Current Affairs Today: 04-01-2019 in Tamil

Current AffairsToday-2019 in Tamil,
TNPSC, UGC-NET, RRB, IBPS and the competitive Examination


நடப்பு செய்திகள்-04-01-2019 

தமிழகம்
 1. பள்ளி மாணவர்களுக்கு ‘ஸ்மார்ட் கார்டு’ வடிவிலான இலவச பேருந்து பயண அட்டைகள் வழங்கப்படும்.
 2. பபாசி நடத்தும் 42-ஆவது புத்தகக் காட்சியை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்கிவைக்கிறார்.
 3. தென்னிந்திய நாணயவியல் கழக 29ம் ஆண்டு இரண்டு நாள் மாநாடு சென்னை வேல்ஸ் பல்கலையில் நாளை காலை 10:00 மணிக்கு துவங்குகிறது.
 4. உயர்கல்வி மன்ற துணை தலைவராக மயில்சாமி நியமனம்

இந்தியா
 1. மத்தியப் பிரதேசத்தில் பணியாற்றும் காவலர்களுக்கு முதல் முறையாக வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளிக்கும் நடைமுறை அமலுக்கு வந்திருப்பது அம்மாநில காவலர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக மாறியுள்ளது.
 2. சந்திரயான் -2 அடுத்த மாதம் விண்ணில் ஏவப்படும்.
 3. இந்தியாவில் 5 மாநிலங்களில் அகில இந்திய வானொலி நிலையத்தை மூடுகிறது மத்திய அரசு குஜராத் மாநிலம் அகமதாபாத், தெலங்கானாவின் ஹைதராபாத், உத்தரப்பிரதேச மாநிலம் லக்னௌ, கேரளத்தில் திருவனந்தபுரம், மேகாலயாவின்  ஷில்லாங் ஆகிய நகர்ப்பகுதிகளில் இயங்கி வந்த அகில இந்திய வானொலி நிலைய அலுவலகங்களை மூடுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
 4. இந்தியாவில் வர்த்தகம் நடத்த உகந்த மாநிலங்களின் பட்டியலில் ஆந்திரா முதலிடம்!
 5. மத்திய அரசிடமிருந்து அதிக கடன் பெற்ற மாநிலங்களில் தமிழகம் 2-ம் இடத்தில் உள்ளது மத்திய அரசிடமிருந்து தமிழக அரசு பெற்ற கடனின் தற்போதைய நிலுவைத் தொகை சுமார் ரூ 16,112 கோடியாக உள்ளது என்று மக்களவையில் மத்திய நிதியமைச்சகம் தகவல் அளித்துள்ளது. மத்திய அரசிடமிருந்து அதிக கடன் பெற்ற மாநிலங்களில் தமிழகம் 2-ம் இடத்தில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 6. புதுச்சேரி முழு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி டெல்லியில் முதல்வர் நாராயணசாமி போராட்டம்.
 7. பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயர்: சென்னை மாநகராட்சி புதிய அறிவிப்பு:பெற்றோர்கள் பிறந்த குழந்தையின் பெயரை ஒருமுறை பதிவேற்றம் செய்தபிறகு, மீண்டும் எக்காரணம் கொண்டும் மாற்ற இயலாது. எனவே, சம்பந்தப்பட்ட உரிய ஆவணங்களுடன் தவறு இல்லாமல் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
 8. கடந்த 5 ஆண்டுகளில் வங்கிக் கடன் பெற்று 27 பேர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்: மக்களவையில் நிதித் துறை இணை அமைச்சர் தகவல்.
 9. ரூ.2000 நோட்டுகளை அச்சடிப்பதை ரிசர்வ் வங்கி குறைத்துக் கொண்டதாக தகவல் வெளியான நிலையில் அதற்கான காரணம் என்னவென்று பொருளாதார விவகாரத் துறை செயலர் சுபாஷ் சந்திர கார்க் ரூ.2000 நோட்டுகள் இப்போதைக்கு தேவைக்கு அதிகமாகவே புழக்கத்தில் உள்ளன. மொத்த பணப்புழக்கத்தில் 35%-க்கும் மேலாக ரூ.2000 நோட்டுகள் உள்ளன.
 10. வங்கிகளில் நிகழும் ரூ. 1 லட்சத்துக்கும் குறைவான நிதி மோசடிகளைத் தடுக்க ரிசர்வ் வங்கியுடன் இணைந்து புதிய செயல் திட்டத்தை வகுத்து வருவதாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் நிதி தகவல் பாதுகாப்பு மசோதா விதிமுறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் வங்கிகளில் நிகழும் தகவல் திருட்டு, சமூக வலைதளங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் திருட்டு உள்ளிட்டவற்றை தடுக்கும் வகையில் புதிய மசோதா இருக்கும் என்றார். 
 11. வங்கி கணக்கு தொடங்கவும், செல்லிடப்பேசி இணைப்பு பெறுவதற்கும் ஆதாரை விருப்பத்தின் பேரில் அளிக்க அனுமதிக்கும் ஆதார் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
உலகம்
 1. நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது சீன விண்கலம்: இருண்ட பகுதியில் முதல் முறையாக இறங்கி சாதனை பூமியிலிருந்து பார்த்தால் தெரியாத நிலவின் பின் பகுதியில், சீனாவின் சாங் இ-4 விண்கலம் முதல் முறையாக வியாழக்கிழமை தரையிறங்கி சாதனை படைத்துள்ளது.
 2. அமெரிக்கா உருவாக்கிய ’அனைத்து வெடிகுண்டுகளின் தாய்’ குண்டுக்கு போட்டியாக சீனா அணு  ஆயுதம் இல்லாத ராட்சத குண்டு ஒன்றை தயாரித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெலியிட்டுள்ளன.
 3. ஜன. 7,8-களில் அமெரிக்கா - சீனா வர்த்தகப் பேச்சுவார்த்தை
விளையாட்டு
 1. நியூலாந்து, ஆக்லாந்து நகரில்  ஏஎஸ்பி கிளாசிக்  டென்னிஸ் தொடர் நடைப்பெற்று வருகிறது. இதில் நேற்று நடைப்பெற்ற  மகளிர் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் அமெரிக்க வீராங்கனைகள் வீனஸ் வில்லியம்ஸ், லாரன்  டேவிஸ் ஆகியோர் மோதினர். இதில் வீனஸ் வில்லியம்ஸ் 6-4, 6-3 என நேர் செட்களில்  லாரன் டேவிசை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
 2. புரோ வாலிபால் தொடர்: சென்னை ஸ்பார்டன்ஸ், அகமதாபாத் டிபண்டர்ஸ், கோழிக்கோடு ஹீரோஸ், யூ மும்பா வாலி, ஹைதராபாத் பிளாக்ஹாக்ஸ், கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ் உள்ளிட்ட 6 அணிகள் கலந்து கொள்ளும் புரோ வாலிபால் தொடர் வரும் பிப்ரவரி 2-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை கொச்சி மற்றும் சென்னையில்  நடைபெறுகிறது.

வர்த்தகம்
 1. சென்ற 2018-ஆம் ஆண்டில் இந்தியாவின் காபி ஏற்றுமதி 7.36 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.


EmoticonEmoticon