Current Affairs April 2018 A Glance in Tamil

Current Affairs-2018 in Tamil,
Dinamalar ,TNPSC, UGC-NET, RRB, IBPS and othe competitive Examination


ஏப்ரல் 2018 - ஒரு பின்னோக்கிய பார்வை 
தமிழகம்
 1. ஏப்.,5: அண்ணா பல்கலை துணைவேந்தராக சூரப்பா நியமனம். 
 2. ஏப்.,12: சென்னையில் போர் தளவாட கண்காட்சியை பிரதமர் மோடி துவக்கினார். 
 3. *காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க., சென்னை வந்த பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம். 
 4. 'அழைப்பு' ஆபத்து - ஏப். 16: அலைபேசியில் மாணவிகளை தவறான பாதைக்கு 'அழைத்த' புகாரில் அருப்புக்கோட்டை கல்லுாரி பேராசிரியை நிர்மலா தேவி கைது. 
 5. ஏப்.,21: ரேஷன் கடையில் சிறுதானியங்களான தினை, ராகி, கம்பு, சோளத்தை மானிய விலையில் விற்க மத்திய அரசு உத்தரவு.
 6. ஏப்.,27: தாம்பரம் - நெல்லை முன்பதிவில்லா 'அந்தியோத்யா' எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்.


இந்தியா
 1. ஏப்.,1 : உலகின் அலைபேசி தயாரிப்பில் முதலிடத்தில் சீனா. இந்தியாவுக்கு இரண்டாவது இடம். 
 2. ஏப்.,3: பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ரஷ்யா பயணம். 
 3. ஏப்.,5: 1998ல் மான் வேட்டையாடிய வழக்கில் நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டு சிறை. 
 4. ஏப்.,6: ஒய்.எஸ்.ஆர்., காங்., கட்சியின் ஐந்து எம்.பி.,க்கள் ராஜினாமா. 
 5. ஏப்.,7 : நேபாள பிரதமர் சர்மா ஒலி, இந்தியா வருகை. 
 6. ஏப்.,8 : அதிகாரிகளின் கவனக்குறைவால் ஆமதாபாத் - பூரி எக்ஸ்பிரஸ் ரயில், இன்ஜின் இல்லாமல் 10 கி.மீ., துாரம் பின்னோக்கி ஓடியது. 
 7. *முதன்முறையாக விவசாயி களுக்கான பிரத்யேக சமுதாய வானொலி கேரளாவில் அறிமுகம். 
 8. ஏப்.,9: இமாச்சலில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 27 சிறுவர்கள் உட்பட 30 பேர் பலி. 
 9. ஏப்.,10: 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட முதல் அதிவேக ரயில் இன்ஜினை பிரதமர் மோடி துவக்கினார். 
 10. ஏப்.,15: மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி ராஜ்யசபா எம்.பி.,யாக பதவியேற்பு. 
 11. ஏப்.,17: அதிக பொருட் களுக்கு புவிசார் குறியீடு பெற்ற பட்டியலில் கர்நாடகா முதலிடம். 
 12. ஏப்.,22: மார்க்சிஸ்ட் பொதுச்செயலராக சீதாராம் யெச்சூரி மீண்டும் தேர்வு. 
 13. *முதன் முதலாகவிமான நிலைய தீயணைப்பு வீராங்கனையாக தனியா சன்யால் நியமனம். 
 14. ஏப்.,23: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யக்கோரிய எதிர்க் கட்சிகளின் நோட்டீசை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நிராகரித்தார். 
 15. ஏப்.,24: சிறப்பு அனுமதி பெறாமல் வெளிநாட்டினர் நாகலாந்து, மிசோரம், மணிப்பூர் செல்ல மத்திய அரசு அனுமதி. 
 16. வேஷம் கலைந்தது - ஏப்., 24: ராஜஸ்தானில் 2013ல் சிறுமி பாலியல் வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு 20 ஆண்டு சிறை. 400 ஆசிரமங்கள், 50 பள்ளிகள் இவருக்கு உள்ளன. 45 ஆண்டுகளில் ரூ. 10 ஆயிரம் கோடிக்கு அதிபதியானார். 
 17. ஏப்.,26: உத்தரபிரதேசத்தின் குஷிநகரில் பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் 13 குழந்தைகள் பலி. 
 18. ஏப்.,27: பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக ரஷ்யா சென்றார். 
 19. *வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக தேர்வான முதல் பெண் என்ற பெருமை பெற்றார் இந்து மல்கோத்ரா. 
 20. *உலக பத்திரிகை சுதந்திரம் பட்டியிலில் இந்தியாவுக்கு 138வது இடம். நார்வே முதலிடம். 
 21. சாம்லிங் 'டார்லிங்' - ஏப்., 30: நீண்டகால முதல்வரானார் சிக்கிம் ஜனநாயக முன்னணியின் பவன் சாம்லிங் (24 ஆண்டு). 1994 டிச., 12 முதல் பதவியில் நீடிக்கிறார். மே.வங்கத்தின் மறைந்த ஜோதிபாசுவை (23 ஆண்டு, 4 மாதம்) முந்தினார்.

