Current Affairs October 2018 A Glance in Tamil

Current Affairs-2018 in Tamil,
Dinamalar ,TNPSC, UGC-NET, RRB, IBPS and othe competitive Examination


அக்டோபர் 2018 - ஒரு பின்னோக்கிய பார்வை ,
தமிழகம்
 1. அக்., 9: கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை பணி செய்ய விடாமல் தடுத்ததாக நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது. அன்றே எழும்பூர் நீதிமன்றம் விடுவித்தது. 
 2. அக்., 10: சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர்., பெயர்.
 3. 'மகாபுஷ்கரம்' - அக்., 11: நெல்லை தாமிரபரணியில் 144 ஆண்டுகளுக்குப் பின் 'மகா புஷ்கரம்' விழா துவங்கியது. கவர்னர் புரோஹித் நீராடி விழாவை தொடங்கி வைத்தார். 12 நாட்கள் நடைபெற்றது. 
 4. அக்., 12: நெடுஞ்சாலைத் துறை டெண்டர் முறை கேட்டில் முகாந்திரம் இருந்தால் முதல்வர் பழனிசாமி மீது வழக்குப் பதியலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவு. 
 5. அக்., 13: சேலம் - சென்னை ரயிலில் ஐ.ஓ.பி., வங்கியின் ரூ. 342 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ம.பி.,யை சேர்ந்த இருவர் கைது.
 6. அக்., 25: 18 எம்.எல்.ஏ.,க்கள் வழக்கில் 'தகுதி நீக்கம் செல்லும்' என உயர்நீதிமன்ற மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் தீர்ப்பு. 
 7. அக்., 30: புல்லட் ரயிலுக்கு முன்மாதிரியாக இன்ஜின் இல்லாத ரயில் சென்னை ரயில் தொழிற்சாலையில் தயாரிப்பு. 

இந்தியா
 1. அக்., 1: ஐ.நா., பொதுச் செயலர் அந்தோனியா கட்டார்ஸ் இந்தியா வருகை. 
 2. அக்., 2: காந்தியடிகளின் 150வது பிறந்த தினம் அனுசரிப்பு. 
 3. அக்., 3: ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் சி.இ.ஓ., சந்தா கோச்சார் ராஜினாமா.
 4. அக்., 4: அமெரிக்காவின் 'போர்ப்ஸ்' பத்திரிகையின் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, 11வது ஆண்டாக முதலிடம். 
 5. விலை 'விர்ர்' - அக்., 4: இந்தியாவில் இந்தாண்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வாகவே இருந்தது. அக்., 4ம் தேதி மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.91.34 ஆகவும், சென்னையில் லிட்டர் ரூ.87.33 ஆகவும் உச்சத்தை தொட்டது. 
 6. அக்., 8: இந்தியா சார்பில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் தொடர்பாக இந்தியா (இஸ்ரோ) - ரஷ்யா (ரோஸ்காஸ்மோஸ்) இடையே ஒப்பந்தம். 
 7. அக்., 12: டில்லியில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் 25வது ஆண்டுவிழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு. 
 8. அக்., 14: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்தார். 
 9. அக்., 8: டில்லியில் முதல்வர் பழனிசாமி - பிரதமர் மோடி சந்திப்பு.
 10. அக்., 9: பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் பயணம். 
 11. அக்., 10: உ.பி.யில் ரயில் தடம் புரண்டதில் 30 பேர் பலி. 
 12. அக்., 13: தேசிய மனித உரிமை கவுன்சிலின் வெள்ளி விழா டில்லியில் நடந்தது. 
 13. அக்., 16: உ.பி.,யின் அலகாபாத், பிரயாக்ராஜ் என பெயர் மாற்றம். 
 14. பிடிவாதம் - அக்., 19: அனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்லலாம் என்ற தீர்ப்பை தொடர்ந்து போலீசார் பாதுகாப்புடன் ஆந்திர பத்திரிகையாளர் கவிதா, கொச்சியின் ரஹானா பாத்திமா சன்னிதானம் வரை சென்றனர். பக்தர்கள் எதிர்ப்பால் திரும்பினர்.
 15. அக்., 21: இமாச்சல் தலைநகர் சிம்லாவின் பெயர் சியாமலா என மாற்றம். 
 16. அக்., 24: ரூபாய் ரூ. 3 கோடி லஞ்ச புகாரை தொடர்ந்து சி.பி.ஐ., இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கு கட்டாய விடுப்பு.
 17. * மியான்மருக்கான இந்திய துாதராக சவுரப் குமார் நியமனம்.
 18. அக்., 27: பிரதமர் மோடி ஜப்பான் பயணம். 
 19. * உலகளவில் தொழில் துவங்குவதற்கு எளிதான சூழல் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 77வது இடம். 

