Current Affairs Today: 11-01-2019 in Tamil

Current Affairs Today-2019 in Tamil,
TNPSC, UGC-NET, RRB, IBPS and the Competitive Examination.

நடப்பு செய்திகள்-11-01-2019,

தமிழகம்

  1. அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்; ஜன. 21-ல் முதல்வர் தொடங்கி வைக்கிறார்:அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை முதல்வர் பழனிசாமி வரும் 21-ம் தேதி சென்னையில் தொடங்கி வைக்கிறார்.
  2. வரும் 20-ம் தேதி நடைபெறுகிறது; உலக சாதனையில் விராலிமலை ஜல்லிக்கட்டு: கின்னஸ் மதிப்பீட்டுக் குழு வருகை புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டை கின்னஸ் சாதனையில் இடம் பெறச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  3. அறிவியல் ஆயிரம் டிரைவர் இல்லா ரயில்:உலகளவில் ரயில்வே துறையில் பல புதுமைகளை அறிமுகப்படுத்துவதில் சீனா முன்னணியில் உள்ளது. தற்போது உலகில் முதன்முதலாக டிரைவர் இல்லாமல் இயங்கும் புல்லட் ரயிலை இயக்கி சாதித்துள்ளது. இந்த ரயில் மணிக்கு 350 கி.மீ., வேகத்தில் செல்லும். பீஜிங் - ஜான்ஜியாகவ் இடையே சோதனை ஓட்டம் நடந்தது. இந்த ரயில் பாதை 2022 குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்காக அமைக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு இறுதிக்குள் பணி நிறைவடையும். மொத்த துாரம் 174 கி.மீ. சீனாவில் 1.27 லட்சம் கி.மீ., துாரத்துக்கு ரயில் சேவை இயக்கப்படுகிறது.
  4. ரயில் முன்பதிவு நேரம் குறைப்பு:பொங்கல் தினத்தன்று, ரயில்வே முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் குறைக்க பட்டு உள்ளது.தெற்கு ரயில்வேயில் உள்ள டிக்கெட் முன்பதிவு மையங்கள், வரும், 15ம் தேதி, பொங்கல் தினத்தையொட்டி, காலை, 8:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரை மட்டும் திறந்திருக்கும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது
  5. அரசு பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகள்: அமைச்சர் தகவல்அரசு பள்ளிகளில், நீதி போதனை வகுப்புகள் கொண்டு வரப்படும்,'' தனிக்குடும்ப சிந்தனை,அனைவருக்கும் இருக்கிறது. பெற்றோர், தங்கள்முதுமையில்,பேரக்குழந்தைகளைகாண தவிக்கின்றனர். பாசத்தோடு வாழ்க்கையில் நாம் நடை போட வேண்டும். இதற்காக, ஒரு காலத்தில் இருந்த, நீதிபோதனை என்ற வகுப்பு, மீண்டும் கொண்டு வரப்படும்.
  6. தெற்காசியாவில் முதன்முறையாக மதுரையில் கே.ஜி.எஸ்., அதிநவீன 'சிடி ஸ்கேனர்':தெற்காசியாவில் முதன்முறையாக, மதுரை கே.ஜி.எஸ்., அட்வான்ஸ்டு எம்.ஆர்.ஐ., மற்றும் சிடி ஸ்கேன் நிறுவனத்தில், சோமோடாம் கோ.டாப் என்னும் அதிநவீன சிடி ஸ்கேனர் கருவி நேற்று துவக்கி வைக்கப்பட்டது.
  7. தாமிரவருணியில் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுக்க இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாமிரவருணி ஆற்றில் தண்ணீர் எடுக்க 21 தொழிற்சாலைகளுக்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  8. தமிழக பொருளாதாரத்தில் கட்டுமானத் துறை 30% பங்களிப்புதமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் கட்டுமானத்துறைக்கு 30 சதம் பங்களிப்பு உள்ளதாக தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை  பங்களிப்பு,
  9. நீர்-நில வளத் திட்டம்: தமிழக அரசு, அமெரிக்க பல்கலை. புரிந்துணர்வு ஒப்பந்தம்:தமிழக அரசு மற்றும் அமெரிக்க நாட்டின் கார்னெல் பல்கலைக்கழகத்துக்கு இடையே நீர் மற்றும் நில வளத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு


