Current Affairs March 2018 A Glance in Tamil

Current Affairs-2018 in Tamil,
Dinamalar ,TNPSC, UGC-NET, RRB, IBPS and othe competitive Examination



மார்ச்  2018 - ஒரு பின்னோக்கிய பார்வை 
தமிழகம்
 1. மார்ச்1: தமிழக எம்.எல்.ஏ.,க் களுக்கு சம்பள உயர்வு. புதியது ரூ.1.05 லட்சம், பழையது ரூ.55 ஆயிரம். 
 2. மார்ச் 5: விலங்குகள் நல வாரிய தலைமையகம் சென்னையிலிருந்து, ஹரியானாவுக்கு மாற்றம். 
 3. மார்ச் 7: திருவெறும் பூரில் இன்ஸ்பெக்டர் காமராஜ் எட்டி உதைத்ததில் பைக்கில் சென்ற கர்ப்பிணி உஷா பலி. கணவர் ராஜா படுகாயம். 
 4. கருகிய உயிர் - மார்ச் 11: தேனி அருகே குரங்கணியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 23 பேர் பலி. மீட்பு பணியில் விமானப்படை ஹெலிகாப்டர் ஈடுபட்டது.
 5. மார்ச்15: ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ., தினகரன் அ.ம.மு.க., கட்சி துவக்கம். 
 6. மார்ச்25: நாட்டில் முதன்முறையாக கோவையில் பூச்சி அருங்காட்சியகம் திறப்பு. 
இந்தியா
 1. மார்ச்1: ரயில்களில் பயணிகள் முன்பதிவு விபரம் ஒட்டப்படாது என ரயில்வே அறிவிப்பு. 
 2. மார்ச் 2: வியட்நாம் அதிபர் டிரன் டாய் இந்தியா வருகை. 
 3. மார்ச்6: மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி (என்.பி.பி.,), பா.ஜ., இணைந்து கூட்டணி ஆட்சி. முதல்வராக என்.பி.பி.,யின் மகான்ராட் சர்மா பொறுப்பேற்பு.
 4. * 2017 -18ல் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்குவதில் சவுதியை முந்தி ஈராக் முதலிடம். 
 5. மார்ச்7: பெங்களூருவில் நாட்டின் முதல் ஹெலிகாப்டர் போக்குவரத்து துவக்கம். 
 6. மார்ச்8: நாகாலாந்து சட்ட சபை தேர்தலில் என்.டி.பி.பி. - பா.ஜ., கூட்டணி ஆட்சி. முதல்வராக என்.டி.பி.பி.,யின் நெபியு ரியோ பதவியேற்பு. 
 7. * தெலுங்குதேசம் கட்சியின் மத்திய அமைச்சர்கள் கஜபதி ராஜூ, ஒய்.எஸ்.சவுத்ரி ராஜினாமா. 
 8. மார்ச்9: கர்நாடகா தனி கொடி அறிமுகம். மத்திய அரசு அனுமதிக்கவில்லை. 
 9. *பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் இந்தியா வருகை. 
 10. மார்ச் 11: மகாராஷ்டிராவில் கடன் தள்ளுபடி கோரி மும்பையை நோக்கி விவசாயிகள் நடைபயணம். 
 11. *சர்வதேச சோலார் கூட்டமைப்பின் முதல் மாநாடு டில்லியில் நடந்தது. 
 12. *வங்கியில் ரூ.50 கோடிக்கு மேல் கடன் வாங்க பாஸ்போர்ட் அவசியம்.
 13. மார்ச் 12: அந்தமானில் முதன்முறையாக 11 நாடுகளைச் சேர்ந்த கப்பல்படை பயற்சி முகாம் நடந்தது. 
 14. மார்ச்14: நாட்டின் உயரமான (360அடி) தேசியக்கொடி கர்நாடகாவின் பெல்காமில் நிறுவப்பட்டது. 
 15. மார்ச்16: மணிப்பூரின் இம்பாலில் 105வது அறிவியல் காங்., மாநாடு நடந்தது. 
 16. மார்ச்19: லிங்காயத் பிரிவினரை தனி மதமாக அறிவிக்கும்படி மத்திய அரசுக்கு கர்நாடகா பரிந்துரை.
 17. மார்ச்20: ஈராக்கில் 2017ல் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் பலியானதாக மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு
 18. மார்ச்22 : ஜெர்மனி அதிபர் பிராங்க் வால்டர் ஐந்து நாள் பயணமாக இந்தியா வருகை. 
