Current Affairs Sports 2018 A Glance in Tamil | விளையாட்டு(Sports )-2018


Current Affairs-2018 in Tamil,
Dinamalar ,TNPSC, UGC-NET, RRB, IBPS and othe competitive Examination


விளையாட்டு(Sports ) 2018 - ஒரு பின்னோக்கிய பார்வை
ஜனவரி
  1. ஜன., 15: பிரிமியர் பாட்மின்டன் லீக் தொடரில் ஐதராபாத் அணி சாம்பியன்.
  2. ஜன., 24: தேசிய சீனியர் கூடைப்பந்து தொடரில் தமிழக அணிக்கு கோப்பை.
  3. ஜன., 27: ஆஸ்தி ரேலிய ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி சாம்பியன்.
  4. ஜன., 28: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் சாம்பியன்.
  5. ஜன., 28: இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பாட்மின்டனில் இந்திய வீராங்கனை செய்னா வெள்ளி.


பிப்ரவரி
  1. பிப்., 3: உலக கோப்பை கிரிக்கெட்டில் (19 வயது) இந்தியா 4வது முறையாக சாம்பியன்.
  2. பிப்., 7: ஒருநாள் போட்டியில் 200 விக்கெட் வீழ்த்திய முதல் வீராங்கனையானார் இந்தியா வின் ஜுலான் கோஸ்வாமி.
  3. பிப்., 16: தென் ஆப்ரிக்கா வுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 5-1 என கைப்பற்றியது.
  4. பிப்., 24: தென் ஆப்ரிக்கா வுக்கு எதிரான 'டுவென்டி-20' தொடரை இந்தியா 2-1 என வென்றது.
  5. பிப்., 25: தென் கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் 14 தங்கம், 14 வெள்ளி, 11 வெண்கலம் உட்பட 39 பதக்கங்களுடன் நார்வே அணி முதலிடம்.


மார்ச்
  1. மார்ச் 5: மெக்சிகோவில் நடந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை மனு பாகர் ( 10 மீ., 'ஏர் பிஸ்டல்') தங்கம்.
  2. * ரஷ்யாவில் நடந்த 'டால் மெமோரியல்' செஸ் தொடரில் இந்தியாவின் விஸ்வ நாதன் ஆனந்த் சாம்பியன்.
  3. மார்ச் 6: தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் 100 மீ., ஓட்டத்தில் தமிழக வீரர் சிவக்குமார் தங்கம்.
  4. 'சபாஷ்' சென்னை - மார்ச் 17: இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரில் சென்னை அணி 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. பைனலில் 3-2 என்ற கோல் கணக்கில் பெங்களூருவை வீழ்த்தியது. 
  5. மார்ச் 19: கொழும்புவில் நடந்த முத்தரப்பு 'டுவென்டி-20' பைனலில் இந்திய அணி, வங்கதேசத்தை வீழ்த்தி கோப்பை வென்றது.
  6. மார்ச் 19: சிங்கப்பூரில் நடந்த நீச்சல் சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் விதர்வால் காடே (50 மீ., 'பிரீஸ்டைல்') தங்கம்.
  7. மார்ச் 22: சிட்னியில் நடந்த உலக கோப்பை ஜூனியர் துப்பாக்கி சுடுதலில் தமிழக வீராங்கனை இளவேனில் ( 10 மீ., 'ஏர் ரைபிள்') தங்கம்.
  8. மார்ச் 28: கேப்டவுன் டெஸ்டில் பந்தை சேதப் படுத்திய பிரச்னையில் ஆஸ்தி ரேலியாவின் பான்கிராப்டிற்கு 9 மாதங்கள், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணைக் கேப்டன் வார்னருக்கு தலா ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டது.


