Current Affairs-2018- World A Glance in Tamil

Current Affairs-2018 in Tamil,
Dinamani ,TNPSC, UGC-NET, RRB, IBPS and othe competitive Examination


World


2018 - ஒரு பின்னோக்கிய பார்வை - உலகம்
உலகம் 2018
ஜனவரி
 • 1 "பாகிஸ்தானுக்கு கடந்த 15 ஆண்டுகளாக கோடிக் கணக்கான டாலர்களை கொட்டிக் கொடுக்கிறோம். ஆனால், அந்த நாடு நம்மை முட்டாளாக்கிவிட்டு, பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வளர்த்து வருகிறது. இனியும் பாகிஸ்தானிடம் ஏமாற மாட்டோம்' என்று சுட்டுரையில் (டுவிட்டர்) அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதிவிட்டார்.
 • 4 பாகிஸ்தானுக்கான 200 கோடி டாலர் (சுமார் ரூ.14,000 கோடி) ராணுவ உதவியை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்தது.
 • 10 மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில், சிறுபான்மை ரோஹிங்கயா இனத்தவரை பாதுகாப்புப் படையினர் படுகொலை செய்ததாக, ராணுவம் முதல் முறையாக ஒப்புக் கொண்டது.
 • 27 ஆப்கன் தலைநகர் காபூலில், மக்கள் நெரிசல் மிக்க பகுதியில் வெடிபொருள் நிரம்பிய ஆம்புலன்ஸ் வாகனத்தை வெடிக்கச் செய்து தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 95 பேர் உயிரிழந்தனர்.
பிப்ரவரி
 • 11 அறக்கட்டளை முறைகேடு வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
 • 15 ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகளைச் சந்தித்த தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா, ஆளும் கட்சியினர் கொடுத்த நெருக்கடி காரணமாக பதவியை ராஜிநாமா செய்தார். அவருக்கு பதிலாக, கட்சியின் மூத்த தலைவர் சிறில் ராமபோஸா புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 • 26 சிரியாவில் அரசுப் படையினரால் முற்றுகையிடப்பட்டு, தொடர் குண்டுவீச்சுத் தாக்குதலுக்குள்ளாகியிருந்த கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியான கிழக்கு கெüட்டாவிலிருந்து, மக்கள் வெளியேறுவதற்கான பாதுகாப்பு வழித்தடம் அமைத்துத் தருவதாக ரஷியா உறுதி அளித்தது.
மார்ச்
 • 6 இலங்கையின் கண்டி மாவட்டத்தில், பெளத்த மதத்தினருக்கும் சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் இடையே ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது.
 • 13 கருத்து வேறுபாடுகள் காரணமாக தனது வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்ஸனை பதவியிலிருந்து அகற்றிய அமெரிக்க அதிபர் டிரம்ப், அவருக்குப் பதிலாக சிஐஏ உளவுத் துறை இயக்குநராக இருந்த மைக்கேல் பாம்பேயோவை அந்தப் பதவிக்குப் பரிந்துரைத்தார்.
 • 20 5 கோடிக்கும் மேற்பட்ட முகநூல் பயன்பாட்டாளர்களின் ரகசிய விவரங்களைத் திருடியதாக, பிரிட்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி அலெக்ஸாண்டர் நிக்ஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இந்த அரசியல் ஆலோசனை நிறுவனம், 2016-ஆம் ஆண்டில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்புக்கு சேவை அளித்திருந்தது.
 • 22 6,000 கோடி டாலர் (சுமார் ரூ.4.2 லட்சம் கோடி) மதிப்பிலான சீனப் பொருள்கள் மீது கூடுதல் இறக்குமதி வரி விதிப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதையடுத்து, உலகின் இரு பெரும் பொருளாதார சக்திகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தகப் போர்ப் பதற்றம் ஆரம்பமானது.
ஏப்ரல்
 • 6 ஊழல் வழக்கில் தென் கொரிய முன்னாள் அதிபர் பார்க் கியூன்-ஹைக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
 • 11 அல்ஜீரியாவில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கி ஏற்பட்ட விபத்தில் 257 பேர் பலியாகினர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் ராணுவத்தினர்.
