Current Affairs July 2018 A Glance in Tamil

Current Affairs-2018 in Tamil,
Dinamalar ,TNPSC, UGC-NET, RRB, IBPS and othe competitive Examination


ஜூலை  2018 - ஒரு பின்னோக்கிய பார்வை 

தமிழகம்
 1. ஜூலை 2: புதுச்சேரி முதல் பெண் டி.ஜி.பி.,யாக சுந்தரி நந்தா பொறுப்பேற்பு. 
 2. ஜூலை 5: கோவை - சேலம் இடையே கண்டக்டர் இல்லாத பஸ் சேவை துவக்கம். 
 3. ஜூலை 6: 17வது உலக தமிழ் இணைய மாநாடு கோவையில் நடந்தது. 
 4. ஜூலை 9: தமிழக சட்டசபையில் லோக் ஆயுக்தா மசோதா தாக்கல். 
 5. ஜூலை 11: கோவையில் தனியார் கல்லுாரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சியில் மாடியிலிருந்து குதித்த மாணவி லேகேஷ்வரி பலி. 
 6. * அரசுக்கு பருப்பு, முட்டை வழங்கும் 'கிறிஸ்டி பிரைடு கிராம்' நிறுவனம் ரூ.1,350 கோடி வரி ஏய்ப்பு செய்ததை வரித்துறை கண்டுபிடிப்பு. 
 7. ஜூலை 22: நாகர்கோவில் வடசேரியில் தயாரிக்கப்படும் கோவில் ஆபரண 'டெம்பிள் ஜூவல்லரி'க்கு புவிசார் குறியீடு.
 8. * முதன்முதலாக கும்ப கோணம் நகராட்சியில் பாதாள சாக்கடை பணியில் 'ரோபோ' அறிமுகம். 
 9. ஜூலை 24: ஐந்தாண்டுக்கு பின் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. 

இந்தியா
 1. ஜூலை 1: சுவிஸ் வங்கியில் அதிகளவு பணம் வைத்திருப்பவர்களின் நாடுகளின் பட்டியலில் இந்தியா 73வது இடம். 
 2. * உத்தரகண்ட் மலையில் இருந்து பஸ் கவிழ்ந்ததில் 41 பேர் பலி. 
 3. * டில்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் துாக்கிலிட்டு தற்கொலை. இதில் 7 பேர் பெண்கள். 
 4. ஜூலை 2: ராஜஸ்தானில் குஜார் ஜாதியினருக்கு ஒரு சதவீத இடஒதுக்கீடு. 
 5. * முஸ்லிம் பெண் மஹி இந்து மத இதிகாச நுாலான ராமாயணத்தை உருதில் மொழி பெயர்த்தார். 
 6. ஜூலை 3: தொழிலதிபர் நீரவ் மோடி, சகோதரர் நிஷால் மோடிக்கு இன்டர்போல் அமைப்பு ரெட் கார்னர் நோட்டிஸ். 
 7. ஜூலை 7: நேபாளம் கைலாஷ் யாத்திரையில் மோசமான வானிலையால் சிக்கிய 160 இந்தியர்கள் மீட்பு. 
 8. ஜூலை 9: 'நிர்பயா' பாலியல் வழக்கின் மேல்முறையீட்டில் மூன்று பேருக்கு மரண தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. 
 9. ஜூலை 11: புள்ளி விபர அறிக்கை 2017ன் படி பிரான்சை முந்தி உலகின் 6வது பெரிய பொருளாதார நாடானது இந்தியா.
 10. ஜூலை 12: ஆந்திர முன்னாள் முதல்வர் கிரண் குமார் ரெட்டி மீண்டும் காங்கிரசில் இணைந்தார். 
 11. ஜூலை 14: ராஜ்யசபா நியமன எம்.பி.,க்களாக ராம் ஷெகால் (விவசாய சங்க தலைவர்), ரகுநாத் மொஹா பத்ரா (சிற்ப கலைஞர்), ரகேஷ் சின்ஹா (பேராசிரியர்), சோனல் மான்சிங் (நடன கலைஞர்) தேர்வு
 12. 'சோலார்' ரயில் - ஜூலை 14: டில்லி ரோஹிலா - ஹரியானா பரூக் நகர் இடையே நாட்டின் முதல் சோலார் ரயில் அறிமுகம். ரயிலின் ஆறு பெட்டிகளில் மின்விளக்கு, மின்விசிறி போன்றவை சூரிய சக்தி மின்சாரத்தில் இயங்கும்.
 13. ஜூலை 19: ரிசர்வ் வங்கி புதிய 100 ரூபாய் நோட்டை வெளியிட்டது. 
 14. யோகி சூறாவளி - ஜூலை 24 : உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவியேற்ற 16 மாதங்களில் 75 மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து சாதனை. 
 15. வியூகம் வீண் - ஜூலை 20: லோக்சபாவில் 15 ஆண்டுகளுக்குப்பின் நம்பிக்கை ஓட்டெடுப்பு. பிரதமர் மோடி அரசுக்கு எதிராக எதிர்க் கட்சிகளின் நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி. அரசுக்கு ஆதரவாக 325 ஒட்டுகளும், எதிராக 126 ஓட்டுகளும் கிடைத்தன. 
 16. ஜூலை 26: மேற்குவங்க மாநிலத்தின் பெயரை பங்ளா என மாற்றுவதற்கு சட்டசபையில் மசோதா நிறைவேற்றம். 
 17. ஜூலை 29: வோடபோன் - ஐடியா நிறுவன இணைப்புக்கு மத்திய அரசு அனுமதி.
 18. ஜூலை 30: உ.பி.,யில் ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி துவக்கினார். 
 19. * அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதி பட்டியல் வெளியீடு. இதில் 2.89 கோடி பேர் இடம்பெற்றனர். 40 லட்சம் பேர் விடுபட்டதாக புகார். 
 20. ஜூலை 31: உத்தரகண்ட்டில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை.

