Current Affairs November 2018 A Glance in Tamil

Current Affairs-2018 in Tamil,
Dinamalar ,TNPSC, UGC-NET, RRB, IBPS and othe competitive Examination


நவம்பர் 2018 - ஒரு பின்னோக்கிய பார்வை ,
தமிழகம்
 1. நவ., 2: தேனியில் நியூட்ரினோ ஆய்வகம் துவங்க வனவிலங்கு வாரியத்தின் அனுமதி அவசியம் என தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு.
 2. நவ., 6: அரசுப்பள்ளி களில் ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகைப்பதிவேடு அரசாணை வெளியீடு. 
 3. நவ., 8: சொத்துக் குவிப்பு வழக்கில் புதுச்சேரி என்.ஆர். காங்., எம்.எல்.ஏ., அசோக் ஆனந்திற்கு ஓராண்டு சிறை. 
 4. நவ., 18: மூன்று மாணவிகள் பலியான தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளான ரவீந்திரன், முனியப்பன், நெடுஞ்செழியன் விடுதலை. 
 5. * சென்னையில் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு நினைவு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை. 
 6. நவ., 20: புயல் பாதித்த இடங்களை முதல்வர் பழனிசாமி பார்வை.
 7. நவ., 21: மலேசியாவி லிருந்து 52,068 டன் எடை மணல் ஏற்றிய எம்.வி. ரப்பல்ஸ்குவே கப்பல் எண்ணுார் துறைமுகம் வருகை. 
 8. நவ., 24: கஜா புயலால் பாதித்த இடங்களை பார்வையிட மத்திய குழு வருகை. 
 9. நவ., 27: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் ரூ.5,912 கோடியில் புதிய அணை கட்ட கர்நாடக அரசின் திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி.

இந்தியா
 1. நவ., 1: சத்தீஸ்கரின் தண்டேவாடா பகுதியில் நக்சல் தாக்குதலில் துார்தர்ஷன் கேமராமேன், இரண்டு போலீசார் பலி.
 2. நவ., 3: ஜி.எஸ்.டி., பதிவு செய்யப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.1 கோடி வரையிலான கடனை 59 நிமிடங்களில் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கினார். 
 3. யமுனை ஆற்றில் - நவ., 4: டில்லியில் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதியை இணைக்கும் விதமாக யமுனை நதியில் உருவாக்கப்பட்ட 'சிக்னேட்சர்' பாலம் திறப்பு. 
 4. நவ., 5: நாட்டின் 25வது உயர்நீதிமன்றம் ஆந்திர தலைநகர் அமராவதியில் அமைக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு. 
 5. நவ., 6: நாட்டில் முதன் முறையாக 'பைக் ஆம்புலன்ஸ்' சேவை ஜார்க்கண்ட்டில் நக்சலைட் பாதிப்பு பகுதிகளில் அறிமுகம்.
 6. * சத்தீஸ்கரில் 62 நக்சல் பயங்கரவாதிகள் சரண். 
 7. நவ., 12: ரபேல் விமானத்தின் விலை குறித்த தகவலை மத்திய அரசு சீல் இட்ட கவரில் வைத்து, உச்சநீதி மன்றத்தில் சமர்ப்பிப்பு. 
 8. கங்கையில் கப்பல் - நவ., 12: கங்கை நதியில் மேற்கு வங்கத்தின் ஹால்டாவில் இருந்து உ.பி.,யின் வாரணாசி வரை வந்த முதல் உள்நாட்டு சரக்கு கப்பலை பிரதமர் மோடி வரவேற்றார். 2000 டன் எடை சரக்குகளை கையாள முடியும்.
 9. நவ., 13: அலகாபாத் நகரின் பெயரை பிரயாக்ராஜ், பைசாபாத் மாவட்டத்தை அயோத்யா என மாற்ற உ.பி., அமைச்சரவை ஒப்புதல்.
 10. * பிரதமர் மோடி சிங்கப்பூர் பயணம். 
 11. நவ., 15: ராமர் வழிபாட்டு இடங்களை இணைக்கும் டில்லி-ராமேஸ்வரம், 'ராமாயணா எக்ஸ்பிரஸ்' சிறப்பு ரயில் துவக்கம். 
 12. நவ., 17: உ.பி.,யின் மதுராவில் நாட்டின் முதல் யானைகள் சிறப்பு மருத்துவமனை துவக்கம்.
 13. நவ., 18: பஞ்சாப் அமிர்தசரஸ் அருகே குண்டு வெடித்ததில் 3 பேர் பலி. 15 பேர் காயம். 
 14. நவ., 20: வரும் லோக்சபா தேர்தலில் போட்டியில்லை என மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு. 
 15. சென்ற 'பொன்னார்' - நவ., 21: சபரிமலைக்கு இருமுடி கட்டிச் சென்ற மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நிலக்கலில் தடுக்கப் பட்டார். அவருடன் வந்த வாகனத்தை பம்பை வர செல்ல அனுமதிக்காமல் பணியில் இருந்த எஸ்.பி., யதீஷ்சந்திரா வாக்குவாதம்.
 16. நவ., 22: கவர்னர் ஆட்சி அமலில் இருந்த காஷ்மீர் சட்டசபை கலைப்பு. 
 17. நவ., 24: கர்நாடகாவில் மாண்டியா மாவட்டத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 30 பேர் பலி. 
 18. வருவாரா ராமர் - நவ 25: ராமர் ஜென்ம பூமி - பாபர் மசூதி வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி வி.எச்.பி., அமைப்பு 'தர்ம சபா நிகழ்ச்சி' நடத்தியது. 
 19. நவ., 28: யு.பி.எஸ்.சி., தலைவராக அர்விந்த் சக்சேனா நியமனம். 
 20. நவ., 30: நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் டில்லியில் போராட்டம்.

