Current Affairs Awards 2018 A Glance in Tamil | விருதுகள் 2018

Current Affairs-2018 in Tamil,
Dinamalar ,TNPSC, UGC-NET, RRB, IBPS and othe competitive Examination


விருதுகள் 2018 - ஒரு பின்னோக்கிய பார்வை

ஆறு கிராமி - ஜன., 28: அமெரிக்க பாடகர் புருனோ மார்ஸ், இசை உலகின் உயரிய 6 கிராமி விருதுகளை வென்றார். 

நான்கு ஆஸ்கர் - மார்ச் 4: சிறந்த படம், இயக்கம், இசை, தயாரிப்பு என 4 ஆஸ்கர் விருதுகளை 'தி ஷேப் ஆப் வாட்டர்' (ஆங்கில மொழி) படம் பெற்றது.

மார்ச் 20: தமிழகத்தில் இருந்து பத்ம விபூஷண் விருதுக்கு இளையராஜா, பத்ம பூஷண் விருதுக்கு நாகசாமி, பத்ம ஸ்ரீ விருதுக்கு நன்னம்மாள், வாசுதேவன், விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், ரோமுலஸ் விட்டேகர் தேர்வு. 

மறையாத 'மயிலு' - மே 3: தேசிய அளவில் சிறந்த நடிகைக்கான விருதுக்கு மறைந்த ஸ்ரீதேவி தேர்வு. சிறந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். சிறந்த தமிழ் திரைப்படத்துக்கான விருதை 'டூ லெட்' படம் பெற்றது.

புக்கர் 'மில்க்மேன்' - அக்., 17 : இலக்கியத்துக்கான புக்கர் விருதுக்கு 'மில்க்மேன்' (ஆங்கில மொழி) நாவலை எழுதிய அயர்லாந்தின் அன்னா பர்ன்ஸ் தேர்வு. 

சாதித்த 'சஞ்சாரம்' - டிச., 5: தமிழ்மொழி பிரிவில் 'சஞ்சாரம்' என்ற நுாலுக்காக சாகித்ய அகாடமி விருதுக்கு எழுத்தாளர் ராமகிருஷ்ணன் தேர்வு.

நோபல் வென்றவர்கள்

இயற்பியல்
  1. ஆர்தர் அஷ்கின் (அமெரிக்கா)
  2. ஜெரார்ட் மொரோ (பிரான்ஸ்)
  3. டான்னா ஸடிரிக்லேண்ட் (கனடா) 

வேதியியல்
  1. பிரான்சிஸ் அர்னால்ட் (அமெரிக்கா)
  2. ஜார்ஜ் ஸ்மித், கிரிகரி வின்ட்டர் (அமெரிக்கா)

அமைதி
  1. டெனிஸ் முக்வேஜா (காங்கோ)
  2. நாடியா முராத் (ஈராக்) - போரில் நடத்தப்படும் பாலியல் வன்முறைகளுக்கு எதிராக போராடியவர்.

மருத்துவம்
  1. ஜோம்ஸ் பி அலிசன் (அமெரிக்கா)
  2. தசுக்கு ஹோன்ஜோ (ஜப்பான்)

பொருளாதாரம்
வில்லியம் நார்தாஸ், பால் ரோமர் (அமெரிக்கா)

இலக்கியம்
இந்தாண்டு பரிசு அறிவிக்கப்படவில்லை.

ஞானபீட கவுரவம்
டிச., 15; ஆங்கில எழுத்தாளர் அமிதவ் கோஷ், ஞானபீட விருதுக்கு தேர்வு.

இந்தியர்களுக்கு மகசேசே
பிலிப்பைன்சின் 'ராமன் மகசேசே' விருதுக்கு இந்தியாவின் பாரத் வாத்வானி, சோனம் வான்சக் தேர்வு. 

தமிழருக்கு பெருமை
அக்., 29: முதல் உலக வேளாண்மை விருது, எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு வழங்கப்பட்டது. இந்திய உணவு, விவசாய கவுன்சில் இவ்விருதை இந்தாண்டு துவக்கியது. 

சுற்றுச்சூழல் காவலன்
அக்., 2: டில்லியில் பிரதமர் மோடிக்கு 'சாம்பியன்ஸ் ஆப் தி எர்த்' விருதை ஐ.நா., பொதுச்செயலர் அன்டோனியா கட்டார்ஸ் வழங்கினார். ஐ.நா., 2005ல் இவ்விருதை உருவாக்கியது.


EmoticonEmoticon