Current Affairs-2018 in Tamil,
Dinamalar ,TNPSC, UGC-NET, RRB, IBPS and othe competitive Examination
பிப்ரவரி 2018 - ஒரு பின்னோக்கிய பார்வை
தமிழகம்
- பிப்.,3: ரூ.30 லட்சம் லஞ்ச வழக்கில் பாரதியார் பல்கலை துணைவேந்தர் கணபதி கைது.
- பிப்.,10: முறைகேடு காரணமாக அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து.
- பிப்.,11: டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 - வி.ஏ.ஓ., தேர்வை 20 லட்சம் பேர் எழுதினர்.
- பிப்.,12: தமிழக சட்ட சபையில் ஜெ., படம் திறப்பு.
- பிப்.,19: சென்னை சிறுமி ஹாசினி கொலை வழக்கில் குற்றவாளி தஷ்வந்த்துக்கு, 36 ஆண்டுகள் ஜெயில், துாக்கு தண்டனை.
- 'குதித்தார்' - பிப்., 21: மதுரையில் 'மக்கள் நீதி மய்யம்' கட்சியை நடிகர் கமல் துவக்கம். இணைந்த கைகளுடன் கூடிய கொடி அறிமுகம். பேராசிரியர் ஞானசம்பந்தன், அடங்கிய உயர்மட்ட குழு நியமனம்.
- பிப்.,22: தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்ய பிரதா சாஹூ நியமனம்.
- பிப்.,24: தமிழக வனத் துறை சார்பில், தமிழ்நாடு மரக் களஞ்சியம்' செயலி அறிமுகம்.
- பிப்., 28: ஐ.என்.எஸ்., மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் கைது.
இந்தியா
- பிப்.,7: ஒரு ஓடுதளம் உள்ள உலகின் பெரிய விமான நிலையம் என்ற சாதனையை, மும்பை பெற்றது. இங்கு 24 மணி நேரத்தில் 980 விமானங்கள் இயக்கப்பட்டன. ஒரு நிமிடத்துக்கு ஒரு விமானம் பறந்தது.
- பிப்.,9: நாது லா பாதை வழியாக மானசரோவர் செல்ல இந்திய யாத்ரீகர்களுக்கு சீனா அனுமதி.
- பிப்.,10: அபுதாபியில் இந்து கோயிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல்.
- *வங்கிகள் கல்வி கடனுக்கு ஆன்லைன் விண்ணப்பத்தை மட்டும் ஏற்கும்படி மத்திய அரசு பரிந்துரை.
- *யுனானி மருத்துவம் சர்வதேச மாநாடு டில்லியில் நடந்தது.
- பிப்.,12: நியூ வேர்ல்டு வெல்த் நடத்திய ஆய்வில் உலக பணக்கார நகரங்களில் மும்பைக்கு 12வது இடம். நியூயார்க் முதலிடம்.
- * ஓமன், பாலஸ்தீனம், யு.ஏ.இ., நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்.
- பிப்.,13: சாகித்ய அகாடமியின் தலைவ ராக சந்திரசேகர கம்பரா நியமனம்.
- *டில்லியில் நாட்டின் முதல் ஆன்லைன் வானொலி 'ரேடியோ உமாங்' தொடக்கம்.
- பிப்.,15: பெங்களூருவில் முதல் எலக்ட்ரிக் கார் ரீசார்ஜ் நிலையம் அமைக்கப்பட்டது.
- பிப்.,16: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 11,200 கோடி முறைகேடு தொடர்பாக நிரவ் மோடியின் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத் துறை சோதனை.
- *காவிரி நடுவர்மன்ற மேல் முறையீட்டில், கர்நாடகா தமிழகத்திற்கு ஆண்டுக்கு திறக்கப்படும் தண்ணீர் 177.25 டிஎம்சியாக குறைப்பு
- பிப்.,17: ஈரான் அதிபர் ஹூசைன் ருஹானி இந்தியா வருகை.
- பிப்.,18: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஏழு நாள் பயணமாக இந்தியா வருகை.
