Current Affairs January 2018 A Glance in Tamil

Current Affairs-2018 in Tamil,
Dinamalar ,TNPSC, UGC-NET, RRB, IBPS and othe competitive Examinationஜனவரி  2018 - ஒரு பின்னோக்கிய பார்வை 


தமிழகம்
 1. ஜன.,4: இலங்கை கடற் படையினரால் 13 தமிழக மீனவர்கள் கைது
 2. ஜன.,11: ஊதிய உயர்வு வலியுறுத்தி போக்கு வரத்து தொழிலாளர்கள் நடத்திய ஏழு நாள் ஸ்டிரைக் முடிவு.
 3. ஜன.,15: இந்திய விண்வெளி ஆய்வு மைய தலைவராக கன்னியா குமரியை சேர்ந்த சிவன் பொறுப்பேற்பு. 
 4. *இந்தியா - ஜப்பான் கடலோர காவல் படையின் கூட்டுப் பயிற்சி சென்னையில் நடந்தது.
 5. ஜன.,19: தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்வு. 
 6. ஜன.,30: உடன்குடியில் ரூ.10,453 கோடியில் அனல் மின் நிலையத்துக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல்.


இந்தியா
 1. ஜன.,5: புதிய பத்து ரூபாய் ரிசர்வ் வங்கி அறிமுகம். 
 2. ஜன.,9: பீஹாரில் எலக்ட்ரானிக் சிகரெட் உற்பத்தி பயன்படுத்த தடை. 
 3. *'பிராட்யூஷ்' என்ற நாட்டின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டரை புனேயில் உள்ள இந்திய வெப்பமண்டல வானிலை நிறுவனம் உருவாக்கியது. 
 4. நுாறு 'ஜோரு': ஜன., 12: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 'பி.எஸ்.எல்.வி.,சி - 40' ராக்கெட் மூலம் 'கார்டோசாட்' உள்ளிட்ட 31 செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டன. 'இஸ்ரோ'வின் 100வது செயற்கைக்கோள் 'கார்டோசாட்'.
 5. வீதிக்கு வந்த 'நீதி' - ஜன., 12: உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் ஜே.சலமேஸ்வர், ரஞ்சன் கோகோய், எம்.பி. லோகுர், குரியன் ஜோசப் முதன்முறையாக பத்திரிகையாளர் சந்தித்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது புகார் தெரிவித்தனர்.
 6. ஜன.,14: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு இந்தியா வருகை. 
 7. ஜன.,17: 'ஹஜ்' பயணி களுக்கான மானியத்தை நிறுத்த மத்திய அரசு முடிவு. 
 8. சாகசம் - ஜன., 17 : இந்திய விமான படையின் அதிவேக 'சுகோய் 30' ரக போர் விமானத்தில் பயணித்த முதல் பெண் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன். 
 9. ஜன.,18: பதினான்கு வகை பத்து ரூபாய் நாணயங்களும் செல்லும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு. 
 10. ஜன.,19: தேசிய பாதுகாப்பு படையின் இயக்குநராக சுதீப் லக்தாகியா தேர்வு. 
 11. ஜன.,22: சத்தீஸ்கரில் முதல் குப்பை விழிப்புணர்வு திருவிழா நடந்தது. 
 12. *புதுச்சேரியில் தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் மையம் துவக்கம். 
 13. *டில்லியில் பாவனா பட்டாசு தொழிற்சாலை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் பலி. 
 14. ஜன.,23: தலைமை தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் பொறுப்பேற்பு. 
 15. *விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக சோம்நாத் பொறுப்பேற்பு. 
 16. *ம.பி., கவர்னராக ஆனந்தி பென் படேல் பொறுப்பேற்பு. 
 17. *அணை பாதுகாப்பு சர்வதேச மாநாடு திருவனந்தபுரத்தில் நடந்தது. 20 நாடுகள் பங்கேற்றன.
 18. *டில்லியில் இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாதி அப்துல் சுவான் குரேஷி கைது. 2009 ஆமதாபாத் குண்டுவெடிப்பில் மூளையாக செயல்பட்டவன். 
 19. ஜன.,25: கால்நடை தீவன மூன்றாவது வழக்கில் பீஹார் முன்னாள் முதல்வர் லாலுவுக்கு ஐந்தாண்டு ஜெயில். ரூ.10 லட்சம் அபராதம். 
 20. ஜன.,28: ஆசியாவின் பெரிய சொட்டு நீர் பாசனத்திட்டம் கர்நாடகாவில் துவக்கம். 
 21. * ஆக்ஸ்போர்டு அகராதியின் 2017ம் ஆண்டுக்கான சிறந்த இந்தி வார்த்தையாக 'ஆதார்' தேர்வு. 
 22. ஜன.,30: தபால் ஊழியர் களுக்கு புதிய சீருடை அறிமுகம். 
 23. ஜன.,31: 'ஐ.என்.எஸ்., கரன்ஜ்' நீர்மூழ்கி கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு. 
 24. ஜன.,31: உலகின் பணக்கார நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு ஆறாவது இடம். 


