Current Affairs August 2018 A Glance in Tamil

Current Affairs-2018 in Tamil,
Dinamalar ,TNPSC, UGC-NET, RRB, IBPS and othe competitive Examination


ஆகஸ்ட் 2018 - ஒரு பின்னோக்கிய பார்வை 
தமிழகம்
 1. ஆக., 1 : கோவை சுந்தராபுரம் பஸ் நிறுத்தத்தில் கார் மோதியதில் 6 பேர் பலி. 
 2. ஆக., 4: அண்ணா பல்கலை விடைத்தாள் திருத்தத்தில் முறைகேடு செய்த முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா சஸ்பெண்ட். 
 3. ஆக., 5: தமிழகத்தில் புலிகள் பாதுகாப்பு திட்டத்துக்கு ரூ. 30 கோடி ஒதுக்கீடு. 
 4. ஆக., 8: மெரினாவில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சமாதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி. 
 5. தலைமை பெருமை - ஆக., 12: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தஹில் ரமணி பொறுப்பேற்பு. இதற்குமுன், மும்பை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றினார். 
 6. ஆக., 13: மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற அமைச்சகத்தின் வாழத்தகுந்த நகரங்கள் பட்டியலில் திருச்சிக்கு 12வது இடம். 
 7. ஆக., 17 : மதுரையில் - கள்ளிக்குடி, ராமநாத புரத்தில் ஆர்.எஸ்.மங்கலம், துாத்துக் குடியில் ஏரல், நெல்லையில் திசையன் விளைக்கு தாலுகா அந்தஸ்து. 
 8. உடைந்த மதகு - ஆக., 21: திருச்சி முக்கொம்பு அணையில் காவிரி உபரி நீர் வெளியேறும் கொள்ளிடம் அணையில் பத்து மதகுகள் உடைந்தன. இது 1836ல் ஆங்கிலேயரான ஆர்தர் காட்டனால் கட்டப்பட்டது.
 9. ஆக., 22: மதுரை- திண்டுக்கல் மாவட்டத்தில் 58 கிராம கால்வாய் திட்டம் பயன்பாட்டுக்கு திறப்பு. 
 10. ஆக., 26: கோவையில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக 'வை-பை' மரம் அமைக்கப்பட்டது. 
 11. ஆக., 27: சென்னை அருகே பையனுாரில், நாட்டின் உயரமான (56 அடி) படப்பிடிப்பு தளத்தை முதல்வர் பழனிசாமி துவக்கினார். 
 12. ஆக., 28 : தி.மு.க., தலைவராக ஸ்டாலின், பொருளாளராக துரைமுருகன் பதவியேற்பு. 


இந்தியா
 1. ஆக., 2: சிறந்த பார்லிமென்டேரியின் விருது நஜ்மா ஹெப்துல்லா (2013), குகும்தேவ் நாராயண் (2014), குலாம் நபி ஆசாத் (2015), தினேஷ் திரிவேதி (2016), மஹாதாப் (2017) பெற்றனர். 
 2. ஆக., 6: இந்தியாவின் முதல் தெர்மல் பேட்டரி மையம் ஆந்திராவின் அமராவதியில் துவக்கம். 
 3. ஆக., 7: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, உச்சநீதிமன்ற நீதிபதியானார். உச்சநீதிமன்ற வரலாற்றில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை மூன்றாக உயர்வு. 
 4. ஆக., 9: தேசிய மகளிர் ஆணைய தலைவராக ரேஹா சர்மா பொறுப்பேற்பு. 
 5. ராஜ்யசபா 'ராஜ்யம்' - ஆக., 9: ராஜ்யசபா துணை தலைவர் தேர்தலில் 125 ஓட்டுகள் பெற்ற தே.ஜ., கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் (ஐ.ஜ.த.,) வெற்றி. எதிர்கட்சி வேட்பாளர் ஹரி பிரசாத் 105 ஓட்டுகள் கிடைத்தது. 43 ஆண்டுகள் காங்கிரசிடம் இருந்தது. 
 6. ஆக., 11: காஷ்மீர் உயர்நீதி மன்ற முதல் பெண் தலைமை நீதிபதியாக கீதா மிட்டல் பொறுப்பேற்பு. 
 7. ஆக., 12: நாட்டின் முதன் பெண் ஸ்வாட் படை, டில்லி போலீசில் தொடக்கம். 
 8. ஆக., 14: ரஷ்யாவுக்கான இந்திய துாதராக பால வெங்கடேஷ் வர்மா நியமனம். 
 9. ஆக., 21: முன்னாள் பிரதமர் வாஜ்பாயை சிறப்பிக்கும் வகையில் சத்தீஸ்கரின் நயா ராய்ப்பூரை, அடல் நகர் என பெயர் மாற்ற சட்டசபை அனுமதி. 
 10. ஆக., 22: உலகளவில் வேகமாக வளரும் விமான நிலையங்களின் பட்டியலில் பெங்களூரு இரண்டாவது இடம். ஜப்பானின் டோக்கியோ விமான நிலையம் முதலிடம். 
 11. ஆக., 23: காஷ்மீர் கவர்னராக சத்ய பால் மாலிக், பீஹார் கவர்னராக லால்ஜி டாண்டன் பொறுப்பேற்பு. 
 12. ஆக., 25: தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மைய தலைவராக சதீஷ் ரெட்டி பொறுப்பேற்பு. 
 13. ஆக., 26: முன்னாள் பிரதமர் மறைந்த வாஜ்பாயின் அஸ்தி நாடு முழுவதும் முக்கிய கடல், ஆறுகளில் கரைக்கப்பட்டது. 
 14. ஆக., 28: பிரதமர் மோடியை கொல்ல சதித்திட்டம் தீட்டிய நக்சலைட் வரவர ராவ் ஐதராபாத்தில் கைது. 