உலகம்
 1. அக்., 1: சர்வதேச நிதி அமைப்பின் தலைமை பொருளாதார ஆலோசகராக இந்தியாவின் கீதா கோபிநாத் நியமனம். 
 2. சரிந்த நான்காவது துாண் - அக்., 2: சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கஷோசி, துருக்கியில் உள்ள சவுதி துணை துாதரகத்தில் சந்தேகமான முறையில் கொல்லப்பட்டார். 
 3. அக்., 4: மனித உரிமை பிரச்னையில் மியன்மரின் ஆங் சாங் சூகியின் கனடா கவுரவ குடியுரிமை ரத்து. 
 4. அக்., 9: ஐ.நா., சபைக்கான அமெரிக்க துாதர் பதவியிலிருந்து நிக்கி ஹாலே ராஜினாமா. 
 5. அக்., 11: உலகின் நீண்டதுார விமான சேவை, சிங்கப்பூர் - நியூயார்க் வரை இயக்கம். துாரம் 15,343 கி.மீ.
 6. * மரண தண்டனையை கை விட்டது மலேசியா.
 7. * உலகின் சக்தி வாய்ந்ததாக ஜப்பான் பாஸ்போர்ட் தேர்வு. 190 நாடுகளுக்கு 'விசா' இல்லாமல் செல்லலாம். 
 8. அக்., 12: உலக பட்டினி குறியீடு - 2018ல் முதலிடம் பெலாரஸ். இந்தியாவுக்கு 103வது இடம். 
 9. அக்., 13: ஐ.நா., மனித உரிமை கவுன்சிலுக்கு இந்தியா ஐந்தாவது முறையாக தேர்வு. 
 10. அக்., 15: ஏமன் உள்நாட்டு போரில் 1.3 கோடி பேர் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா., எச்சரிக்கை தகவல். 
 11. அக்., 18; பெல்ஜியத்தில் நடந்த ஆசிய - ஐரோப்பிய மாநாட்டில் துணை ஜனாதிபதி வெங்கையா பங்கேற்பு. 
 12. பாய்ந்த ரயில் - அக்., 19 : பஞ்சாப் அமிர்தசரசில் காங்., எம்.பி., சித்து மனைவி கவுர் தலைமையில் தசரா விழா நடந்தது. இதில் தண்டவாளத்தில் நின்று நிகழ்ச்சி பார்த்தவர்கள் மீது ரயில் மோதியதில் 60 பேர் பலி. 
 13. அக்., 22: கேமரூன் அதிபராக பால் பியா தொடர்ந்து 7வது முறையாக வெற்றி. 
 14. 1982 முதல் பதவி வகிக்கிறார். 
 15. அக்., 27: உலகின் மிக பழமையான வணிகக் கப்பல் 2,000 அடி ஆழத்தில் கருங்கடல் பகுதியில் கண்டுபிடிப்பு. 
 16. * இந்தோனேஷிய விமானம் விபத்துக்குள்ளானதில் 189 பேர் பலி. 

டாப் 3
 1. அக்., 3: உச்சநீதி மன்றத்தின் 46வது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் பொறுப்பேற்பு. 
 2. அக்., 25: இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன், தமிழ் மக்கள் கூட்டணியை தொடங்கினார். 
 3. அக்., 27: உலகளவில் தொழில் துவங்குவதற்கு எளிதான சூழல் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 77வது இடம்.EmoticonEmoticon