இந்தியா செய்திகள்

  1. சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர ராவ் பதவியேற்பு: அலோக் வர்மாவின் இடமாற்ற உத்தரவுகள் ரத்து சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து அலோக் வர்மா நீக்கப்பட்டதை தொடர்ந்து, சிபிஐ கூடுதல் இயக்குநர் எம்.நாகேஸ்வர ராவ் மீண்டும் இடைக்கால இயக்குநராக பொறுப்பேற்றார்.
  2. வெளிநாடு வாழ் இந்தியர் டெபாசிட் அதிகரிப்பு:வெளிநாடு வாழ் இந்தியர்கள், 2018, நவம்பரில், இந்திய வங்கிகளில் செய்த டெபாசிட், 415 கோடி டாலர் அதிகரித்து, 12 ஆயிரத்து, 568 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது, அக்டோபரில், 12 ஆயிரத்து, 153 கோடி டாலராக இருந்தது. 
  3. என்.எஸ்.இ தலைவர் அசோக் சாவ்லா ராஜினாமா:தேசிய பங்கு சந்தை தலைவர் அசோக் சாவ்லா நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார் என்.எஸ்.இ., எனப்படும் தேசிய பங்குச் சந்தையின் தலைவராக கடந்த 2016-ம் ஆண்டு Tநியமிக்கப்பட்டவர், அசோக் சாவ்லா, 65. மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவர். நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமாவுக்கான காரணங்களை அவர் வெளியிடவில்லை.
  4. சிறு வணிகர்களுக்கு விபத்து காப்பீடு திட்டம் :10 லட்சம் ரூபாய் விபத்து காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இது குறித்து, தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:உத்தர பிரதேச அரசு, சிறிய வியாபாரிகளுக்கு என, பிரத்யேகவிபத்து காப்பீடு திட்டத்தை அமல்படுத்தி உள்ளது.அதை பின்பற்றி, நாடு முழுவதும், ஜி.எஸ்.டி.,யில் பதிவு செய்துள்ள சிறிய மற்றும் நடுத்தர வணிகர்களுக்கும், விபத்து காப்பீடு வசதியை வழங்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
  5. 2021ல் விண்வெளியில் இந்திய வீரர்கள்: சிவன்:வரும், 2021, டிசம்பருக்குள், விண்வெளிக்கு வீரர்களை அனுப்ப, இலக்கு நிர்ணயித்துள்ளோம்,'' என, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, 'இஸ்ரோ' வின் தலைவர், சிவன் தெரிவித்துள்ளார்.இத்திட்டத்தை, 2021, டிசம்பருக்குள் நிறைவேற்ற, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ககன்யான் திட்டத்தில், பெண்களும் இடம்பெறுவர். இதற்கான முதல்கட்ட பயிற்சிகள், இந்தியாவிலும், அடுத்தகட்ட பயிற்சிகள், ரஷ்யாவிலும் வழங்கப்பட உள்ளன. 
  6. ரயில்வேயில் கடினமான பணிகளில் பெண்களை நியமிக்க திடீர் தடை:எதிர்காலத்தில், பாதுகாப்பில்லாத மற்றும் கடினமான பணிகளில், பெண்களை நியமிப்பதற்கு, ரயில்வே தடை விதித்துள்ளது. எனவே, வரும் காலத்தில், 'லோகோ பைலட்' எனப்படும் டிரைவர், கார்டுகள், போர்ட்டர், ரயில் வழித்தடங்களை ஆய்வு செய்யும், 'டிராக்மேன்' அல்லது 'கேங்மேன்' போன்ற பணிகளில், ஆண்களை மட்டுமே நியமிப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
  7. பொங்கலுக்கு பின் ஒலிக்கும் 'ட்ரிங் ட்ரிங்':ஓராண்டாக கிடப்பில் போடப்பட்டிருந்த, கப்பன் பூங்காவில் 'வாடகை சைக்கிள் திட்டம்' செயல்படுத்தப்படுவதற்கான காலம் கனிந்துள்ளது; பொங்கலுக்கு பின் வாடகை சைக்கிள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மூன்று மணி நேரத்துக்கு சைக்கிள் பயன்படுத்த, 30 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது. கட்டணம் குறித்து, இன்னும் முடிவு செய்யவில்லை.
  8. குஜராத் உலக வர்த்தக மாநாடு: 18இல் பிரதமர் தொடங்கி வைக்கிறார்குஜராத்தில் 9ஆவது உலக வர்த்தக மாநாட்டை வரும் 18ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
  9. யுபிஎஸ்சி உறுப்பினராக டி.சி.ஏ. அனந்த் நியமனம்மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின்(யுபிஎஸ்சி) உறுப்பினராக முன்னாள் தலைமை புள்ளியியலாளர் டி.சி.ஏ. அனந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.


