதற்கான பூர்வாங்க பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளது.
 2. ''நாட்டுக்காக உயிர் துறந்த இந்திய வம்சாவளி காவல்துறை அதிகாரியே கார்ப்போரல், ரோனில் ரோன் சிங் தான் அமெரிக்காவின் ஹீரோ'': ட்ரம்ப் புகழாஞ்சலி.
 3. சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட்லி சூப் விலை Rs.1,37,277..
 4. இதயம் இயங்குவதற்குத் தேவையான மின் துடிப்புகள் சீராக இல்லை என்றால், அதை சீராக்க, 'பேஸ் மேக்கர்' கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல, மூளையில் மின் அலைகள் தாறுமாறாக ஏற்பட்டு வலிப்பு வரும் போது, அதை சீராக்க, 'வாண்ட்' என்ற கருவியை, கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்..
 5. சூரிய மண்டலத்தில் புதிய கிரகம்:சூரிய மண்டலத்துக்கு அப்பால், பூமியில் இருந்து 53 ஒளி ஆண்டுகள் துாரத்தில் புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளது. மிகச் சிறிய கிரகமான இது, பூமியை விட மூன்று மடங்கு பெரிது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.இக்கிரகத்தில் பாறைகள் மற்றும் அதிகளவில் கியாஸ் நிரம்பியுள்ளது. நைட்ரஜன் வாயு உள்ளதால் தண்ணீர் இருக்க வாய்ப்பு உள்ளது. இது உயிரினங்கள் வாழ தகுதியுடைய கிரகம், என்று கூறியுள்ளார். இக்கிரகத்திற்கு எச்டி 21749 பி என பெயரிடப்பட்டுள்ளது. இதன் அருகே அதிக வெளிச்சம் மற்றும் குளிர்ச்சியுடன் கூடிய நட்சத்திரம் காணப்படுவதாக நாசா மையம் தெரிவிக்கிறது.
விளையாட்டு

 1. அகமதாபாத்தில் 63 ஏக்கர் பரப்பளவில் ரூ.700 கோடியில் தயாராகும் பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானம்.குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் 63 ஏக்கர் பரப்பில் ரூ.700 கோடியில் கட்டப்பட்டு வருகிறது.
 2. ஹாக்கி பயிற்சியாளர் ஹரேந்திர சிங் நீக்கம் இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ஹரேந்திர சிங் புதன்கிழமை நீக்கப்பட்டார்.
 3. விழுப்புரத்தில் தேசிய கையுந்துப் பந்து போட்டி தொடக்கம்பத்தொன்பது வயதுக்குள்பட்ட மாணவர்களுக்கான தேசிய அளவிலான 64-ஆவது கையுந்துப் பந்து போட்டி, விழுப்புரத்தில் புதன்கிழமை தொடங்கியது.

வர்த்தகம்
 1. வருமான வரி விலக்கு உச்ச வரம்பை ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக அதிகரிக்க தொழிற்துறை கூட்டமைப்பு (சிஐஐ) மத்திய அரசுக்கு பரிந்துரை மேற்கொண்டுள்ளது.
 2. ரிசர்வ் வங்கி உபரி நிதி பங்கீடு; பிமல் ஜலான் குழு ஆலோசனை.
 3. ஜிஎம் பருத்தி காப்புரிமை; மான்சான்டோ நிறுவனத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி.
 4. நடப்பு நிதி ஆண்டில் (2018-19)இந்தியப் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீத அளவுக்கு உயரும்என்று உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.
 5. என்எம்டிசி: ரூ.1,000 கோடி பங்குகளை திரும்பப் பெறும் திட்டத்துக்கு நிதி அமைச்சகம் ஒப்புதல்


EmoticonEmoticon