Current Affairs September 2018 A Glance in Tamil

Current Affairs-2018 in Tamil,
Dinamalar ,TNPSC, UGC-NET, RRB, IBPS and othe competitive Examination


செப்டம்பர்  2018 - ஒரு பின்னோக்கிய பார்வை 
தமிழகம்
 1. செப்.,1: சேலத்தில் பஸ்கள் மோதிய விபத்தில் 7 பேர் பலி.
 2. செப்.,3: சென்னை - துாத்துக்குடி விமானத்தில் பா.ஜ., தலைவர் தமிழிசையுடன் மாணவி சோபியா வாக்குவாதம். கைதுக்குப் பின் சோபியா ஜாமினில் விடுவிப்பு.
 3. செப்.,5: குட்கா ஊழல் வழக்கில் டி.ஜி.பி. ராஜேந்திரன், அமைச்சர் விஜயபாஸ்கர், ஓய்வு பெற்ற சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் வீடுகளில் சி.பி.ஐ., வருமான வரி சோதனை. 
 4. * சென்னையில் ஆதரவாளர் களுடன் அழகிரி பேரணி. 
 5. செப்.,6: ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ஏழு பேரை விடுவிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு உள்ளது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு. 
 6. செப்.,10: சென்னை புழல் மத்திய சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை படங்கள் வெளியானது. 8 சிறை வார்டன்கள் இடமாற்றம்.
 7. செப்.,17: எம்.எல்.ஏ., எம்.பி.,க்கள் மீதான வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு தமிழக அரசு அனுமதி. 
 8. செப்.,23: முதல்வர், ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு கொலை மிரட்டல் மற்றும் அவதுாறு பேச்சு புகாரில் நடிகர், எம்.எல்.ஏ., கருணாஸ் கைது. செப்.,29ல் ஜாமினில் விடுதலை.
 9. செப்.,27: தொழிலதிபர் ரன்வீர் ஷா வீட்டில் 89 சிலைகள் மீட்பு. 
 10. செப்.,30: தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர். நுாற்றாண்டு விழா நிறைவு மாநாடு சென்னையில் நடந்தது.

இந்தியா
 1. செப்.,6: 2019 ஏப்ரலுக்கு பதிலாக முன்பே தேர்தலை சந்திக்க தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் சட்டசபையை கலைக்க கவர்னரிடம் மனு. ஜனாதிபதி ஆட்சி அமல். 
 2. செப்.,10: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தேஜாஸ் போர் விமானத்துக்கு முதன் முறையாக நடுவானில் எரி பொருள் நிரப்பி சாதனை. 
 3. * 2007ல் ஐதராபாத் குண்டுவெடிப்பு வழக்கில் இரண்டு இந்திய முஜாகிதீன் பயங்கரவாதிகளுக்கு ஐதராபாத் உயர்நீதிமன்றம் துாக்கு தண்டனை.
 4. செப்.,11; தெலுங் கானா ஜக்தியால் மாவட்டத்தில் மலையில் இருந்து பஸ் கவிழ்ந்ததில் 52 பேர் பலி.
 5. செப்.,14: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, செர்பியா, மால்டா, ருமேனியாவுக்கு பயணம். 
 6. செப்.,16: நாட்டின் முதல் நாய்கள் பூங்கா ஐதராபாத்தில் திறப்பு. 
 7. * காஷ்மீர் எல்லையில் நவீன லேசர் பாதுகாப்பு வேலி அமைக்கும் திட்டத்தை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் துவக்கினார். 
 8. நம்பியை நம்புங்க - செப்., 16: 'இஸ்ரோ' ரகசியம் வெளிநாட்டுக்கு விற்றது பொய் வழக்கு என நிரூபித்த நம்பி நாராயணனுக்கு, கேரள அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு.
 9. செப்.,18: வங்கதேச ரோஹிங்கியா அகதிகளுக்கு இந்தியா மூன்றாவது கட்ட நிவாரணப் பொருட்களை அனுப்பியது.
 10. செப்.,19: ஆப்கன் அதிபர் அஷ்ரப் கானி. இந்தியா வருகை. 
 11. கருப்பு 'ஆடு' - செப்., 21: கேரளாவின் கோட்டயம் குருவிலங்காடு சர்ச்சில் பணியாற்றிய கன்னியாஸ்திரி, பிஷப் பிரான்கோ முள்ளக்கல் மீது பாலியல் புகார். நடவடிக்கை கோரி கன்னியாஸ்திரிகள் போராட்டம். பிரான்கோ கைது. 
 12. நலம் வாழ... - செப்., 23: 'ஆயுஷ்மான் பாரத்' என்ற உலகின் பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை பிரதமர் மோடி துவக்கினார். ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை சிகிச்சை பெறலாம். 10 கோடி குடும்பங்கள் பயன்பெறும். 
 13. செப்.,25: குற்றப்பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்ய வாய்ப்பில்லை. பார்லி மென்ட்டில் சட்டம் இயற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு.
 14. செப்.,28 : சீனாவுக்கான இந்திய துாதராக விக்ரம் மிஸ்ரி நியமனம்.