ஏப்ரல்
  1. ஏப்., 2: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி பத்ம பூஷன் விருது வென்ற 10வது கிரிக்கெட் வீரரானார். விழாவுக்கு கர்னல் உடையில் வந்த இவருக்கு ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் விருது வழங்கினார்.
  2. கண்கவர் விழா - ஏப்., 4: ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் 21வது காமன்வெல்த் விளையாட்டு ஆரம்பம். கண்கவர் வானவேடிக்கையுடன் துவக்க விழா நடந்தது.
  3. ஏப்., 5-7: காமன்வெல்த் விளையாட்டு பளுதுாக்குதலில் இந்தியாவின் மீராபாய் சானு, சஞ்சிதா சானு, சதீஷ் குமார், ராகுல் வெங்கட் தங்கம்.
  4. ஏப்., 9-11: காமன்வெல்த் விளையாட்டு துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் ஜித்து ராய், ஹீனா சித்து, ஸ்ரேயாசி, அனிஷ் பன்வாலா தங்கம்.
  5. பலே பயஸ்
  6. ஏப்., 7: டேவிஸ் கோப்பை டென்னிஸ் இரட்டையர் பிரிவில் அதிக வெற்றிகள் (43) பதிவு செய்த வீரர் என்ற உலக சாதனை படைத்தார் இந்தியாவின் பயஸ். இவர் இத்தாலியின் நிகோலா பீட்ராங்கெலியை (42 வெற்றி) சாதனையை முறியடித்தார்.
  7. ஏப்., 12: காமன்வெல்த் மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் சுஷில் குமார் (74 கி.கி.,) தங்கம். 
  8. ஏப்., 14: காமன்வெல்த் விளையாட்டில் இந்தியாவின் மேரி கோம் (குத்துச்சண்டை), மணிகா பத்ரா (டேபிள் டென்னிஸ்), நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்) தங்கம்.
  9. ஏப்., 15: காமன்வெல்த் விளையாட்டில் 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம் என, மொத்தம் 66 பதக்கங்களுடன் இந்தியாவுக்கு 3வது இடம்.


மே
  1. மே 14: ஜெர்மனியில் நடந்த சர்வதேச துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை ஹீனா சித்து (10 மீ., 'ஏர் பிஸ்டல்') தங்கம்.
  2. மே 20: தென் கொரியாவில் நடந்த பெண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கியில் இந்தியா வெள்ளி.
  3. மே 23: தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு.
  4. மே 27: ஐரோப்பிய சாம்பி யன்ஸ் லீக் கால்பந்து தொடரில் ரியல் மாட்ரிட் அணி சாம்பியன்
  5. மே 30: இந்திய வட்டு எறிதல் வீரர் விகாஸ் கவுடா ஓய்வு.


ஜூன்
  1. ஜூன் 8: பி.சி.சி.ஐ., சார்பில் வழங்கப்படும் 'பாலி உம்ரிகர்' விருதை இந்திய அணி கேப்டன் கோஹ்லி பெற்றார்.
  2. ஜூன் 9: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையரில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப் சாம்பியன்.
  3. ஜூன் 10: 'இன்டர்கான்டி னென்டல்' கோப்பை கால்பந்து தொடரில் இந்தியா சாம்பியன்.
  4. 'கிராண்ட் மாஸ்டர்' - ஜூன் 24: கிரெடின் செஸ் தொடரில் சென்னையின் பிரக்னநந்தா இளம் வயதில் (12 ஆண்டு, 10 மாதம், 13 நாள்) 'கிராண்ட் மாஸ்டர்' ஆன முதல் இந்தியர் ஆனார்.
  5. ஜூன் 25: அமெரிக்கா உலக கோப்பை வில்வித்தை 'ரிகர்வ்' பிரிவில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி தங்கம்.


ஜூலை
  1. ஜூலை 8: இங்கிலாந்துக்கு எதிரான 'டுவென்டி-20' தொடரை இந்தியா 2-1 என கைப்பற்றியது. 
  2. * சர்வதேச 'டுவென்டி-20' அரங்கில் 50 'கேட்ச்', ஒரே போட்டியில் 5 'கேட்ச்' செய்த முதல் விக்கெட் கீப்பர் ஆனார் இந்தியாவின் தோனி. 
  3. ஜூலை 11: உலக தட களத்தில் தங்கம் வென்ற முதல் இந்தியர் ஆனார் ஹிமா தாஸ் (400 மீ.,). 
  4. ஜூலை 12: விம்பிள்டன் டென்னிஸ் ஒற்றையரில் ஜெர்மனி வீராங்கனை கெர்பர் சாம்பியன்.
  5. ஜூலை 15: விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையரில் செர்பியாவின் ஜோகோவிச் சாம்பியன்.
  6. ஜூலை 29: ரஷ்ய ஓபன் பாட்மின்டனில் இந்திய வீரர் சவுரப் வர்மா சாம்பியன். 
  7. ஜூலை 31: இங்கிலாந்து தனது ஆயிரமாவது டெஸ்டில் இந்தியாவுக்கு எதிராக பங்கேற்றது.