 • 13 பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு அந்த நாட்டு நீதிமன்றம் ஆயுள்
 • காலத் தடை விதித்தது.
 • 27 நெடுங்காலமாக சண்டையிட்டு வந்த வட - தென் கொரிய நாடுகளின் அதிபர்கள் கிம் ஜோங்-உன் மற்றும் மூன் ஜே-இன் ஆகியோரிடையே வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்பு நடைபெற்றது. அப்போது, தனது அணு ஆயுதங்களைக் கைவிட வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் ஒப்புக் கொண்டார்.
மே
 • 8 தனது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை ஈரான் உறுதி செய்யவும், அதற்குப் பதிலாக ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை வல்லரசு நாடுகள் விலக்கிக் கொள்வதாகவும், கடந்த 2015-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தத்தை கைவிடுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
 • 10 மியான்மரில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிக் கூட்டணி மகத்தான வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, 92 வயது முன்னாள் பிரதமர் மகாதிர் முகமது புதிய பிரதமராகப் பொறுப்பேற்றார்.
 • 12 மும்பையில் 2008-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களை பாகிஸ்தான் அதிகார அமைப்புகள் அனுமதித்தது குறித்து கேள்வி எழுப்பியதன் மூலம், அந்தத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு உள்ள தொடர்பு குறித்து முதல் முறையாக வெளிப்படையான ஒப்புதலை வழங்கி பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்
 • சர்ச்சையை ஏற்படுத்தினார்.
 • 14 டெல் அவிவ் நகரிலிருந்த தனது தூதரகத்தை, இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளுமே உரிமை கொண்டாடி வரும் சர்ச்சைக்குரிய ஜெருசலேம் நகருக்கு அமெரிக்கா மாற்றியது. இது, முஸ்லிம் நாடுகளில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
 • 16 மலேசியாவில் ஆட்சி மாற்றம் நடைபெற்ற நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் இப்ராஹிமுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.
 • 17 நேபாளத்தில் ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஒன்றிணைந்தன.
 • 25 கத்தோலிக்க மத நம்பிக்கையாளர்களை பெரும்பான்மையாகக் கொண்ட அயர்லாந்தில் நடைபெற்ற பொதுவாக்கெடுப்பில், கருக்கலைப்புத் தடைச் சட்டத்தை தளர்த்துவதற்கு பெரும்பாலானவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
ஜூன்
 • 12 அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும், வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உனுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்பு சிங்கப்பூரில் நடைபெற்றது.
 • 18 இந்தோனேசிய ஏரியில் நேரிட்ட படகு விபத்தில், 192 பேர் உயிரிழந்தனர். 60 பேர் மட்டுமே செல்லக் கூடிய அந்தப் படகில் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றதால் அந்த விபத்து ஏற்பட்டது.
 • 23 தாய்லாந்தின் தாம் லுவாங் நாங் நான் குகையைப் பார்வையிட சென்ற 12 சிறுவர்களும், அவர்களது இளம் பயிற்சியாளரும், திடீரென பெய்த பெருமழை காரணமாக குகைக்குள் சிக்கிக் கொண்ட சம்பவம் உலகெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த 13 பேரும் உயிரோடு இருப்பது ஜூலை 2-ஆம் தேதி வரை தெரியாமல் இருந்தது. மிகவும் குறுகிய குகைப் பாதை வழியாக அவர்களை மீட்பதில் பெரும் சிக்கல் நீடித்த நிலையில், மிகக் கடுமையான போராட்டத்துக்குப் பிறகு ஜூலை 8 முதல் 10-வரை அந்த 13 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த மீட்புப் பணிகளின்போது 38 வயது முன்னாள் கடல் அதிரடிப் படை வீரர் சமன் குனான் உயிரிழந்தார்.
 • 24 சவூதி அரேபியாவில் பெண்கள் கார் ஒட்டுவதற்கு விதிக்கப்பட்ட தடை விலக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாடெங்கிலும் முதல் முறையாக பெண்கள் உற்சாகத்துடன் கார்களை ஓட்டிசென்றனர்.
