Current Affairs December 2018 A Glance in Tamil

Current Affairs-2018 in Tamil,
Dinamalar ,TNPSC, UGC-NET, RRB, IBPS and othe competitive Examination


டிசம்பர் 2018 - ஒரு பின்னோக்கிய பார்வை,
தமிழகம்

 1. டிச., 4: சென்னையில் பெண்கள் தங்கும் விடுதியில் ரகசிய கேமரா பொருத்தி படம்பிடித்த சஞ்சீவி கைது. 
 2. டிச., 6: மேகதாதுவில் கர்நாடகா தடுப்பு அணை கட்டக்கூடாது என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம். 
 3. * புதுச்சேரியில் மூன்று நியமன எம்.எல்.ஏ.,க்கள் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு. 
 4. டிச., 13: பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் வருமான வரித்துறை விசாரணை
 5. டிச., 14: அ.ம.மு.க., வில் இருந்து விலகிய செந்தில் பாலாஜி தி.மு.க.,வில் சேர்ந்தார். 
 6. டிச., 16: தி.மு.க., தலைமை அலுவலகத்தில் மறைந்த கருணாநிதி சிலையை காங்., மூத்த தலைவர் சோனியா திறந்து வைத்தார்.
 7. டிச., 18: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல். 
 8. டிச., 19: சென்னையில் ஐந்து ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை அளித்த டாக்டர் ஜெயச்சந்திரன் மரணம்.
 9. டிச., 24: சாத்துாரில் எய்ட்ஸ் பாதித்த ரத்தத்தை கர்ப்பிணிக்கு செலுத்தியதால் அப்பெண் பாதிப்பு. 
 10. டிச., 26: பாம்பனில் ரூ. 250 கோடி செலவில் புதிய ரயில் பாலம் அமைக்கப்படும் என ரயில்வே அறிவிப்பு.
 11. டிச., 29: எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தராக சுதா சேஷையன் நியமனம்.


இந்தியா

 1. டிச., 2: இந்திய தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா பொறுப்பேற்பு. 
 2. டிச., 4: செய்தி களில் அதிகம் இடம் பெற்றவர்களின் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம். 
 3. டிச., 5: ஹெலி காப்டர் ஊழல் வழக்கில் இடைத் தரகராக செயல்பட்ட கிரிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல் நீதிமன்றத்தில் ஆஜர். 
 4. டிச., 6: ரூபாய் மதிப்பில் கச்சா எண்ணெய் வழங்க ஈரான்-- இந்தியா ஒப்பந்தம்.
 5. டிச., 7: இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமனம்.
 6. டிச., 9: கேரளாவின் கண்ணுாரில் சர்வதேச விமான நிலையம் திறப்பு. 
 7. டிச., 11: ஐந்து மாநில தேர்தல். ராஜஸ்தான், மத்திய பிரேதசம், சத்தீஸ்கரில் காங்., வெற்றி. தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ்., மீண்டும் வெற்றி. 
 8. வங்கிக்கு 'சக்தி' - டிச., 11 : ரிசர்வ் வங்கி கவர்னராக சக்திகாந்த தாஸ் நியமனம். மத்திய அரசில் பல பொறுப்புகளை வகித்தவர். தமிழகத்திலும் பணியாற்றியவர். 
 9. டிச., 12: தெலுங்கானா முதல்வராக 2வது முறையாக சந்திரசேகர் பதவியேற்பு. 
 10. டிச., 14: 'ரபேல்' விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி. 
 11. * கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் அனுாரில் உள்ள கோயிலில் பிரசாதம் சாப்பிட்டதில் 11 பேர் பலி. 
 12. டிச., 15: மிசோரம் தேர்தலில் எம்.என்.எப்., கட்சியின் ஜோரம்தங்கா முதல்வரானார். 
 13. டிச., 17: காங்., சார்பில் ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட், துணை முதல்வராக சச்சின் பைலட் பதவியேற்பு. மத்தியபிரதேச முதல்வராக கமல்நாத், சத்தீஸ்கர் முதல்வராக பூபேஷ் பகேல் பதவியேற்பு. 
 14. * மாலத்தீவு பிரதமர் இப்ராகிம் இந்தியா வருகை.
 15. டிச., 20: காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி அமல்.
 16. டிச., 22: கம்ப்யூட்டர் மானிட்டர், டிவி உள்ளிட்ட 23 பொருட்களுக்கான ஜி.எஸ்.எடி. வரி குறைப்பு. 
 17. டிச., 25: அசாமின் பிரம்ம புத்திரா நதியின் குறுக்கே நாட்டின் நீளமான இரண்டடுக்கு 'ரயில்-சாலை' பாலத்தை பிரதமர் மோடி துவக்கினார். 21 ஆண்டுகள் பணி நடந்தது. 
 18. டிச., 27: முத்தலாக் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம். 
 19. டிச., 28: விண் வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ரூ. 10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. 


