Current Affairs May 2018 A Glance in Tamil

Current Affairs-2018 in Tamil,
Dinamalar ,TNPSC, UGC-NET, RRB, IBPS and othe competitive Examination


மே  2018 - ஒரு பின்னோக்கிய பார்வை 
தமிழகம்
 1. மே 4: புதிய பாடத்திட்டத்தின் கீழ் 1, 6, 9, 11ம் வகுப்பு புத்தகங்களை முதல்வர் பழனிசாமி வெளியிட்டார். 
 2. மே 7: நெல்லை அருகே மணல் கொள்ளையை தடுத்த தனிப்பிரிவு போலீஸ்ஜெகதீஷ்துரை அடித்துக்கொலை. 
 3. மே 10: 'டார்ச்சர்' செய்த மகனை அடித்து கொன்ற எழுத்தாளர் சவுபா மதுரையில் கைது. ஜூன் 10ல் மரணம்.
 4. மே 22: தேயிலை துகள் மூலம் நுரையீரல் கேன்சர் செல்களை அழிக்கமுடியும் என பிரிட்டனின் ஸ்வான்சி, கோவை பாரதியார் பல்கலை விஞ்ஞானிகள் குழு கண்டு பிடிப்பு. 
 5. சூடு சோகம் - மே 22: துாத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை மூடக்கோரிய போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு. 13 பேர் பலி. மே 28ல் ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியீடு. டிச.,15ல் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி.

இந்தியா
 1. மே 1: இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையம் (ஐ.ஆர்.டி.ஏ.ஐ.,) தலைவராக சுபாஷ் சந்திர குந்த்யா தேர்வு. 
 2. மே 2: புதிதாக 20 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்க மத்திய அமைச்சரவையில் முடிவு.
 3. மே 10: இந்தியாவின் பிளிப் கார்ட் ஆன்லைன் நிறுவனத்தின் 77 சதவீத பங்குகளை அமெரிக்காவின் வால்மார்ட் வாங்கியது. 
 4. * உலகின் 2வது பழமையான பாறையாக ஒடிசாவின் சம்புவா பகுதி பாறை தேர்வு. இது 402 கோடி ஆண்டுகள் பழமையானது. 
 5. 'சீனியர்' பிரதமர் - மே 10: மலேசிய பிரதமராக மகாதீர் முகம்மது,92, பதவியேற்பு. இவரே உலகின் வயதான பிரதமர். இதற்குமுன் 1981 - 2003 வரை பிரதமராக இருந்தார். 
 6. மே 11: பிரதமர் மோடி நேபாளம் பயணம்.
 7. 'லக்கி' குமாரசாமி - மே 15: கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜ., 104, காங்., 78, ம.ஜ.த., 37 இடங்களில் வெற்றி. பா.ஜ., எடியூரப்பா முதல்வர். பெரும்பான்மை இல்லாததால் ராஜினாமா. மே 23ல் ம.ஜ.த., - காங்., கூட்டணி சார்பில் குமாரசாமி முதல்வர்.
 8. மே 21: பழம் தின்னி வவ்வால், பன்றி மூலம் பரவும் 'நிபா' வைரஸ் பாதிப்பால் கேரளாவில் 17 பேர் பலி. 
 9. *ஐ.என்.எஸ். தாரிணி கப்பலில் லெப்டினென்ட் கமாண்டர் வர்திகா. ஜோஷி தலைமையில் ஆறு பெண் மாலுமிகள், 5 நாடுகள், 4 கண்டங்கள், 3 பெருங்கடல்களை சுற்றி வந்தனர். 
 10. மே 22: எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார் இளம் இந்திய பெண் சிவாங்கி பதக் (வயது 16). 
 11. *மலேசியாவின் முதல் சீக்கிய அமைச்சராக இந்திய வம்சாவளி கோவிந்த் சிங் தேவ் நியமனம். 
 12. மே 24 : நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே இந்தியா வருகை. 
 13. மே 27: மீரட் எக்ஸ்பிரஸ் சாலை மற்றும் கிழக்கு புறவழிச் சாலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
 14. *எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார் வயதான இந்திய பெண்மணி சங்கீதா பால் (வயது 53). 
 15. மே 29: இந்தோனேசியா, சிங்கப்பூருக்கு பிரதமர் மோடி பயணம். 