ஜூலை
 • 6 பனாமா ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கு ஊழல் தடுப்பு நீதிமன்றம் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்தது. அவரது மகள் மரியம் நவாஸýக்கு 7 ஆண்டுகளும், மருமகன் முகமது சஃப்தாருக்கு ஓராண்டும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பிரிட்டனிலிருந்து 13-ஆம் தேதி நாடு திரும்பிய நவாஸýம், மரியமும் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
 • 13 பாகிஸ்தான் பொதுத் தேர்தல் பிரசாரத்தின்போது இரு இடங்களில் நடத்தப்பட்ட சக்தி வாய்ந்த குண்டு வெடிப்புத் தாக்குதல்களில் முக்கிய அரசியல் தலைவர் உள்பட 133 பேர் உயிரிழந்தனர்.
ஆகஸ்ட்
 • 5 இந்தோனேசியாவின் சுற்றுலா தீவான லம்போக்கில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக 563 பேர் உயிரிழந்தனர். 7,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
 • 12 சூரியனுக்கு மிக நெருக்கத்தில் சென்று, அதுகுறித்து இதுவரை கண்டறியப் படாத தகவல்களை ஆய்வு செய்வதற்கான "பார்க்கர்' விண்கலத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான "நாஸா' விண்ணில் செலுத்தியது.
 • 18 பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்ததையடுத்து, தெஹ்ரீக்--இன்சாஃப் கட்சியின் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான், நாட்டின் 22-ஆவது பிரதமராக பதவியேற்றார்.
 • 24 ஆஸ்திரேலியாவில் மால்கம் டர்ன்புல் ஆட்சிக்கு எதிராகப் போர்க் கொடி தூக்கிய ஆளும் கட்சி எம்.பி.க்கள், அவரை பதவியிலிருந்து அகற்றினர். புதிய பிரதமராக ஸ்காட் மோரிஸன் பதவியேற்றார்.
 • 26 ஜிம்பாப்வேயில் முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபே பங்கேற்காமல் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் வெற்றியடைந்த எம்மர்ஸன் நங்கக்வா, அந்த நாட்டின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றார்.
செப்டம்பர்
 • 11 ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் தேடி அகதிகள் சென்று கொண்டிருந்த இரு படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 20 சிறுவர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் லிபியா கடல் பகுதியில் மூழ்கி உயிரிழந்தனர்.
 • 18 ரஷிய ராணுவ விமானத்தை சிரியாவின் இடைமறி ஏவுகணைகள் தவறுதலாக சுட்டு வீழ்த்தியதில் 15 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கு, தங்களது விமானத்தை இஸ்ரேல் விமானங்கள் கேடயமாகப் பயன்படுத்தியதே காரணம் என்று ரஷியா குற்றம் சாட்டியது.
 • 22 இந்தோனேசியாவின் சுலாவெசி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் அதனைத் தொடர்ந்து தாக்கிய சுனாமியில் 1,948 பேர் உயிரிழந்தனர்.
அக்டோபர்
 • 2 சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சித்து வந்த செய்தியாளர் ஜமால் கஷோகி, சில ஆவணங்களைப் பெறுவதற்காக துருக்கியில் உள்ள சவூதி தூதரகத்துக்கு சென்றபோது, அவரை அங்கிருந்தவர்கள் படுகொலை செய்தனர். (இதனைத் தொடக்கத்தில் சவூதி அரேபியா மறைத்தாலும், சில நாள்களுக்குப் பிறகு அதனை ஒப்புக் கொண்டது. உளவுத் துறை அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்பட்டு அந்தப் படுகொலையை செய்ததாக சவூதி அரசு கூறினாலும், அந்தப் படுகொலைக்கு சவூதி இளவரசர்தான் உத்தரவிட்டதாக பரவலாக சந்தேகிக்கப்படுகிறது. இதன் காரணமாக, சவூதி மீது பல நாடுகள் தடைகளை விதித்து வருகின்றன).
