Current Affairs-2018 in Tamil,
Dinamalar ,TNPSC, UGC-NET, RRB, IBPS and othe competitive Examination
கண்டுபிடிப்பு 2018 - ஒரு பின்னோக்கிய பார்வை
- உலகளவில் சிறந்த தொழில்நுட்பங்களை, ஆண்டுதோறும் அமெரிக்காவின் 'டைம்' இதழ் வெளியிடுகிறது. இவற்றில் சில....
- வீட்டுக்குள் சூரியன் காலையில் சீக்கிரமாக எழுவதற்கு சூரியன் போல பிரத்யேக விளக்கை உருவாக்கிய உள்ளனர். இதில் நாம் எழ வேண்டிய நேரத்தை 'செட்' செய்து கொண்டால் சரியான நேரம் வந்தவுடன் இதிலிருந்து சூரியக்கதிர் போன்ற வெளிச்சம் அறை முழுவதும் நிரம்பி விடும். மெல்லிய இசையும் ஒலிக்க புத்துணர்வு தரும். எவ்வித எரிச்சலும் இல்லாமல் எழ முடியும். விலை ரூ. 14,000
- குழந்தைகள் காணாமல் போவதை தடுக்க 'லின்க்' கருவி உருவாக்கப்பட்டுள்ளது. இதை பெற்றோர், குழந்தைகள் கையில் பொருத்த வேண்டும். 4.5 கி.மீ., துாரத்திற்குள் குழந்தைகள் தொலைந்தால் கருவியின் 'டிஜிட்டல்' திரையில் இருவரும் எந்த திசையில், துாரத்தில் உள்ளதை காட்டும். இது ஒன்று சேர்க்க உதவும். விலை ரூ. 15,000
- பயணத்தின் நண்பன்பயணத்தில் அதிகமான துணி, பொருட்களை வைத்துக்கொள்ள புதிய வகை 'கேரி ஆன் குளோசெட்' சூட்கேஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள துணியால் செய்யப்பட்ட 6 அடுக்கு அலமாரி, விரித்து சுருக்கும் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. துணி, 'ஷூ' என எதை வேண்டும் என்றாலும் வைத்துக் கொள்ளலாம். எளிதாக இழுத்துசெல்ல 'வீல்' தரப்பட்டுள்ளது. விலை ரூ. 14,000.
- 'ரோபோ கிளீனர் வீட்டை சுத்தம் செய்ய 'ஐ ரோபோட்' கருவி கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதன் 'சிப்பில்' நம் அலைபேசியின் 'வை பை' மூலம் உத்தரவு தர முடியும். சுத்தம் செய்ய நேரம், இடத்தை குறித்துவிட்டால், தானாகவே பணியை துவக்கும். பின் 'சார்ஜரில்' உள்ள கருவியுடன் இணைந்துவிடும். இதிலுள்ள துாசி மேல்நோக்கி மற்றொரு கருவியில் சேரும். விலை ரூ. 68,000.
EmoticonEmoticon