Current Affairs-2018-Sports A Glance in Tamil

Current Affairs-2018 in Tamil,
Dinamani ,TNPSC, UGC-NET, RRB, IBPS and othe competitive Examination


2018 - ஒரு பின்னோக்கிய பார்வை - விளையாட்டு
விளையாட்டு 2018
ஜனவரி
 • 9 விதிகளை மீறி ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக எழுந்த புகாரின் பேரில் ஆல் ரவுண்டர் யூசுப் பத்தானுக்கு 5 மாதங்கள் தடை விதித்தது பிசிசிஐ.
 • 18 ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான கேரி சோபர்ஸ் விருது மற்றும் சிறந்த ஒரு நாள் ஆட்டக்காரர் விருதுகளை பெற்றார் இந்திய கேப்டன் விராட் கோலி.
 • 27 ஆஸி. ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி உலகின் முதல்நிலை வீராங்கனை என்ற அந்தஸ்தையும் பெற்றார்.
பிப்ரவரி
 • 3 நியூஸிலாந்தில் நடைபெற்ற ஐசிசி 19 வயதுக்குள்பட்டோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பிரித்வி ஷா தலைமையிலான இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 4-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
 • 13 விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதன்முறையாக தென்னாப்பிரிக்காவில் 4-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது.
 • 24 மெல்போர்னில் நடைபெற்ற ஜிம்னாஸ்டிக்ஸ் உலகக் கோப்பை போட்டியில் மகளிர் வால்ட் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று அருணா புத்தரெட்டி முதன்முறையாக பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை என்ற சிறப்பைப் பெற்றார்.
மார்ச்
 • 2 கிர்கிஸ்தானில் நடைபெற்ற ஆசிய சீனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 65 கிலோ பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார் நவ்ஜோத் கெளர்.
 • 3 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் முதன்முறையாக விடியோ உதவி நடுவர் முறையை அறிமுகம் செய்வது தொடர்பாக சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிஃபா) நிர்வாகிகள் முடிவு செய்தனர்.
 • 4 மெக்ஸிகோவின் குவாடலராஜாவில் நடைபெற்ற உலக துப்பாக்கி சுடும் போட்டியில் மகளிர் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்தார் ஹரியாணாவின் இளம் வீராங்கனை மானு பாக்கர். உலகக் கோப்பை தங்கம் வென்ற இந்தியாவின் இளம் வீராங்கனை என்ற சிறப்பையும் பாக்கர் பெற்றார்.
 • 9 இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சமி உள்பட 4 பேர் மீது அவரது மனைவி ஹாசின் ஜஹான் அளித்த புகாரின் பேரில் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் கொல்கத்தா போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
 • 17 பெங்களூரு கண்டீரவா மைதானத்தில் நடைபெற்ற ஐஎஸ்எல் 2017-18 போட்டி இறுதி ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சி அணியை 3-2 என்ற கோல்கணக்கில் வென்று சென்னையின் எஃப்சி அணி இரண்டாவது முறையாக பட்டம் வென்றது.
 • 24 தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரின் போது பந்தை சேதப்படுத்த முயன்றதாக எழுந்த புகாரை அடுத்து ஆஸி. கேப்டன் ஸ்மித், துணை கேப்டன் வார்னர், வீரர் பேங்கிராப்ட் ஆகியோருக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஓராண்டு கிரிக்கெட் ஆட தடை விதித்து உத்தரவிட்டது.
ஏப்ரல்
 • 5 கோல்ட்கோஸ்ட்டில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டி மகளிர் 48 கிலோ பளுதூக்கும் பிரிவில் இந்தியாவுக்கு முதல் தங்கத்தை பெற்றுத் தந்தார் மணிப்பூரின் மீராபாய் சானு.
 • 7 தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் (77 கிலோ), வெங்கட் ராகுல் ரகலா (85 கிலோ) ஆகியோர் காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தனர்.
 • 8 காமன்வெல்த் போட்டியில் மகளிர் டேபிள்டென்னிஸ் அணி பிரிவில் சிங்கப்பூரை வென்று முதன்முறையாக தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்தது இந்தியா.
 • 11 காவிரி நீர் பிரச்னை போராட்டங்கள் எதிரொலியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆட்டங்கள் அனைத்தும் சென்னையில் இருந்து புணேவுக்கு இடம் மாற்றப்பட்டன.
 • 12 இந்தியாவின் நட்சத்திர பாட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் உலகின் நம்பர் ஒன் வீரர் அந்தஸ்தை பெற்று சாதனை படைத்தார்.
 • 15 காமன்வெல்த் மகளிர் பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவு இறுதியில் சாய்னா நெவால் பி.வி.சிந்துவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.
மே
 • 23 சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் தென்னாப்பிரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ்.
