Current Affairs Judgement-2018 A Glance in Tamil | தீர்ப்புகள் 2018

Current Affairs-2018 in Tamil,
Dinamalar ,TNPSC, UGC-NET, RRB, IBPS and othe competitive Examination



தீர்ப்புகள்  2018 - ஒரு பின்னோக்கிய பார்வை

உச்சநீதிமன்றத்தின் சில தீர்ப்புகள் திருப்பத்தை ஏற்படுத்தின.

சபரிமலை
கேரளாவில் உள்ள சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு. 

ஆதார்
அரசியல் சாசனப்படி, ஆதார் செல்லும் என தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு. மானியம் போன்றவற்றுக்கு ஆதார் கட்டாயம், அலைபேசி போன்ற தனியார் நிறுவனங்களுக்கு ஆதார் கட்டாயமில்லை. 

ஓரினச் சேர்க்கை
ஓரினச் சேர்க்கை குற்றம் எனக்கூறும் சட்டப்பிரிவு 377ஐ நீக்கி, உச்சநீதிமன்ற பெஞ்ச் தீர்ப்பு. 

தகாத உறவு
திருமண வாழ்க்கையை மீறி மற்றொருவருடன் தகாத உறவை வைத்துக்கொள்வதை குற்றமாக பார்க்கும் 497வது சட்டப்பிரிவை நீக்கி தீர்ப்பு. 

காதல் திருமணம்
ஜாதி மறுப்பு, காதல் திருமணம் செய்பவர்களின் மீதான தாக்குதலை தடுக்கக்கோரி ஷக்தி வாஹினி தொண்டு நிறுவன (டில்லி) வழக்கில், ''வயது வந்த ஆணும், பெண்ணும் அவரவர் விருப்பப்படி காதல் திருமணம் செய்ய முழு உரிமை உள்ளது. தாக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என தீர்ப்பு.

நேரடி ஒளிபரப்பு
முக்கிய வழக்குகளை நேரடி ஒளிபரப்ப வேண்டும் என்ற வழக்கில், ''நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது என தெரிந்துகொள்ள மக்களுக்கு முழு உரிமையுண்டு. 
முக்கிய வழக்கு விசாரணைகளை நேரலை செய்யலாம். இதனால் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும்'' என தீர்ப்பு. 

பட்டாசு வெடிக்கலாமா
பட்டாசு வெடிப்பதற்கான விவகாரத்தில், ''தீபாவளி, பிற விழா காலங்களில் நாடு முழுவதும் இரவு 8 - 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். கிறிஸ்துமஸ், புத்தாண்டில் நள்ளிரவு 11:55 - 12:30 வரை பட்டாசு வெடிக்கலாம் என தீர்ப்பு.

அயோத்தி வழக்கு
அயோத்தி வழக்கில், ''1994ல் வழங்கப்பட்ட தீர்ப்பில் எந்த மாற்றமும் செய்ய தேவையில்லை. அயோத்தி வழக்கை, அரசியல்சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை'' என தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் அசோக் பூஷண் தீர்ப்பு. 

தனிப்பட்ட விருப்பம்
தியேட்டர்களில் தேசிய கீதம் இசைப்பது கட்டாயமல்ல. விருப்பப்பட்டால் இசைக்கலாம். அப்போது அதற்குரிய மரியாதை தர வேண்டும் என தீர்ப்பு.






EmoticonEmoticon