Current Affairs-2018- Tamilnadu A Glance in Tamil

Current Affairs-2018 in Tamil,
Dinamani ,TNPSC, UGC-NET, RRB, IBPS and othe competitive Examination

2018 - ஒரு பின்னோக்கிய பார்வை - தமிழகம்
தமிழகம் 2018
ஜனவரி
 • 1 மியூசிக் அகாதமியின் 91-ஆவது ஆண்டு இசைவிழாவில் "சங்கீத கலாநிதி' விருதை சித்ரவீணை கலைஞர் என். ரவிகிரணுக்கு சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி வழங்கினார்.
 • 1 " ரஜினி மன்றம்' என்ற இணையதளத்தை நடிகர் ரஜினிகாந்த் தொடங்கினார்.
 • 4 பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் தமிழக அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட போக்குவரத்துக்கழக ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
 • 4 தமிழக சட்டப் பேரவையின் அவை முன்னவராக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் நியமிக்கப்பட்டார்.
 • 19 தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பயணச் சீட்டு கட்டணம் உயர்த்தப்
 • படுவதாக தமிழக அரசு அறிவித்தது.
 • 24 தென்னிந்தியாவில் முதல் முறையாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் ரூ.1 கோடி மதிப்பிலான தோல் வங்கியை சுகாதாரத் துறை அமைச்சர்
 • சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
 • 31 நான்கு வயது சிறுமியை கொலை செய்த விவசாயி மணிகண்டனுக்கு தூக்கு தண்டனை விதித்து திருவண்ணாமலை மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
பிப்ரவரி
 • 2 மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சன்னதிக்குச் செல்லும் வழியில் உள்ள கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது.
 • 3 பேராசிரியர்கள் நியமனத்துக்காக ரூ.30 லட்சம் லஞ்சம் பெற்றதாக கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஏ.கணபதியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கைது செய்தனர்.
 • 7 சென்னை அருகில் மலையம்பாக்கம் கிராமத்தில் பிரபல ரௌடி பினுவின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக 70 ரௌடிகள் ஒரே இடத்தில் கூடியபோது அவர்களை தனிப்படை போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர்..
 • 12 தமிழக சட்டப்பேரவையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவப் படத்தை பேரவைத் தலைவர் தனபால் திறந்து வைத்தார்.
 • 21 மதுரை ஒத்தக்கடை பொதுக்கூட்ட மைதானத்தில் "மக்கள் நீதி மய்யம்' என்பது தான் தனது கட்சியின் பெயர் என்று கமல்ஹாசன் அறிவித்தார்.
 • 24 தமிழகத்தில் பணிக்குச் செல்லும் பெண்கள் இருசக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கும் "அம்மா ஸ்கூட்டர்' திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி அறிமுகப்படுத்தி பயனாளிகளுக்கு ஸ்கூட்டர்களை வழங்கினார்.
மார்ச்
 • 1 காஞ்சி காமகோடி பீடத்தின் 70-ஆவது பீடாதிபதியாக ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பொறுப்பேற்றுக் கொண்டார்.
 • 5 சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிறுவப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் சிலையை திறந்து வைத்த ரஜினிகாந்த், எம்ஜிஆர் கொடுத்த ஆட்சியை என்னால் கொடுக்க முடியும் என தெரிவித்தார்.
 • 15 மதுரை மேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆர்.கே. நகர். சட்டப்பேரவை உறுப்பினர் டிடிவி தினகரன் தனது புதிய அமைப்புக்கு "அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்'என்ற பெயரை அறிவித்தார்.
 • 22 மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற பகுதியில் இருந்த அனைத்து சி.சி.டி.வி கேமராக்களையும் நிறுத்தி வைத்திருந்தோம் என அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்தார்.
 • 31 காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16-ஆம் தேதியன்று வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதற்கான "கெடு' முடிந்த நிலையில் (பிப்ரவரி 29) மேலும் 3 மாத காலம் அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு அளித்தது.
ஏப்ரல்
 • 3 காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சேப்பாக்கத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 • 5 சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக எம்.கே. சூரப்பாவை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்து உத்தரவிட்டார்.
 • 7 விவசாயிகள், வேளாண்மை திட்டங்கள் குறித்த உழவன் செயலியை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் அறிமுகப்படுத்தினார்.