உலகம்
 1. ஜூலை 8: ஜப்பானில் கனமழையால் 76 பேர் பலி. 
 2. 'கிங்' சாம்சங் - ஜூலை 10: தென்கொரிய அதிபர் மூன் ஜா, பிரதமர் மோடி இணைந்து உலகின் பெரிய அலைபேசி தொழிற்சாலை (சாம்சங்), நொய்டாவில் திறப்பு. 35 ஏக்கர் பரப்பளவில் ரூ. 5,000 கோடியில் கட்டப்பட்டுள்ளது. 
 3. ஜூலை 15 : பெட்ரோல் விலை உயர்வுக்கு மக்களின் எதிர்ப்பால் ஹைதி பிரதமர் ஜாக் ராஜினாமா. 
 4. ஜூலை 16: பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷ்ய அதிபர் புடின் சந்திப்பு. 
 5. ஜூலை 20: பதவியை தவறாக பயன்படுத்திய புகாரில் தென்கொரிய முன்னாள் அதிபர் பார்க் கியூன் - ஹைக்கு 8 ஆண்டு சிறை. 
 6. * இஸ்ரேலை யூத நாடாக பிரகடனப்படுத்தும் சட்டம் பார்லிமென்ட்டில் நிறைவேற்றம். 
 7. ஜூலை 23 : பாகிஸ்தானில் பார்லிமென்ட் தேர்தலில் இம்ரான் கானின் பி.டி.ஐ., கட்சி 114 இடங்களில் வென்றது. 
 8. 'பிரிக்ஸ்' மாநாடு - ஜூலை 25-27: பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்க நாடுகள் அங்கம் வகிக்கும் 'பிரிக்ஸ்' மாநாடு ஜோகனஸ்பர்க்கில் நடந்தது. இதில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புடின் உள்ளிட்டோர் பங்கேற்பு.
 9. ஜூலை 30: மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் படகை பின்லாந்து நிறுவனம் வடிவமைத்தது. 
 10. ஜூலை 31: வடகொரியா மீண்டும் ஏவுகணை தயாரிப்பில் ஈடுபடுவதை அமெரிக்க செயற்கைக்கோள் கண்டுபிடித்தது. 
 11. * எத்தியோப்பியா - எரீத்திரியா இடையே 20 ஆண்டுகளுக்குப்பின் விமான சேவை துவக்கம்.

டாப் 3
 1. ஜூலை 6 : லண்டனில் சொகுசு வீடு வாங்கிய வழக்கில் பாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டு, மகள் மரியம்முக்கு 8 ஆண்டு சிறை தண்டனை.
 2. ஜூலை 15 : கடல் பகுதியில் உடைந்த பனிப்பாறை கிரீன்லாந்தின் இன்னர்சூட் தீவு கிராமத்தை மிரட்டியது. 
 3. ஜூலை 24: சென்னை பரங்கிமலையில் மின்சார ரயிலின் படியில் பயணம் செய்த 4 பேர் பலி.
EmoticonEmoticon