 19. ஆம் ஆத்மி வெற்றி - மார்ச் 22 : டில்லியில் ஆளும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்கள் 20 பேர் ஆதாயம் தரும் அரசு பதவி வகித்ததாக தேர்தல் ஆணைய பரிந்துரைப்படி ஜனாதிபதி தகுதி நீக்கம் செய்தார். இது செல்லாது என டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
 20. மார்ச் 23: கேரளாவின் மாநில பழமாக பலாப்பழம் தேர்வு.
 21. *வலுவான லோக்பால் சட்டம் இயற்றக்கோரி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே உண்ணாவிரதம். 
 22. *ராஜ்யசபாவில் 59 காலி இடங்களுக்கான தேர்தலில், பா.ஜ., 28ல் வெற்றி. காங்., 10, திரிணமுல் காங்., 4 இடங்களில் வென்றன. 
 23. மார்ச் 26: பெங்களூரு தமிழ் சங்கத்துக்கு, கர்நாடக அரசு 2 ஏக்கர் நிலம் வழங்கியது.
 24. மார்ச்27: ஆசியாவின் பெரிய துலிப் மலர் தோட்டம் காஷ்மீரில் திறப்பு. 
 25. மார்ச்28: மத்திய அரசின் தலைமை அறிவியல் ஆலோசக ராக விஜய் ராகவன் நியமனம். 
உலகம்
 1. மார்ச் 9: திரிபுரா சட்டசபை தேர்தலில் 60 தொகுதிகளில் 44 தொகுதிகளை கைப்பற்றி முதல் முறையாக பா.ஜ., ஆட்சியை பிடித்தது. முதல்வராக பிப்லப் குமார் பொறுப்பேற்பு. 25 ஆண்டு மார்க்சிஸ்ட் ஆட்சி முடிவுக்கு வந்தது. 
 2. மார்ச் 11: சீனாவில் இரண்டு முறைக்கு மேல் அதிபராக முடியாது- விதிமுறை நீக்கம்.
 3. மார்ச்12: வங்கதேசத்தில் இருந்து காத்மாண்டு சென்ற விமானம் விபத்து. 49 பேர் பலி. 
 4. மார்ச்14: நேபாள அதிபர் தேர்தலில் பித்ய தேவி பண்டாரி வெற்றி. 
 5. மார்ச்15: பாகிஸ்தான் பார்லி மென்ட் சபாநாயகர் அயாஸ் சாதிக் வெளிநடப்பு. 
 6. மார்ச் 16: ஜெர்மனி பிரதமராக ஏஞ்சலா மெர்கல் நான்காவது முறையாக தேர்வு.
 7. மார்ச்18: சீன அதிபராக ஜி ஜின்பிங் இரண்டாவது முறையாக தேர்வு. 
 8. மார்ச்22: வாழத்தகுந்த நகரங்களின் பட்டியலில் ஆஸ்திரிய தலைநகர் வியன்னா முதலிடம். 
 9. மார்ச்23: உலகின் சிறந்த விமான நிலையமாக சிங்கப்பூர் தொடர்ந்து 6வது ஆண்டாக தேர்வு. 
 10. 'குட்-பை' - மார்ச் 25: மும்பை மஜகான் கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்பட்டு 1985ல் கப்பல்படையில் சேர்க்கப்பட்ட போர்க்கப்பல் ஐ.என்.எஸ். கங்கா கப்பல்படையில் இருந்து விடுவிப்பு. 
 11. மார்ச்26: பாகிஸ்தான் ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில் முதன்முறையாக இந்திய அதிகாரிகள் பங்கேற்பு. 
 12. மார்ச்29: நோபல் பரிசு பெற்ற யூசுப் மலாலா 2012க்குப் பின் முதல்முறையாக பாகிஸ் தான் வருகை. 
 13. மார்ச் 30: மியான்மர் அதிபராக வின் மியின்ட் தேர்வு.
டாப் 3
 1. மார்ச் 25: சென்னை - சேலம் பயணிகள் விமான சேவையை முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார். தினமும் மூன்று விமானங்கள் இயக்கம்.
 2. மார்ச் 3: கர்நாடகாவில் 2000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் உலகின் பெரிய சோலார் பார்க் திறப்பு.
 3. மார்ச்24: கால்நடை தீவன நான்காவது ஊழல் வழக்கில் பீஹார் முன்னாள் முதல்வர் லாலுவுக்கு 14 ஆண்டு ஜெயில், ரூ. 60 லட்சம் அபராதம். 



EmoticonEmoticon