 • 16 கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்த முயன்றதாக கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவியை போலீஸார் கைது செய்தனர்.
 • 27 துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 அதிமுக எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மே
 • 2 குடிப் பழக்கத்துக்கு அடிமையான தனது தந்தையைத் திருத்துவதற்காக திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த பள்ளி மாணவர் தினேஷ் நல்லசிவம் ரயில்வே மேம்பாலத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
 • 7 சென்னை மெரீனா கடற்கரையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஃபீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம் அமைப்பதற்காக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.
 • 22 தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்; 102 பேர் காயமடைந்தனர்.
 • 25 திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மதம் பிடித்த யானை மசினி மிதித்ததில் பாகன் கஜேந்திரன் உயிரிழந்தார். இதையடுத்து கோயில் வரலாற்றில் முதல் முறையாக கோயிலின் நடை நாள் முழுவதும் அடைக்கப்பட்டது.
 • 29 ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு 342 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதை, சிப்காட் நிர்வாகம் ரத்து செய்தது.
ஜூன்
 • 1 காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்படுவது குறித்த அறிவிக்கையை அரசிதழில் வெளியிட்டது. இது விவசாயிகளுக்கும், அதிமுக அரசுக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி குறிப்பிட்டார்.
 • 14. டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.-க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் எம்.எல்.-க்கள் தகுதி நீக்கம் செல்லாது' என நீதிபதி சுந்தரும், தகுதி நீக்கம் செல்லும்' என சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.
 • 19 மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளதாக என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்தது.
 • 30 11 ஆண்டுகால போராட்டத்துக்குப் பின்னர் இந்தியாவின் முதல் திருநங்கை வழக்குரைஞராக தமிழகத்தைச் சேர்ந்த சத்தியஸ்ரீ சர்மிளா தமிழ்நாடு-புதுச்சேரிக்கான பார் கவுன்சிலில் பதிவு செய்தார்.
ஜூலை
 • 5 தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான பாதுகாப்பு, கல்விமுறை குறித்த சட்ட மசோதாவை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே..செங்கோட்டையன் சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார்.
 • 9 தமிழக சட்டப் பேரவையில் லோக் ஆயுக்த மசோதா நிறைவேறியது..
 • 10 சிறுமியைப் பலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற தஷ்வந்துக்கு கீழ்நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
 • 16 சென்னையில் 11 வயது மாற்றுத் திறனாளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குடியிருப்பின் லிப்ட் ஆபரேட்டர் உள்ளிட்ட 18 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 • 19 காவிரி டெல்டா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து 2,000 கன அடி நீரை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்.
 • 23 5 ஆண்டுகளுக்குப் பின் முழுக் கொள்ளளவான 120 அடியை மேட்டூர் அணை எட்டியதைத் தொடர்ந்து அதன் 16 மதகுகளும் திறக்கப்பட்டன.
 • 23 வணிகக் கட்டடங்கள், குடியிருப்புக் கட்டடங்களுக்கான சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டது.
ஆகஸ்ட்
 • 1 மறுமதிப்பீட்டுக்காக விண்ணப்பித்திருந்த மாணவர்களிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு அவர்களை தேர்ச்சி அடைய வைத்த குற்றச்சாட்டில், பல்கலைக்கழக முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் ஜி.வி.உமா உள்ளிட்ட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
 • 2 சிலைக்கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ வசம் ஒப்படைப்பதற்கான ஆணையை தமிழக அரசு பிறப்பித்தது.
 • 7 தமிழகத்தில் 5 முறை முதல்வராக இருந்தவரும், திமுக தலைவருமான கருணாநிதி(94) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்.
 • 9 நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் உள்ள 11 தனியார் தங்கும் விடுதிகளை 48 மணி நேரத்துக்குள் பூட்டி சீல் வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
 • 12 சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக வி.கே.தஹிலராமாணீ பொறுப்பேற்றுக் கொண்டார்.
 • 15 தேசிய, மாநில அளவில் விளையாட்டுத் துறையில் சாதித்தவர்களுக்கு அரசு வேலையில் இரண்டு சதவீத உள்இடஒதுக்கீடு வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
 • 18 கலைக் கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்லூரி வளாகத்துக்குள் மாணவர்கள் செல்லிடப்பேசி பயன்படுத்தக் கூடாது என கல்லூரி கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டது.