- பிப்.,22: முழுவதும் பெண்கள் பணியாற்றும் இடமாக ஜெய்ப்பூரின் காந்தி நகர் ரயில் நிலையம் மாற்றம்.
- பிப்.,23: பீஹாரில் 4 நாளில், 11,244 கழிப்பறைகள் கட்டி சாதனை
- வானில் அவானி - பிப்., 24: விமானப்படையின் 'எம்.ஐ.ஜி. 21', அதிவேக போர் விமானத்தை ஓட்டிய முதல் பெண்மணி என்ற சாதனையை அவானி சதுர்வேதி,24, படைத்தார்.
- பிப்.,27: ஜோர்டான் மன்னர் அப்துல்லா இரண்டாம் பின் அல்-ஹூசைன் இந்தியா வருகை.
- *ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான நீலநிற ஆதார் கார்டு திட்டம் துவக்கம்.
உலகம்
- பிப்.,6: 15 நாள் அவசரநிலை பிரகடனத்தை மாலத்தீவு அதிபர் அப்துல்லா யமீன் அறிவித்தார்.
- பிப்.,7: வங்கதேச அதிபராக அப்துல் ஹமீது மீண்டும் தேர்வு.
- *வங்கதேச முன்னாள் அதிபர் கலிதா ஜியாவுக்கு 5 ஆண்டு ஜெயில்.
- பிப்.,10: ஓமன் பாலை வனத்தில் செவ்வாய் கோள் மாதிரி ஆய்வை, 25 நாடுகளைச் சேர்ந்த 200 விஞ்ஞானிகள் நடத்தினர்.
- *வடகொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக்கில், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் -- தென் கொரிய அதிபர் மூன் முதல்முறையாக சந்திப்பு.
- *போக்குவரத்து நெரிசல் மிகுந்த நாடாக தாய்லாந்து, நகரமாக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் அறிவிப்பு
- பிப்.,12: ரஷ்யாவில் நிகழ்ந்த விமான விபத்தில் 71 பேர் பலி.
- உயரமான ஓட்டல் - பிப்., 13: உலகின் உயரமான 'ஜிவோரா' ஓட்டல் (1,168 அடி) துபாயில் திறப்பு. இதில் 75 மாடிகள் உள்ளன. 6 லிப்ட்கள், 528 தங்கும் அறைகள் உள்ளன. இரும்பு மற்றும் கான்கிரீட்டால் கட்டப்பட்டது. 12 ஆண்டுகள் பணி நடந்தது. இதற்கான செலவு ரூ. 951 கோடி.
- பிப்.,15: தென் ஆப்ரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா ராஜினாமா. சிரில் ரமபோசா அதிபரானார்.
- *அமெரிக்காவின் புளோரிடாவில் பள்ளியில் புகுந்த ஒருவன், நடத்திய துப்பாக்கி சூட்டில் 17 மாணவர்கள் பலி.
- பிப்.,16: துபாயில் நடந்த உலக அரசு மாநாட்டில், இந்தியாவின் ஆதார், உமாங் சிறந்த செயலிகளாக தேர்வு.
- பிப்.,17: நேபாள பிரதமராக சர்மா ஒலி நியமனம்.
- பிப்.,19: ஆண்களின் அனுமதியின்றி பெண்கள் தொழில் துவங்க சவுதி அரசு அனுமதி.
- பிப்.,22: மெய்நிகர் கரன்சியை அதிகாரப்பூர்வமாக ஏற்ற முதல் நாடு வெனிசுலா.
டாப் 3
- பிப்.,19: டில்லியில் பா.ஜ.,வின் புதிய தலைமையக கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். உலகின் பெரிய கட்சி அலுவலகம் இது.
- பிப்.,24: முன்னாள் முதல்வர் ஜெ.,யின் 70வது பிறந்தநாளில் பெண்களுக்கான மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கினார்.
- பிப்.,7: உலகின் சக்திவாய்ந்த ராக்கெட்டை 'ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனம் விண்ணில் ஏவியது
EmoticonEmoticon