List of Districts in Tamilnadu 2019 and it's History

Government of. Tamilnadu,
List of District,
Tamilnadu District History,


இந்தியாவில் உள்ள சமஸ்தானங்களை ஒன்றினைத்து உலகின் 7 பெரிய நாடாக உருவாக்கினாலும் , இங்கு பல்வேறு இன மக்கள் ஒற்றுமையுடன் அவரவர்கள் தொழிலை செய்து கொண்டு இருந்தனர். 1953 மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்டாலும், அது நிர்வாக வசதிக்காகவே பிரிக்கப்பட்டது. அதுபோலத்தான் தமிழகத்தில் மாவட்டங்களும் நிர்வாக காரணங்களுக்காக 1966 ஆண்டு, 13 மாவட்டங்களாக இருந்த எண்ணிக்கை, தற்போது, 33 மாவட்டங்களாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மீண்டும் 10 ஆண்டுகளுக்கு பின், தற்போது புதிதாக, கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியா விடுதலை பெற்ற பின், 1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்,இந்தியாவின் சென்னை மாகாணம் என்பது, சென்னை மாநிலம் என, பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மாநில எல்லைகள் சீரமைப்புகளின் வாயிலாக, தொடர்ந்து, 1953 முதல், 1956ம் ஆண்டு வரை, தற்போதைய எல்லைகள் உருவாக்கப்பட்டன. சென்னை மாநிலம் என்பது, 1969ம் ஆண்டில், அதிகாரப்பூர்வமாக தமிழ்நாடு எனமாற்றப்பட்டது.

முந்தைய சென்னை மாகாணமானது, 13 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. 
அவை, 
  1. செங்கல்பட்டு, 
  2. கோவை, 
  3. கன்னியாகுமரி, 
  4. மெட்ராஸ், 
  5. மதுரை, 
  6. நீலகிரி, 
  7. வடஆற்காடு,
  8. தென் ஆற்காடு, 
  9. ராமநாதபுரம், 
  10. சேலம், 
  11. தஞ்சாவூர்,
  12. திருச்சி, 
  13. திருநெல்வேலி என பிரிக்கப்பட்டிந்தது.

இந்த மாவட்டங்கள் கீழ்க்காண்ட வகையில் பிரிக்கப்பட்டு, தற்போதைய கள்ளக்குறிச்சி 33வது புதிய மாவட்டம் வரை உருவாக்கப்பட்ட முறையை வருட வாரியாக பார்க்கலாம்.


1966: சேலம் மாவட்டத்தைப் பிரித்து, தர்மபுரிமாவட்டம்உருவாக்கப் பட்டது.

1974:திருச்சி மாவட்டத்தைப் பிரித்து, புதுக்கோட்டை மாவட்டம்.

1979:கோவை மாவட்டத்தைப் பிரித்து ஈரோடு மாவட்டம்.

1985: மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைப் பிரித்து, சிவகங்கை, விருதுநகர்.

1985:மதுரைமாவட்டத்தைப் பிரித்து, திண்டுக்கல் மாவட்டம்.

1986:திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து துாத்துக்குடி மாவட்டம்.

1989: வடஆற்காடு மாவட்டத்தைப் பிரித்து,வேலுார், திருவண்ணா மலை மாவட்டங்கள்.

1991:தஞ்சாவூர் மாவட்டத்தைப் பிரித்து, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள்.

1993:தென் ஆற்காடு மாவட்டத்தை பிரித்து, விழுப்புரம், கடலுார் மாவட்டங்கள்.

1995:திருச்சியை பிரித்து கரூர், பெரம்பலுார் மாவட்டங்கள்.

1996:மதுரைமாவட்டத்தைப் பிரித்து, தேனி மாவட்டம்.

1997: சேலம் மாவட்டத்தைப் பிரித்து, நாமக்கல் மாவட்டம்.

1997:செங்கல்பட்டு மாவட்டத்தை பிரித்து, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள்.

2004:தர்மபுரி மாவட்டத்தை பிரித்து, கிருஷ்ணகிரி மாவட்டம்.

2007:பெரம்பலுார் மாவட்டத்தைப் பிரித்து, அரியலூர் மாவட்டம்.

2009:கோவை,ஈரோடுமாவட்டங் களை பிரித்து, திருப்பூர் மாவட்டம்.

2019:விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டம்.

தமிழகத்தில், 1966ம் ஆண்டு, 13 மாவட்டங்களாக இருந்த எண்ணிக்கை, தற்போது, 33 மாவட்டங்களாக உயர்ந்துள்ளது. 1966ம் ஆண்டு துவங்கி, 17 முறை மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இதில், தற்போது மட்டுமே நீண்ட காலத்திற்கு பின், அதாவது, 10 ஆண்டுகள் இடைவெளிக்கு பின், புதியமாவட்டம்உருவாக்கப் பட்டுள்ளது.


EmoticonEmoticon