ஆகஸ்ட்
  1. ஆக., 5: உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றார் இந்தியாவின் சிந்து.
  2. 'சிங்கம்' பஜ்ரங் - ஆக., 19: ஆசிய மல்யுத்தம் பைனலில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா ஜப்பானின் டைசியை 10-8 என வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார். 2014ல் வெள்ளி கைப்பற்றிய இவருக்கு இது 2வது பதக்கமாக அமைந்தது. 
  3. ஆக., 18: தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் (15 வயது) தொடரில் இளம் இந்திய பெண்கள் அணி சாம்பியன். 
  4. ஆக., 21: ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடுதலில் 16 வயதில் தங்கம் வென்றார் சவுரப் சவுத்ரி. 
  5. * ஆசிய வரலாற்றில் 'செபக் தக்ரா' போட்டியில் இந்தியா வெண்கலம் வென்றது.
  6. ஆக., 22: ஆசிய ஹாக்கியில் இந்திய ஆண்கள் அணி 26-0 என்ற கோல் கணக்கில் ஹாங்காங்கை வீழ்த்தியது. 
  7. ஆக., 23: ஆசிய கபடி ஆண்கள் பிரிவில் இந்தியா வெண்கலம். 
  8. ஆக., 24: ஆசிய பெண்கள் பிரிவில் இந்தியா வெள்ளி.
  9. * ஆசிய டென்னிஸ் ஆண்கள் ஒற்றையரில் தமிழகத்தின் குன்னேஸ் வரன் வெண்கலம்.
  10. ஆக., 25: இந்தியாவின் தஜிந்தர்பால் சிங் ஆசிய சாதனையுடன் குண்டு எறிதலில் தங்கம் வென்றார். 
  11. தமிழக 'தங்கம்' - ஆக., 27: ஆசிய விளையாட்டு 400 மீ., தடை ஓட்டத்தில் தமிழகத்தின் தருண் அய்யாச்சாமி (48.46 வினாடி) வெள்ளி வென்றார். இந்த ஓட்டத்தில் 49 வினாடிக்கும் குறைவாக ஓடிய முதல் இந்தியர் ஆனார்.
  12. ஆக., 28: ஆசிய பாட் மின்டனில் இந்தியாவின் சிந்து வெள்ளி. 
  13. 'சூப்பர்' சுவப்னா - ஆக., 29: ஆசிய விளையாட்டில் உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல், 100, 200 மீ., உள்ளிட்ட 7 விளையாட்டுகள் கொண்ட 'ஹெப்டத்லான்' போட்டியில் இந்தியாவின் சுவப்னா பர்மன் தங்கம் கைப்பற்றினார். 


செப்டம்பர்
  1. செப்., 1: ஆசிய விளையாட்டு ஆண்கள் ஹாக்கியில் இந்தியா வெண்கலம்.
  2. செப்., 2: சவுத்தாம்ப்டன் டெஸ்டில் இங்கிலாந்திடம் வீழ்ந்த இந்தியா தொடரை 1-3 என இழந்தது.
  3. * ஆசிய விளையாட்டில் இந்தியா 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலம் என அதிக பதக்கம் (69) வென்றது. 
  4. ஓஹோ ஒசாகா - செப்., 9: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பைனலில் அமெரிக்காவின் செரினாவை ஜப்பானின் ஒசாகா வீழ்த்தி முதல் கிராண்ட்ஸ்லாம் கோப்பை வென்றார். 
  5. செப்., 10: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் ஒற்றையரில் ஜோகோவிச் சாம்பியன்.
  6. செப்., 12: தெற்காசிய கால்பந்து தொடர் அரையிறுதி யில் இந்தியா 3-1 என பாகிஸ்தானை வென்றது. 
  7. செப்., 20: விஜய் ஹசாரே டிராபி, ஜார்க்கண்ட் வீரர் நதீம் 8 விக்கெட் வீழ்த்தி உலக சாதனை. 
  8. செப்., 24: செர்பியா, ஜூனியர் டேபிள் டென்னிசில் இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் சாம்பியன். 


