Current Affairs Science and Technology 2018 A Glance in Tamil| தொழில்நுட்பம்-2018

Current Affairs-2018 in Tamil,
Dinamalar ,TNPSC, UGC-NET, RRB, IBPS and othe competitive Examination


Science and Technology- 2018 - ஒரு பின்னோக்கிய பார்வை

நீண்ட சந்திர கிரகணம்
ஜூலை 27 : 21ம் நுாற்றாண்டின் நீண்ட முழு சந்திர கிரகணம் (1 மணி மற்றும் 43 நிமிடங்கள்) ஏற்பட்டது. இதற்கு முன் 2018 ஜன.,31ல் 1 மணி மற்றும் 16 நிமிடங்கள் நீடித்தது. 

பூமியை நெருங்கிய செவ்வாய்
ஜூலை 27 : பூமி - செவ்வாய் கோள் இடையே மிக குறைந்தபட்ச துாரம் 5.4 கோடி கி.மீ., ஜூலை 27ல் பூமிக்கு அருகில் 5.7 கோடி கி.மீ., துாரத்தில் செவ்வாய் வந்தது. இதற்கு முன் 2003, ஆக., 27ல் பூமிக்கு அருகில் (5.6 கோடி கி.மீ., துாரம்) வந்தது. 


சூரியனுக்கு ராக்கெட்
ஆக., 12: அமெரிக்காவின் நாசா, சூரியனை ஆய்வு செய்ய 'பார்கர் சோலார் புரோப்' விண்கலத்தை புளோரிடாவில் உள்ள கென்னடி ஏவுதளத்தில் இருந்து, டெல்டா IV ராக்கெட் மூலம் ஏவியது. இது 1,400 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தை தாங்கும். இந்த விண்கலம் சூரியனின் மேற்பரப்பில் இருந்து 59.5 லட்சம் கி.மீ., துாரம் உள்ளே சென்று ஆராயும். 


அசத்தும் 'இன்சைட்' 
நவ., 26 : அமெரிக்காவின் 'நாசா' 2018 மே 5ல் அனுப்பிய 'இன்சைட்' ரோபோ 48.5 கோடி கி.மீ., துாரம் பயணம் செய்து செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது. செலவு ரூ. 5,876 கோடி. செவ்வாய் கிரகத்தின் உட்பகுதி, அங்கு உண்டாகும் அதிர்வுகள், வெப்பப் பரிமாற்றங்களை ஆய்வு செய்யும். 

விமானப்படை நண்பன்
டிச., 19: ஜி.எஸ்.எல்.வி., - எப் 11 ராக்கெட் மூலம் 'ஜிசாட் - 7ஏ' என்ற தகவல் தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை இஸ்ரோ ஏவியது. இது விமானப் படைக்கு பயன்படும்.

துளிகள்

  1. பிப்., 7: அமெரிக்காவில் இருந்து உலகின் சக்திவாய்ந்த 'பால்கன் ஹெவி' ராக்கெட்டை 'ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனம் ஏவியது. 
  2. ஏப்., 1: சீனாவின் 'டியான்காங் - 1' விண்வெளி நிலையம் பசுபிக்கடலில் விழுந்தது. இது 34 அடி நீளம், 11 அடி அகலம் கொண்டது. எடை 9 டன். 
  3. ஏப்., 12: 'பி.எஸ்.எல்.வி., - சி41' ராக்கெட் மூலம் 'ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் - 1ஐ' நேவிகேஷன் செயற்கைக்கோளை இஸ்ரோ ஏவியது. 
  4. மே 21: நிலவின் மர்ம பகுதிகளை ஆராயும் 'கியூகியோ' செயற்கைக்கோளை சீனா ஏவியது. 
  5. ஜூலை 9: 'மாரக்ஸ்-70' என்ற விண் கலத்தை குறைந்த நேரத்தில் (3 மணி, 48 நிமிடம்) சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பி ரஷ்யா சாதனை. 
  6. ஆக., 21: நிலவின் மேற்பரப்பில் பனிக்கட்டி வடிவில் நீர் உறைந்திருப்பதாக, 'சந்திராயன் - 1' இந்திய விண்கலம் அனுப்பிய தகவல் உண்மை என நாசா உறுதி. 
  7. செப்., 16: 'பி.எஸ்.எல்.வி., - சி42' ராக்கெட் மூலம் இரண்டு வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டது. 
  8. நவ., 14: 'ஜி.எஸ்.எல்.வி. - மார்க் III டி2' ராக்கெட் மூலம் 'ஜிசாட் - 29' செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப் பட்டது. செயற்கைக்கோள் எடை 3,423 கிலோ. இஸ்ரோவால் 4000 கிலோ எடை வரையிலான செயற்கைகோளை மட்டுமே ஏவ முடியும்.
  9. நவ., 29: 'பி.எஸ்.எல்.வி., சி - 43' ராக்கெட் மூலம் இந்தியாவின் ஹைசிஸ் செயற்கைக் கோள் மற்றும் 30 வெளி நாட்டு செயற்கைக்கோள்களை இஸ்ரோ ஏவியது. 
  10. டிச., 4: இஸ்ரோவின் அதிக எடை கொண்ட (5,854 கிலோ) செயற்கைக் கோளான ஜிசாட் - 11, பிரெஞ்சு கயானாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.



EmoticonEmoticon