Current Affairs-2018-Passaway A Glance in Tamil| 2018 - ஒரு பின்னோக்கிய பார்வை - மறைவுகள்

Current Affairs-2018 in Tamil,
Dinamani ,TNPSC, UGC-NET, RRB, IBPS and othe competitive Examination


2018 - ஒரு பின்னோக்கிய பார்வை - மறைவுகள்

மறைவுகள் - 2018

February
  • பிப். 24: இந்தியத் திரையுலகின் புகழ்பெற்ற நடிகையான ஸ்ரீதேவி (54), துபையில் திரையுலக நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்றபோது திடீர் மரணமடைந்தார்.
  • பிப். 28: காஞ்சி காமகோடி பீடத்தின் 69-ஆவது பீடாதிபதியான ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்(82) ஸித்தி அடைந்தார். சமகால ஆன்மிகப் பெரியோரில் முன்னோடியாகத் திகழ்ந்தவர். அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில் அமைதித் தீர்வுக்கு முயற்சிகள் எடுத்தவர்.

மார்ச்
  • மார்ச் 14: புகழ்பெற்ற இயற்பியலாளரும், வானியல் விஞ்ஞானியுமான ஸ்டீபன் ஹாக்கிங்(76) இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் உடல்நலக் குறைவால் காலமானார். இயற்பியலில் அவரது பிரபஞ்ச உற்பத்தி தத்துவத்துக்காக அவர் புகழ்பெற்றார்.
  • மார்ச் 19: ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் மடத்தின் 11-ஆவது பட்டம் ஸ்ரீரங்கராமானுஜ மகாதேசிக ஜீயர் ஸ்வாமிகள்(84) திருநாட்டை அலங்கரித்தார்.

மே
மே 15: தமிழுலகின் புகழ்பெற்ற எழுத்தாளரான பாலகுமாரன் (71) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்.

October
அக். 24: தெருக்கூத்துக் கலையை தமிழகக் கலைகளிடையே முக்கிய அடையாளமாக்கியவரும், "கூத்துப்பட்டறை' அமைப்பின் நிறுவனருமான ந.முத்துசாமி(82) சென்னையில்
காலமானார்.


November
  • நவ. 14: ஆசியாவின் முதல் பெண் நரம்பியல் மருத்துவரான டி.எஸ். கனகா(86) சென்னையில் காலமானார்.
  • நவ. 12: மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அனந்த் குமார்(59) உடல்நலக் குறைவால் பெங்களூரில் காலமானார்.
  • நவ. 24: பிரபல கன்னட நடிகரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அம்பரீஷ்(66) பெங்களூரில் காலமானார்.
  • நவ. 25: முன்னாள் மத்திய அமைச்சரும், கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவருமான சி.கே.ஜாஃபர் ஷெரீப்(85) உடல்நலக் குறைவால் பெங்களூரில் காலமானார்.
  • நவ. 30: அமெரிக்காவின் முன்னாள் அதிபரான ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ்(94) உடல்நலக் குறைவால் காலமானார்.
  • நவ. 26: தினமணி முன்னாள் ஆசிரியரும், கல்வெட்டியல் அறிஞருமான ஐராவதம் மகாதேவன்(88) உடல்நலக் குறைவால் காலமானார்.

December
  • டிச. 6: இயற்கை வேளாண் விஞ்ஞானியான "நெல்' ஜெயராமன்(54) சென்னையில் காலமானார்.
  • டிச. 21: பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன்(73) உடல்நலக் குறைவால் புதுச்சேரியில் காலமானார். "தினமணி கதிரில்' இவர் எழுதிய வரலாற்றுப் புதினமான "வானம் வசப்படும்' நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை இவர் பெற்றார்.
  • டிச. 23: திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், மூத்த தமிழறிஞருமான க..அறவாணன்(77) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்.


EmoticonEmoticon