உலகம்
 1. மே 2: தென் ஆப்ரிக்காவின் கேப்டவுன் நகரின் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க அட்லாண்டிக் பனிப்பாறையை பயன்படுத்த திட்டம். 
 2. மே 3: உலகின் பெரிய கண்ணாடி மாளிகை பிரிட்டனில் உள்ள 'கியூ' தாவரவியல் பூங்காவில் மீண்டும் திறப்பு. 
 3. மே 4: நியூயார்க் நகர சிவில் நீதிமன்ற இடைக்கால நீதிபதியாக இந்திய வம்சாவளி பெண் தீபா நியமனம். 
 4. *உலகில் மிக அதிக விமானங்கள் பறக்கும் பாதையாக மலேசியா -சிங்கப்பூர் வான் வழி பாதை தேர்வு. 
 5. மே 6: ஆப்கனில் வாக்காளர் பதிவு மையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 30 பேர் பலி.
 6. மே 7: பாதுகாப்புக்கு அதிகம் செலவு செய்யும் நாடுகளில் அமெரிக்கா முதலிடம். இந்தியாவுக்கு 5வது இடம். 
 7. அசராத அதிபர் - மே 7: ரஷ்ய அதிபராக விளாடிமிர் புடின் நான்காவது முறையாக பதவியேற்பு. இதற்கு முன் 2000, 2004, 2012ல் அதிபராக இருந்துள்ளார். 1999, 2008 என இரண்டு முறை ரஷ்ய பிரதமராகவும் பதவி வகித்துள்ளார்.
 8. மே 8: ஈரான் உடனான அணு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அமெரிக்கா அறிவிப்பு. 
 9. மே 13: நல்லெண்ண அடிப்படையில் வடகொரிய சிறையில் இருந்த மூன்று அமெரிக்கர்கள் விடுதலை. 
 10. மே 15: ரஷ்யாவின் பிரதமராக டிமிட்ரி மெத்வதேவ் மீண்டும் தேர்வு. 
 11. *சிங்கப்பூரின் ஆட்சி மொழியாக தமிழ் தொடரும்.
 12. மே 16: எவரெஸ்ட் சிகரத்தில் அதிகமுறை (22 முறை) ஏறி நேபாளத்தின் கமி ரிதா ஷெர்பா சாதனை.
 13. *அமெரிக்காவுக்குப்பின் இஸ்ரேலின் ஜெருசலேமில் துாதரகம் திறந்த நாடானது கவுதமாலா. 
 14. மே 17: மலேசிய முன்னாள் பிரதமர் அன்வர் இப்ராஹிம் சிறையில் இருந்து விடுதலை. 
 15. மே 19: உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் ரஷ்யாவில் திறப்பு. 
 16. ஹாரி 'ஜாலி' - மே 19: பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் பேரனும், சார்லஸ் - டயானா தம்பதியினரின் இரண்டாவது மகனுமான இளவரசர் ஹாரி - அமெரிக்க நடிகை மெகன் மெர்கல் திருமணம் கோலாகலமாக நடந்தது. 
 17. மே 21: வெனிசுலாவின் அதிபராக நிகோலஸ் மதுரோ மீண்டும் தேர்வு. 
 18. மே 22: துருக்கி அதிபர் எர்டோகனுக்கு எதிராக 2016ல் ராணுவ புரட்சியில் ஈடுபட்ட 104 வீரர்களுக்கு ஆயுள் தண்டனை
 19. மே 25: கரீபியன் தீவு நாடான பார்படாசின் முதல் பெண் அதிபராக மியா மோட்லே தேர்வு.
 20. மே 26: காங்கோவின் மொம்போயா ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 50 பேர் பலி. 
 21. மே 28: அயர்லாந்தில் கருக்கலைப்புக்கு விதிக்கப் பட்ட தடை சட்டம் நீக்கம். 

டாப் 3
 1. மே ‑ 8: 'போர்ப்ஸ்' பத்திரிகை வெளியிட்ட 'உலகின் வலிமையான தலைவர்கள்' பட்டியலில் சீன அதிபர் ஜி ஜின்பிங் முதலிடம். 
 2. மே 10: கலாமுக்கு பின் காஷ்மீரில் உள்ள சியாச்சின் ராணுவ முகாமுக்கு சென்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த். 
 3. மே 15: முழுவதும் சோலார் மின்சாரத்தில் இயங்கும் நாட்டின் முதல் ரயில் நிலையமானது கவுகாத்தி.EmoticonEmoticon