உலகம்
 1. ஏப்., 2: சீனாவின் 'டியான்காங் - 1' விண்வெளி நிலையம் பசுபிக்கடலில் விழுந்தது. 
 2. *துருக்கியில் முதல் அணு மின் நிலையம் திறப்பு.
 3. ஏப்., 3: ஐ.நா.,வின் அரசியல் விவகாரங்களுக்கான முதல் பெண் தலைவராக டிகார்லோ தேர்வு.
 4. ஏப்.,5: சவுதியில் 35 ஆண்டுகளுக்குப்பின் சினிமா தியேட்டர்கள் திறப்பு. 
 5. ஏப்.,6: பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் அனா லிட்டிகா நிறுவனம் 8.7 கோடி பேரின் தனிப்பட்ட 'பேஸ்புக்' தகவல்களை திரட்டியது என பேஸ்புக் அதிர்ச்சி தகவல்.
 6. ஏப்.,8: ஹங்கேரிய பிரதமராக விக்டர் ஆர்பன் மீண்டும் தேர்வு. 
 7. *உலகின் பெரிய சொகுசு கப்பலான 'சிம்பொனி ஆப் தி சீஸ்' பயணம் ஸ்பெயினில் துவக்கம். 
 8. ஏப்.,9: ஆர்மேனியா அதிபராக அர்மென் சர்கிஸியான் பதவியேற்பு.
 9. ஏப்.,10: ஐக்கிய அரபு எமிரேட்சில் ஆண் - பெண் சம ஊதியம் வழங்கும் சட்டத்துக்கு அனுமதி.
 10. வானில் சோகம்- ஏப்., 11: அல்ஜீரியாவில் 'இல்யூஷின் II - 76' என்ற ராணுவ விமானம் விபத்துக்குள்ளானது. ராணுவ வீரர்கள் உட்பட 257 பேர் பலி. இது அல்ஜீரியாவில் நடந்த பெரிய விமான விபத்து.
 11. ஏப்.,12: தியாகிகள் வாரிசுகளுக்கான இட ஒதுக்கீட்டு முறையை வங்கதேசம் ரத்து.
 12. ஏப்.,15: சிரியாவில் அரசு படைக்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் கூட்டுப்படை சேர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. 
 13. ஏப்., 22: ஆப்கனில் ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் தாக்குதலில் 31 பேர் பலி.
 14. ஏப்., 23: பிரிட்டன் இளவரசர் வில்லியம்ஸ் - கேட் மிடில்டன் தம்பதிக்கு மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்தது.
 15. எல்லை இல்லை - ஏப்., 27 : தென்கொரிய அதிபர் மூன் ஜே - வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்திப்பு. 1953ல் நடந்த கொரிய போருக்குப்பின் வடகொரிய அதிபர் தென்கொரிய எல்லைக்குள் வருகை தந்தது இதுவே முதல் முறை. 

டாப் 3
 1. ஏப்.,15: நிதி நெருக்கடியில் சிக்கிய 'ஏர்செல்' நிறுவனம் மூடப்படுவதாக 'டிராய்' அறிவிப்பு. 9 லட்சம் வாடிக் கையாளர்கள் பாதிப்பு. 
 2. ஏப்.,19: கியூபா அதிபராக மிகுல் டயஸ் கேனல் பொறுப்பேற்பு. காஸ்ட்ரோ சகோதரர்களின் 60 ஆண்டுகால ஆட்சிக்கு முடிவு. 
 3. ஏப்.,22: உலகின் வயதான ஜப்பான் பெண்மணி நபி தஜிமா (117 வயது) மறைவு.EmoticonEmoticon