உலகம்

 1. டிச., 1: மெக்சிகோ அதிபராக ஆன்ட்ரஸ் மேனுவல் பொறுப்பேற்பு. 
 2. 'மஞ்சள்' மகிமை - டிச.,6: பிரான்சில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து ஆயிரக்கணக்கானோர் போராட்டம். இது 'மஞ்சள் ஜாக்கெட்' என அழைக்கப்பட்டது. இதனால் விலை உயர்வை அந்நாட்டு அரசு ஒத்திவைத்தது.
 3. வாவ்... வனேசா - டிச., 8: சீனாவில் 2018க்கான 'மிஸ் வேர்ல்டு' அழகி போட்டி நடந்தது. 118 பேர் பங்கேற்றனர். இதில் மெக்சிகோவின் வனேசா போன்ஸ் பட்டம் வென்றார். மெக்சிகோ சார்பில் பட்டம் வென்ற முதல் பெண். 
 4. டிச., 10: இந்திய வங்கிகளில் ரூ. 9 ஆயிரம் கோடி கடன்பெற்று திருப்பி செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிய மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு. 
 5. டிச., 12: பிரக்சிட் தொடர்பாக பிரிட்டன் பிரதமர் தெரசே மே மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி. 
 6. டிச., 13: அமெரிக்காவின் 'டைம்' பத்திரிகையின், 2018க்கான சிறந்த நபராக மறைந்த சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோகி தேர்வு. 
 7. மீண்டும் ரணில் - இலங்கையில் பிரதமர் ரணிலை நீக்கி, ராஜபக் ஷேவை பிரதமராக அதிபர் சிறிசேனா அக்.,26ல் நியமித்தார். ராஜபக் ஷேவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் டிச., 16ல் ரணில் மீண்டும் பிரதமரானார். 
 8. டிச., 17: பெல்ஜியம் பிரதமர் சார்லஸ் மைக்கேல் ராஜினாமா.
 9. டிச., 18: பாக்., சிறையில் இருந்து ஆறு ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவின் ஹமீது நிகல் அன்சாரி விடுதலை.
 10. விடாது துரத்தும் - டிச., 22: இந்தோனேசியாவில் சுமத்ரா - ஜாவா தீவுகளுக்கு இடையே அனாக் கிரகட்டோவா என்ற எரிமலை வெடித்ததால் சுனாமி அலை தாக்கியது. இதில் கடலோர பகுதிகளில் 420 பேர் பலியாகினர். 745 பேர் காயம். 
 11. டிச., 30: வங்கதேச பிரதமர் தேர்தலில் ஏற்பட்ட வன்முறையால் 17 பேர் பலி.


டாப் 3

 1. டிச., 18: மறைந்த ஜெயலலிதா சிகிச்சைக்கு ரூ. 6.85 கோடி செலவு என ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவமனை தகவல். 
 2. டிச., 21: நாட்டின் அனைத்து கணினிகளையும் கண்காணிக்க 10 விசாரணை அமைப்புகளுக்கு உள்துறை அமைச்சகம் அனுமதி. 
 3. டிச., 2: 'ஜி-20' நாடுகள் பங்கேற்கும் மாநாடு 2022ல் இந்தியாவில் நடைபெறும் என பிரதமர் மோடி அறிவிப்பு


EmoticonEmoticon