அக்டோபர்
  1. அக்., 6: உலக ஸ்னுாக்கர் (16 வயது) சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் கீர்த்தனா சாம்பியன். 
  2. அக்., 9: 'யூத்' ஒலிம்பிக்கில் இந்தியாவின் ஜெரிமி தங்கம். 
  3. அக்., 11: ஆசிய பாரா உயரம் தாண்டுதலில் தமிழகத்தின் மாரியப்பன் வெண்கலம்.
  4. அக்., 15: யூத் ஒலிம்பிக் ஹாக்கியில் முதன் முறையாக இந்தியா 2 வெள்ளி வென்றது. 
  5. அக்., 27: உலக பில்லியர்ட்ஸ் தொடரில் இந்திய வீரர் சவுரவ் கோத்தாரி சாம்பியன்.


நவம்பர்
  1. நவ., 1: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா (3-1) வென்றது. 
  2. நவ., 11: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 'டுவென்டி-20' தொடரை இந்தியா (3-0) வென்றது.
  3. நவ., 18: சீனதைபே ஓபன் டென்னிசில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, கர்மன் கவுர் தண்டி ஜோடி சாம்பியன். 
  4. நவ., 25: ஆஸ்திரேலியா வுக்கு எதிரான 'டுவென்டி-20' தொடரை இந்தியா 'டிரா' (1-1) செய்தது. 
  5. செஸ் 'கிங்' - நவ., 29: உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் நார்வேயின் கார்ல்சன் அமெரிக்காவின் காருணா மோதினர். 12 சுற்றும் 'டிரா' ஆக, 'டைபிரேக்கரில்' கார்ல்சன் சாதித்தார். தொடர்ந்து நான்காவது முறையாக சாம்பியன் ஆனார். 


டிசம்பர்
  1. டிச., 3: யூத் செஸ் ஒலிம்பியாட்டில் இளம் இந்தியா வெள்ளி.
  2. டிச., 4: இந்திய அணி துவக்க வீரர் காம்பிர் ஓய்வு.
  3. * சிறந்த கால்பந்து வீரருக் கான 'பாலன் டி ஆர்' விருது வென்றார் லுகா மாட்ரிச் (குரோஷியா). 
  4. டிச., 10: அடிலெய்டு டெஸ்டில் இந்திய அணி 31 ரன் வித்தியாசத்தில் வெற்றி. 
  5. டிச., 14: இந்திய பாட்மின்டன் ஜோடி காஷ்யப், செய்னா நேவல் திருமணம்.
  6. டிச., 30: மெல்போர்னில் நடந்த 3வது டெஸ்டில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை 137 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.



டாப் 3
  1. ஜன., 1: ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் விதர்பா அணி முதன்முறையாக சாம்பியன். பைனலில் டில்லி அணியை வீழ்த்தியது.
  2. ஜன., 8: இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி 4-0 எனக் கைப்பற்றியது.
  3. ஜூன் 10: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஒற்றையரில் ஸ்பெயினின் நடால் 11வது முறையாக சாம்பியன். பைனலில் ஆஸ்திரியாவின் தியமை வீழ்த்தினார்.
  4. ஆக., 12: டி.என்.பி.எல்., தொடரில் மதுரை அணி முதன் முறையாக கோப்பை வென்றது. பைனலில் திண்டுக்கல் அணியை 7 விக்கெட்டில் வீழ்த்தியது.
  5. ஜூலை 27: உலக வில்வித்தை தரவரிசையில் ('ரேங்க்') முதன் முறையாக இந்தியா 'நம்பர்-1' இடம் பிடித்து வரலாறு படைத்தது.
  6. நவ., 15: மியான்மர், உலக பில்லியர்ட்ஸ் போட்டியில் இந்தியாவின் பங்கஜ் அத்வானி கோப்பை வென்றார்.



EmoticonEmoticon