உலகம்
 1. செப்.,1: பாக்., உயர்நீதி மன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக தஹிரா சப்தார் நியமனம். 
 2. * மனிதஉரிமை கவுன்சில் தலைவராக சிலியின் மிச்செல் பாச்லெட் பொறுப்பேற்பு.
 3. செப்.,3: மியான்மர் அரசின் ரகசியங்களை வெளியிட்டதாக அந்நாட்டின் இரண்டு பத்திரிகை யாளர்களுக்கு ஏழாண்டு சிறை. 
 4. செப்.,9: பாகிஸ்தான் அதிபராக ஆரிப் ஆல்வி பொறுப்பேற்பு. 
 5. செப்.,11: ஜப்பானின் ஹொக்கைடா பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 44 பேர் பலி.
 6. செப்.,17 : அமெரிக்காவின் 'டைம்' பத்திரிகையை 'சேல்ஸ் போர்ஸ்' நிறுவனம் வாங்கியது. 
 7. செப்.,18: சிரியாவில் ரஷ்ய விமானத்தை தவறுதலாக ராணுவம் சுட்டுத்தள்ளியது. 
 8. * பாக்., பிரதமர் இம்ரான் கான் முதல் வெளிநாடாக சவுதி பயணம். 
 9. * ஐ.நா., சபையின் தலைவராக மரிய பெர்ணாண்டா பொறுப்பேற்பு. 
 10. செப்.,19: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், அவரது மகள் மரியம், மருமகன் சப்தார் ஆகியோரது சிறை தண்டனையை நிறுத்தி வைத்து இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு. 
 11. * ஐ.நா., சபை தலைமை அலுவலகத்தில் தென் ஆப்ரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு சிலை.
 12. பறக்கும் சிக்கிம் - செப்., 24: விமான நிலையம் இல்லாத ஒரே மாநிலம் சிக்கிம். இங்கு பாக்யாங் என்ற இடத்தில் மாநிலத்தின் முதல் விமானநிலையத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இது நாட்டின் 100வது விமான நிலையம் என்ற பெருமை பெற்றது. 
 13. செப்.,26: ஐ.எம்.எப்., வரலாற்றில் பெரிய கடன் தொகையை (ரூ. 41 லட்சம் கோடி) அர்ஜென்டினாவுக்கு வழங்கியது. 
 14. சுருட்டிய சுனாமி - செப்., 28: இந்தோனேஷியா சுலவேஷி தீவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து சுனாமி பேரலை தாக்கியது. இதில் 2,256 பேர் பலியாகினர். 1,075 பேர் காணாமல் போகினர். 

டாப் 3
 1. செப்., 17 : ஹைட்ரஜனில் இயங்கும் உலகின் முதல் ரயில் சேவை ஜெர்மனியில் துவக்கம். 
 2. செப்., 11: 1981க்கு பின் பிரம்மாண்ட ராணுவ ஒத்திகை நிகழ்ச்சியை ரஷ்யா நடத்தியது. மூன்று லட்சம் வீரர்கள், 36 ஆயிரம் பீரங்கிகள், 1,000 போர் விமானங்கள், 80 போர் கப்பல்கள் பங்கேற்பு. 
 3. செப்., 23: ஈரானில் நடந்த ராணுவ அணி வகுப்பில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 29 பேர் பலிEmoticonEmoticon