உலகம்
 1. நவ., 2: தென் ஆப்ரிக்க விஞ்ஞானிகள், மனிதனின் சிறுநீரில் இருந்து 'பயோ - செங்கல்' தயாரிப்பு 
 2. நவ., 5: ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை.
 3. * வடகொரியாவில் அதிபர் கிம் ஜான் உன் - கியூபா அதிபர் மிகுவேல் டியாஸ் சந்திப்பு. 
 4. நவ., 13: சுவிட்சர்லாந்தில் உலகின் அரிதான பிங்க் நிற வைரம் ரூ.360 கோடிக்கு ஏலம்.
 5. வென்ற ஜனநாயகம் - நவ., 17: மாலத்தீவில் நடந்த அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராஹிம் முகம்மது வெற்றி. இவரது பதவியேற்பு விழாவில், பிரதமர் மோடி பங்கேற்பு. 
 6. நவ., 19: ஆப்கன் தலைநகர் காபூலில் தற்கொலைப்படை தாக்குதலில் 50 பேர் பலி. 
 7. நவ., 20: கடலுக்கடியில் உருவாக்கப்பட்ட உலகின் முதல் சொகுசு ஓட்டல் மாலத்தீவில் திறப்பு. 
 8. நவ., 23: பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் 32 பேர் பலி.
 9. நவ., 24: ஆஸி.,யில் காந்தி சிலையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். 
 10. நவ., 25: பிரிட்டனின் 'பிரக்சிட்' வரைவு ஒப்பந்தத்துக்கு ஐரோப்பிய நாடுகள் ஒப்புதல்.
 11. நவ., 29: பிரான்ஸ் ஈபிள் கோபுரத்தில் அகற்றப்பட்ட படிக்கட்டுகளின் ஒரு பகுதி ரூ. 1.35 கோடிக்கு ஏலம்.

டாப் 3
 1. நவ., 26: சீக்கியர்கள் புனித பயணம் செல்லும் இந்தியாவின் குருதாஸ்பூர் - பாகிஸ் தானின் கர்தார்பூர் இணைக்கும் சாலை திட்டத்துக்கு மத்திய அரசு அடிக்கல். 
 2. நவ., 10: பிரான்சில் முதல் உலகப்போர் (1918) நிறைவடைந்த 100வது ஆண்டு நினைவு தினம். 
 3. நவ., 30: சிலை தடுப்பு வழக்கை விசாரித்த ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் பதவி ஓராண்டுக்கு நீட்டிப்புEmoticonEmoticon