 • 23 எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை காமராஜர் சாலையில் அலங்கார வளைவு அமைப்பதற்கான அடிக்கல்லை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நாட்டினார்.
 • 27 இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து பயணிப்பவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது.
 • 28 கருணாநிதியின் மறைவைத் தொடர்ந்து, திமுக தலைவராக மு..ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் அக்கட்சியின் பொதுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
செப்டம்பர்
 • 3 சென்னை மெரீனா கடற்கரையில் போராட்டம் நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.
 • 5 குட்கா வழக்கு தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 35 இடங்களில் சிபிஐ சோதனை மேற்கொண்டது.
 • 6 குட்கா வழக்கு தொடர்பாக மாதவ ராவ், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில் முருகன் உள்ளிட்ட 5 பேரை சிபிஐ கைது செய்தது.
 • 8 முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரையும் விடுவிக்க முடிவெடுக்கப்பட்டு, அதற்கான பரிந்துரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
 • 12 அதிமுக சார்பில் "நியூஸ் ஜெ' தொலைக்காட்சியின் இலச்சினை, செல்லிடப்பேசி செயலி ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டன.
 • 13 சென்னை புழல் சிறை முறைகேடு தொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில், அங்கிருந்து 18 தொலைக்காட்சிகள், 2 வானொலிப் பெட்டிகள் ஆகியவை அகற்றப்பட்டன.
 • 14 சென்னை துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐசிஜிஎஸ் விஜயா என்ற ரோந்துக் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
 • 17 அவதூறு பேச்சு தொடர்பாக பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா மீது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது.
 • 24 குட்கா வழக்கு தொடர்பாக உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி சிவகுமார் என்பவரை சிபிஐ கைது செய்தது.
 • 25 கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு தொடர்பாக 9 பேரை கோபி நீதிமன்றம் விடுவித்தது.
அக்டோபர்
 • 4 சென்னையில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.87.33 -
 • கடந்தது. டீசல் விலை ரூ.79.79 -ஐ தொட்டது.
 • 9 கோயம்பேட்டில் உள்ள சென்னை புறநகர் பேருந்து நிலையத்தின் பெயர் "புரட்சிதலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம்' என்று மாற்றப்பட்டது.
 • 12 பழம்பெரும் துறைமுகங்களில் ஒன்றான சென்னை துறைமுகத்தில் உள்ள பன்னாட்டு பயணியர் முனையம் ரூ.17.24 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டது.
 • 19 தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் தேமுதிக பொருளாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.
 • 25 ஆர்.கே.நகர் சட்டப்பேரவை உறுப்பினர் டிடிவி தினகரனின் நம்பிக்கைக்குரிய 18 எம்.எல்..க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க இருந்த தடை நீக்கப்பட்டதாகவும் உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
 • 29 நாட்டிலேயே முதன்முறையாக மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய ரயில்-18 என்னும் அதிவிரைவுரயிலை ஐ.சி.எஃப்.(இணைப்பு பெட்டி தொழிற்சாலை) தயாரித்து ரயில்வே வாரியத்திடம் ஒப்படைத்தது.
 • 29 தமிழகத்தில் கட்டடங்களுக்கு அனுமதிக்கப்படும் தள பரப்பளவு குறியீடு 1.5 இல் இருந்து 2 ஆக அதிகரித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
நவம்பர்
 • 2 தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் காரணமாக குழந்தை உள்பட 5 பேரும், டெங்கு காய்ச்சல் காரணமாக ஒருவரும் உயிரிழந்தனர்.
 • 3 திருச்சி பெல் நிறுவனம் மூலம் பராமரிக்கப்படும் மான் பூங்காவில் 31 மான்கள் திடீரென உயிரிழந்தன.
 • 14 அதிமுக தலைமையகத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புதிய சிலையை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர். மேலும், நியூஸ் ஜெ சேனலையும் தொடங்கி வைத்தனர்.
 • 15 மாமல்லபுரம் அருகில் ஒரு பேருந்து மீது கார் மோதியதில் 4 மாணவர்கள் உள்பட 5 இளைஞர்கள் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர்.
 • 16 வங்கக்கடலில் உருவான தீவிர புயல் கஜா நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகில் கரையைக் கடந்தது. இந்த புயல் காரணமாக, கடலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி ஆகிய 7 மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. லட்சக்கணக்கான மரங்கள் சாய்ந்தன. மின் கம்பங்கள், மின்மாற்றிகள் ஆகியவையும் சேதமடைந்தன.