 • 9 அமெரிக்காவுக்கான ஐ.நா. தூதர் நிக்கி ஹேலி, தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார். கேபினட் அந்தஸ்து கொண்ட ஒரு பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் இந்திய அமெரிக்கர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 • 26 இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவியிலிருந்து அகற்றிவிட்டு, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்சவை புதிய பிரதமராக நியமிப்பதாக அதிபர் மைத்ரிபால சிறீசேனா அறிவித்ததைத் தொடர்ந்து, அந்த நாட்டில் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டது.
 • 27 இலங்கை நாடாளுமன்றத்தை முடக்குவதாக அதிபர் சிறீசேனா அறிவித்தார். ரணில் விக்ரமசிங்கவுக்கு அளிக்கப்பட்டிருந்த பிரதமருக்கான பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. மஹிந்த ராஜபட்சவை இலங்கை பிரதமராக சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் அங்கீகரித்தன.
 • 29 இந்தோனேசியாவின் லயன் ஏர் விமானம் கடலுக்குள் விழுந்து நொறுங்கியதில், அதிலிருந்த இந்திய விமானி உள்ளிட்ட 189 பேரும் உயிரிழந்தனர்.
 • 30 இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்க தொடர்வதற்கு ஆதரவு தெரிவித்திருந்த தமிழ் தேசியக் கூட்டணி, இலங்கை தமிழ் அரசு கட்சி, ஜனதா விமுக்தி பெரமுனா ஆகிய கட்சிகளின் கோரிக்கையின் பேரில், நாடாளுமன்ற முடக்கத்தை நீக்குமாறு அதிபர் சிறீசேனாவை அதன் தலைவர் கரு ஜெயசூர்யா கேட்டுக்கொண்டார்.
 • 31 பாகிஸ்தானில் மதநிந்தனை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆசியா பிபி என்ற பெண்ணை அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் வழக்கிலிருந்து விடுவித்தது. இதை எதிர்த்து நாடு முழுவதும் கடும் போராட்டங்கள் நடைபெற்றன. ஆசியா பிபி வெளிநாடு தப்பிச் செல்ல தடை விதிக்கப்படும் என்று அரசு உறுதியளித்த பிறகே, போராட்டங்கள் ஓய்ந்தன.
நவம்பர்
 • 9 இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு, அந்த நாட்டின் ராணுவம், காவல்துறை உள்ளிட்ட துறைகளை தனது நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதாக அதிபர் சிறீசேனா அறிவித்தார்.
 • 12 இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிபரின் அறிவிப்பை, அந்த நாட்டு உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்தது.
 • 25 ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறியதற்குப் பிறகு, அந்த அமைப்புக்கும், பிரிட்டனுக்கும் இடையிலான உறவு குறித்த வரைவு ஒப்பந்தத்துக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் அளித்தது.
டிசம்பர்
 • 4 விலைவாசி உயர்வை எதிர்த்து பிரான்ஸில் நடைபெற்று வந்த தொடர் "மஞ்சள் அங்கி' போராட்டத்துக்கு அந்த நாட்டு அரசு அடிபணிந்து, வரிகளைக் குறைக்கவும், அடிப்படை ஊதியத்தை அதிகரிக்கவும் ஒப்புக் கொண்டது.
 • 12 இலங்கை நாடாளுமன்றத்தில் 3-ஆவது முறையாகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை தீர்மானத்தில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றார். அதையடுத்து, அவர் மீண்டும் பிரதமராக 16-ஆம் தேதி பதவியேற்றார்.
 • 19 சிரியாவில் இஸ்லாமிய தேச (.எஸ்.) பயங்கரவாதிகளுக்கு எதிராக சண்டையிட்டு வந்த 2,000 அமெரிக்க வீரர்களைத் திரும்ப அழைக்கும் அதிரடி அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டார். இதன் காரணமாக, .எஸ். பயங்கரவாதிகளின் கை மீண்டும் ஓங்கும் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டது. டிரம்ப்பின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் 21-ஆம் தேதி பதவி விலகினார்.
 • 22 இந்தோனேசியாவில் எரிமலை சீற்றத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி அலை தாக்கி 429 பேர் உயிரிழந்தனர். எரிமலை சீற்றத்தால் கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலச்சரிவுதான் இந்த சுனாமிக்கு காரணம் என்று தெரிவிக்கப்
 • பட்டது.
EmoticonEmoticon