 • 26 ரியல் மாட்ரிட் அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் லீக் கால்பந்து பட்டத்தை வென்று சாதனை புரிந்தது.
 • 27 மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பையில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வென்று மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
 • 31 2009 ஐபிஎல் சீசனில் அன்னிய செலாவணி சட்டத்தை மீறியதற்காக பிசிசிஐ முன்னாள் தலைவர் என்.சீனிவாசன், ஐபிஎல் ஆணையர் லலித் மோடி உள்ளிட்டோருக்கு ரூ.121 கோடி அபராதம் விதித்து அமலாக்கத்துறை உத்தரவிட்டது.
ஜூன்
 • 1 ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக பிரபல இந்தி நடிகர் சல்மான் கான் இளைய சகோதரர் அர்பாஸ் கானிடம் தாணே போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
 • 9 ருமேனிய டென்னிஸ் வீராங்கனை சிமோனா ஹலேப் 2-1 என்ற செட் கணக்கில் அமெரிக்க வீராங்கனை ஸ்லோன் ஸ்டெபான்ûஸ வீழ்த்தி முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்.
 • 24 சென்னையைச் சேர்ந்த 12 வயது சிறுவன் பிரகனாநந்தா இத்தாலியில் நடைபெற்ற செஸ் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறி உலகின் இரண்டாவது மற்றும் நாட்டின் இளம் கிராண்ட்மாஸ்டர் என்ற சிறப்பை பெற்றார்.
ஜூலை
 • 10 வீராங்கனைகளோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பயிற்சியாளர்பொறுப்பில் இருந்து விலகினார் துஷார் ஆரோத்.
 • 11 விம்பிள்டன் போட்டி காலிறுதியில் தென்னாப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சனிடம் தோல்வியுற்று வெளியேறினார் நடப்பு சாம்பியன் ரோஜர் பெடரர்.
 • 12 ஐஏஏஎஃப் 20 வயதுக்குட்பட்டோர் உலக தடகள சாம்பியன் போட்டியில் முதன்முறையாக தங்கம் வென்றார் ஹிமா தாஸ்.
 • 15 மாஸ்கோவில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்துபோட்டியில் குரோஷியாவை 4-2 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பின் வென்றது பிரான்ஸ்.
 • 15 விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இறுதிச் சுற்றில் வென்று தனது 13-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் ஜோகோவிச்.
ஆகஸ்ட்
 • 5 பாட்மிண்டன் உலக சாம்பியன் போட்டியில் பி.வி.சிந்துவை 2-0 என்ற செட் கணக்கில் வென்று 3 ஆவது பட்டத்தை வென்றார் கரோலினா மரின்.
 • 9 நீதிபதி லோதா குழுவின் பரிந்துரைகளிடன் படி புதிய சட்டவரையறையை ஏற்க பிசிசிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
 • 27 ஜகார்த்தா ஆசிய போட்டி தடகளம் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார் இளம் வீரர் நீரஜ் சோப்ரா.
செப்டம்பர்
9 யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி இறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்ûஸ வீழ்த்தி முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஜப்பான் வீராங்கனை என்ற சிறப்பை பெற்றார் நவோமி ஒஸாகா.
அக்டோபர்
 • 4 மே..தீவுகளுக்கு எதிராக ராஜ்கோட்டில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் அறிமுக ஆட்டத்திலேயே சதமடித்த இளம் இந்திய வீரர் என்ற சாதனையை செய்தார் பிரித்வி ஷா.
 • 9 பியூனஸ் அயர்ஸில் நடைபெற்ற யூத்ஒலிம்பிக் போட்டி பளுதூக்குதல் 62 கிலோ எடைபிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்தார் ஜெரேமி லால்ரின்னுங்கா.
நவம்பர்
 • 18 21 வயதே ஆன ஜெர்மன் டென்னிஸ் வீரர் அலெக்ஸாண்டர் வெரேவ் உலகின் நம்பர் ஒன் வீரர் ஜோகோவீச்சை வீழ்த்தி ஏடிபி உலக டூர் பைனல்ஸ் பட்டத்தை வென்றார்.
 • 24 புதுதில்லியில் நடைபெற்ற உலக மகளிர் குத்துச் சண்டை போட்டியில் 48 கிலோ எடைப்பிரிவில் 6-ஆவது முறையாக தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்தார் மூத்த வீராங்கனை மேரி கோம்.
 • 27 மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டி அரையிறுதி ஆட்டத்தில் அணியில் இடம் பெற விடாமல் தடுத்து விட்டனர் என பயிற்சியாளர் ரமேஷ் பவார், சிஓஏ உறுப்பினர் டயானா எடுல்ஜி மீது புகார் கூறினார் மூத்த வீராங்கனை மிதாலி ராஜ்.
டிசம்பர்
 • 10 அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் ஆட்டத்தில் ஆஸி. அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற சாதனை படைத்தது இந்தியா.
 • 16 புவனேசுவரத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது பெல்ஜியம்.
 • 16 சீனாவின் குவாங்ஷெளவில் நடைபெற்ற பாட்மிண்டன் உலக டூர் பைனல்ஸ் இறுதிச் சுற்றில் வென்று சாதனை படைத்தார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து. இதன் மூலம் தொடர்ந்து 6 போட்டி இறுதிச் சுற்றில் பெற்று வந்த தோல்விக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.


EmoticonEmoticon