 • 17 பத்தாம் வகுப்பு, 11, 12-ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் நடைபெறும் துணைத்தேர்வுகள் 2019-ஆம் ஆண்டில் இருந்து நடத்தப்படாது என்று அரசு தேர்வுத்துறை அறிவித்தது. ஏப்ரல், மே மாதத்தில் நடை
 • பெறும் பொதுத் தேர்வில் எல்லா பாடத்திலும் தேர்ச்சியடையாத மாணவர்கள் ஜூன், ஜூலையில் மறுமுயற்சி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
 • 22 தருமபுரி பேருந்து எரிப்பு சம்பவத்தில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்த அதிமுகவினர் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
 • 27 பிள்ளைகள் தங்களை கவனிக்காமல் நிலத்தை பெற்று துரத்தி விட்டதாகவும், அவர்களிடம் இருந்து தங்கள் நிலத்தை மீட்டு தரும்படி திருவண்ணாமலையைச் சேர்ந்த முதியவர் கண்ணன்(75), அவரது மனைவி பூங்காவனம் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். அதன்பேரில், ஆட்சியர் விசாரணை நடத்தி, பெற்றோர்கள் மற்றும் மூத்தகுடிமக்கள் நலம் மற்றும் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் 5 ஏக்கர் நிலத்தை மகன்களிடம் இருந்து பெற்று, கண்ணன், பூங்காவனம் பெயருக்கு மாற்றி எழுதி ஒப்படைத்தார்.
 • 30 தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தில், தொகையை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
டிசம்பர்
 • 5 தூத்துக்குடியில் மேம்பாட்டு பணிக்காக ரூ.100 கோடி முதலீடு செய்யப்படும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் வேதாந்தா நிறுவனம் தெரிவித்தது. மேலும், ஆண்டுக்கு ரூ.10 கோடி பெரு நிறுவனங்களின் சமூகபொறுப்பு திட்டத்தில் செலவிடப்படும் என்றும் தெரிவித்தது.
 • 10 பெண்களுக்கு வீடுகளிலோ, பணிபுரியும் இடங்களிலோ பாலியல் தொல்லை ஏற்பட்டால், கட்டணமில்லாத தொலை பேசி எண் தொடர்பு கொள்ளும் வகையில், புதிய உதவி எண் 181-ஐ தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கிவைத்தார்.
 • 11 இணையதளத்தில் விண்ணப்பித்து வில்லங்கச் சான்று பெறும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்.
 • 13 புதிய தலைமை செயலகக் கட்டடம் கட்டியதில் நடந்த முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டு தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
 • 14 தமிழகம் முழுவதும் கோயில்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக இந்துசமய அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
 • 14 பி.எஸ்.என்.எல். இணைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தி அரசுக்கு ரூ.1.78 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக மாறன் சகோதரர்கள் மீதான வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 7-ஆம் தேதிக்கு சிபிஐ நீதிமன்றம் ஒத்திவைத்தது.
 • 15 தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் வலுவடைந்து "பெய்ட்டி' புயலாக உருவானது.
 • 19 நாட்டின் முதல் தானியங்கி ஆய்வு ரயிலை, சென்னை ஐ.சி.எஃப் தயாரித்து வழங்கியது.
 • 20 சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா, அந்நியச் செலாவணி வழக்கின் குற்றச்சாட்டுப்பதிவுக்காக எழும்பூர் நீதிமன்றத்தில் காணொலிக் காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
 • 21 தனது உறவினருக்கு உதவும் வகையில் கணிதத் தேர்வு வினாத்தாளை வெளியிட்ட, பல்கலைக்கழகத் தற்காலிக பெண் ஊழியர் காஞ்சனாவை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.
 • 22 பாஜக தவிர்த்த ஒத்த கருத்தைக் கொண்ட கட்சிகளுடன் இணைந்து மக்களவைத் தேர்தலை சந்திக்கப் போவதாக கமல் ஹாசன் அறிவித்தார்.
 • 22 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பலியான 13 பேரில் 12 பேர் தலை மற்றும் மார்புப் பகுதியில் குண்டு பாய்ந்து இறந்ததாகவும், இறந்தவர்களில் சிலர் பின்னால் இருந்து சுடப்பட்டதாகவும் உடற்கூறு ஆய்வறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.


EmoticonEmoticon