உலகம்
 1. 'கை'ப்பாலம் - ஆக., 2: வியட்நாமில் 'பா நா' மலைப்பகுதியில் 'கை' வடிவிலான தங்க நிற பாலம் திறப்பு. இதன் நீளம் 500 அடி. கடல்மட்டத்தில் இருந்து 4,600 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. 
 2. ஆக., 3: சீனாவை முந்தி உலகின் இரண்டாவது பெரிய பங்குச்சந்தையாக ஜப்பான் முன்னேற்றம். முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது. 
 3. புதுசா நாசா - ஆக., 4: அமெரிக்காவின் நாசா 2019ல் முதன் முதலாக வர்த்தகரீதியான விண்வெளி பயணத்தை தொடங்குகிறது. இதற்கு தேர்வு செய்யப்பட்ட 9 பேர் குழுவில் அமெரிக்க வாழ் இந்தியர் சுனிதா வில்லியம்ஸ் இடம்பெற்றார்.
 4. ஆக., 5 : இந்தோ னேசியாவின் லும்பாக் தீவில், 7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம். 90 பேர் பலி.
 5. ஆக., 10: காற்றில் இயங்கும் கார் தொழில் நுட்பத்தை, எகிப்திய மாணவர் குழு கண்டுபிடிப்பு.
 6. ஆக., 16: பராகுவே அதிபராக மரியோ அப்டோ பொறுப்பேற்பு. 
 7. ஆக., 20: அயர்லாந்துக்கான இந்திய துாதராக சந்தீப் குமார் நியமனம். 
 8. ஆக., 24: ஆஸ்திரேலிய பிரதமராக ஸ்காட் மோரிசன் பதவியேற்பு. 
 9. ஆக., 26: ஜிம்பாப்வேயில் முன்னாள் அதிபர் முகாபே பதவி நீக்கத்துக்குப்பின் முதல் முறையாக தேர்தல் நடந்தது. எம்மர்சன் மங்காக்வா வெற்றி. 
 10. ஆக,. 29: சீன பள்ளிகளில் 'கீகோ' என்ற குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் ரோபோ அறிமுகம். 
 11. ஆக., 28: உலகின் மிகச் சிறிய மெடிக்கல் ரோபாவை அமெரிக்கா உருவாக்கியது. இதன் அளவு 120 நானோமீட்டர். 
 12. * ஐ.நா., சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவின் தலைவராக இந்தியாவின் திரிபாதி நியமனம்.


டாப் 3
 1. ஆக., 24: சென்னை தனியார் கல்லுாரி மாணவர்கள் தயாரித்த 'ஜெய்ஹிந்த் - 1S' உலகின் எடைகுறைந்த (33.39 கிராம்) செயற்கைக் கோளை நாசா விண்ணில் ஏவியது. செலவு ரூ. 15,000.
 2. ஆக., 18 : பாகிஸ்தானின் 22வது பிரதமராக பி.டி.ஐ., கட்சி தலைவர் இம்ரான் கான் பதவியேற்பு. 
 3. ஆக., 8: இந்திய ரிசர்வ் வங்கியின் பகுதி நேர இயக்குநராக குருமூர்த்தி நியமனம். EmoticonEmoticon