உலகம் செய்தி 

  1. அதிபர் வேட்பாளராக போட்டியிட விரும்பும் துளசி கப்பார்ட்:அமெரிக்க பார்லி.உறுப்பினராக உள்ள துளசி கப்பார்ட் . 2020 அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன் என தெரிவித்தார். அமெரிக்க பார்லி.யில் ஜனநாயக கட்சியில் இருந்து பிரதிநிதிகள் சபைக்கு தேர்வு செய்யப்பட்டவர் துளசி கப்பார்ட், இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். நேற்று சி.என்.என். செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், 2020ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிபர் வேட்பாளராக களம் இறங்குவேன். இதற்கான அறிவிப்பை வெளியிடுவேன் என்றார்.
  2. ஹெச்-1பி விசா விதிமுறைகளில் எளிமை: டிரம்ப் உறுதிவெளிநாட்டினர் அமெரிக்காவில் பணியாற்றுவதற்கான ஹெச்-1பி நுழைவு இசைவு (விசா) குறித்த விதிமுறைகளை எளிமையாக்குவதாகவும், அந்த விசாவில் வருபவர்கள் அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கான வாய்ப்பை அதிகரிப்பதாகவும் அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார்.
  3. 360 கோணத்தில் நிலவின் இருண்ட பகுதி: படமெடுத்து அனுப்பியது சீன ஆய்வுக் கலம்பூமியிலிருந்து பார்த்தால் தெரியாத நிலவினுடைய பின் பகுதியின் 360 டிகிரி கோண படத்தை, சீனாவின் சாங் இ-4 விண்கலம் முதல் முறையாக பூமிக்கு அனுப்பியுள்ளது.பிரத்யேக செயற்கைக்கோள் வழியாக இந்தப் படம் அனுப்பப்பட்டதையடுத்து, சாங் இ-4 ஆய்வுத் திட்டம் முழு வெற்றியடைந்துள்ளதாக சீனா வெள்ளிக்கிழமை அறிவித்தது.பூமியை நிலவு சுற்றி வருவதும், அது தன்னைத் தானே சுற்றிக் கொள்வதும் ஒரே வேகத்தில் இருப்பதால் அதன் ஒரு பகுதி மட்டுமே எப்போதும் பூமியை நோக்கி உள்ளது.
  4. வெனிசூலா அதிபராக மடூரோ மீண்டும் பொறுப்பேற்புசர்வதேச நாடுகளின் விமர்சனத்தையும் மீறி வெனிசூலா அதிபராக, நிக்கோலஸ் மடூரோ வியாழக்கிழமை இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
வணிகம்

  1. தொழில் துறை உற்பத்தி 0.5 சதவீதமாக சரிவடைந்தது:கடந்த ஆண்டு, நவம்பரில், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, 17 மாதங்களில் இல்லாத வகையில், 0.5 சதவீதமாக குறைந்துள்ளது. 
  2. கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளில் பாதுகாப்பான பரிவர்த்தனைக்கு டோக்கன்: ரிசர்வ் வங்கி திட்டம் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள், இ-வாலட்டுகள் போன்றவற்றில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளை மேலும் பாதுகாப்பானதாக மாற்ற ரிசர்வ் வங்கி டோக்கன் வழங்கும் முறையைச் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
விளையாட்டு

  1. ஆஸி. ஓபன் போட்டியுடன் ஓய்வு: கண்ணீருடன் அறிவித்தார் ஆன்டி முர்ரே ஆஸி. ஓபன் டென்னிஸ் போட்டியுடன் பிரிட்டனைச் சேர்ந்த முன்னாள் உலகின் நம்பர் ஒன் வீரர் ஆன்டி முர்ரே (31) ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை கண்ணீருடன் தெரிவித்தார்.
  2. மகேந்திர சிங் தோனி ஒரு ரன் எடுத்ததன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை எட்டினார்.சிட்னியில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஒரு ரன் எடுத்ததன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டியில் 10 ஆயிரம் ரன்களைக் எட்டிய வீரர் எனும் பெருமையைப் பெற்றார்.




 


EmoticonEmoticon