உலகம்
 1. ஜன.,2: சவுதி, யு.ஏ.இ.,யில் முதன்முறையாக 'வாட்' வரி அறிமுகம். 
 2. *விபத்துகளை குறைக்க எவரெஸ்ட் சிகரத்தில் தனி நபராக ஏற நேபாள அரசு தடை. 
 3. ஜன.,6: உலகில் முதன் முதலாக ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் ஊதியம் வழங்கும் சட்டம் ஐஸ்லாந்தில் அமல். 
 4. ஜன.,8: மனிதாபிமான அடிப்படையில் 147 இந்திய மீனவர்களை பாக்., விடுவித்தது. 
 5. ஜன.,9: சீனாவில் உலகின் பெரிய ஐஸ் திருவிழா நடந்தது.
 6. *துவக்க பள்ளிகளில் ஆங்கில வழி கல்விக்கு ஈரான் தடை. 
 7. கடல் காவலன் - ஜன., 10: கடலோர காவல் படையின் 'சார்லி - 435' போர்கப்பல் காரைக்காலில் பணியை துவக்கியது. இது சென்னை - கன்னியாகுமரி வரை கிழக்கு கடலோர பாதுகாப்பு, மீனவர் மீட்புப்பணியில் ஈடுபடும். 
 8. ஜன.,13: ஆண்கள் துணை யின்றி 25வயதுக்கு மேற்பட்ட பெண்கள் சவுதி வர அனுமதி. 
 9. ஜன.,14: தெற்கு சூடானில் மழையால் இடிந்த 985 அடி நீள பாலத்தை 10 நாட்களில் ஐ.நா., அமைதிப்படையில் உள்ள இந்திய வீரர்கள் அமைத்தனர். 
 10. ஜன.,17: சீனாவில் 330 அடி உயர உலகின் பெரிய காற்று சுத்திகரிப்பு டவர் நிறுவப்பட்டது. *மெக்சிகோவில் துலும் கடற்கரை அருகே 347 கி.மீ. நீளமுள்ள உலகின் பெரிய நீர்வழிக் குகை கண்டுபிடிப்பு. 
 11. மோடி 'ரெண்டு' - ஜன., 24: சுவிட்சர்லாந்தில் நடந்த உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்ற இரண்டாவது இந்திய பிரதமர் மோடி. 70 நாடுகளின் தலைவர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். இந்தியாவிலிருந்து 130 நிறுவனங்களின் சி.இ.ஓ.,க்கள் பங்கேற்பு.
 12. ஜன.,28: ஆப்கானிஸ்தானின் காபூலில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 96 பேர் பலி. 
 13. ஜன.,29: எகிப்து, ஈரான், ஈராக், லிபியா, சோமாலியா, சிரியா, ஏமென், வடகொரியா உள்ளிட்ட 11 நாடுகளின் அதிகளுக்கு அமெரிக்கா வர தடை.

டாப் 3
 1. ஜன., 4: கால்நடை தீவன 2வது ஊழல் வழக்கில் பீஹார் முன்னாள் முதல்வர் லாலுவுக்கு மூன்றரை ஆண்டுகள் ஜெயில். 
 2. ஜன.,26: வரலாற்றில் முதன்முறையாக இந்திய குடியரசு தின சிறப்பு விருந்தினராக பத்து ஆசிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு.
 3. ஜன.,31: உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு சம்பளம் உயர்வு. பழையது ரூ.90 ஆயிரம், புதியது ரூ.2.25 லட்சம்


EmoticonEmoticon