Current Affairs-2018- India A Glance in Tamil

Current Affairs-2018 in Tamil,
Dinamani TNPSC, UGC-NET, RRB, IBPS and othe competitive Examination

2018 - ஒரு பின்னோக்கிய பார்வை - இந்தியா
தேசியம் 2018
ஜனவரி
 1. 6 கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான 2-ஆவது வழக்கில், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாதுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.
 2. 6 ஜம்மு-காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் ஜெய்ஷ்--முகமது பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட சக்திவாய்ந்த குண்டு வெடிப்பில் காவல்துறையினர் 4 பேர் பலியாகினர்.
 3. 9 திரையரங்குகளில் ஒவ்வொரு காட்சி தொடங்குவதற்கு முன்பும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டியது கட்டாயமில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு.
 4. 10 இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி கே.சிவன் நியமனம்.
 5. 12 உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் செயல்பாடுகள் பாரபட்சமாக இருப்பதாக, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், செலமேஸ்வர், மதன் பி லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்து புகார் தெரிவித்தனர்.
 6. 12 இஸ்ரோவின் பிஎஸ்எல்வி-சி40 ராக்கெட் மூலம் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான கார்டோசாட்- 2 வரிசை செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம். மேலும், 30 செயற்கைக்கோள்களை விண்வெளியில் வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் நிலைநிறுத்தி இஸ்ரோ சாதனை.
 7. 19 ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகித்த விவகாரத்தில், தில்லி சட்டப்பேரவையின் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 20 உறுப்பினர்களைப் பதவி நீக்கம் செய்ய குடியரசுத் தலைவருக்குத் தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது. கடந்த 2015-ஆம் ஆண்டு அவர்களை பார்லிமென்ட்ரி செயலர்களாக தில்லி அரசு நியமித்திருந்தது.
 8. 24 கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான 3-ஆவது வழக்கில், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாதுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.
பிப்ரவரி
 • 10 ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஜம்மு நகர் அருகேயுள்ள சஞ்சுவான் ராணுவ முகாமில் ஜெய்ஷ்--முகமது பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் ராணுவத்தினர் 5 பேர், பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்தனர். 4 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
 • 14 பஞ்சாப் நேஷனல் வங்கியில், தொழிலதிபர் நீரவ் மோடி உள்ளிட்டோர் ரூ.11,363 கோடி அளவுக்கு கடன் மோசடியில் ஈடுபட்டது அம்பலம்.
 • 15 தொழிலதிபர் நீரவ் மோடி, அவரது உறவினர் மெஹுல் சோக்ஸி உள்ளிட்டோருக்கு சொந்தமான 20 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றியது.
 • 15 தொழிலதிபர் நீரவ் மோடியின் நிறுவனங்களில் இருந்து, ரூ.5,100 கோடி மதிப்புள்ள வைரக் கற்கள், தங்கம் அமலாக்கத் துறையினரால் பறிமுதல்.
 • 22 பொதுத் துறை வங்கிகளில் கடன் பெற்று ரூ.3,695 கோடி மோசடியில் ஈடுபட்டதாக ரோட்டோமேக் நிறுவனத்தின் உரிமையாளர் விக்ரம் கோத்தாரி, அவரது மகன் ராகுல் கோத்தாரி ஆகியோரை சிபிஐ கைது செய்தது.
 • 28 ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது.
மார்ச்
 1. 2 சத்தீஸ்கரின் புஜாரிகங்கர் வனப்பகுதியில் காவல்துறையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 10 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை.
 2. 6 மேகாலயத்தின் புதிய முதல்வராக தேசிய மக்கள் கட்சியின் தலைவர் கான்ராட் சங்மா பதவியேற்றார்.
 3. 7 "நீட்' நுழைவுத் தேர்வு உள்பட அகில இந்திய அளவில் நடைபெறும் அனைத்து நுழைவுத் தேர்வுகளுக்கும் ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு.
 4. 8 நாகாலாந்து புதிய முதல்வராக தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியின் தலைவர் நெபியூ ரியோ பதவியேற்றார்.
 5. 9 திரிபுரா முதல்வராக பாஜகவைச் சேர்ந்த விப்லப் குமார் பதவியேற்றார்.
 6. 10 ரூ.50 கோடிக்கு மேல் வங்கி கடன் பெற்றால், கடவுச்சீட்டு விவரங்களை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் என்று மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டது.
 7. 16 பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியது.
 8. 20 இராக்கில் ஐஎஸ் பயங்கரவாதிகளால் கடந்த 2014-இல் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் கொலையான தகவலை இந்தியா உறுதி செய்தது.
 9. 23 ஆதாயம் தரும் இரட்டை பதவி விவகாரத்தில், 20 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லாது என்று தில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
 10. 24 கால்நடைத் தீவன ஊழல் வழக்கில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாதுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.
 11. 28 இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு மாற்றாக தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க வழிவகுக்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
ஏப்ரல்
 1. 2 அருண் ஜேட்லி தொடர்ந்த அவதூறு வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங், ராகவ் சந்த், ஆசுதோஷ் மன்னிப்பு கேட்டதைத் தொடர்ந்து வழக்கு முடிவுக்கு வந்தது.
 2. 2 பத்திரிகையாளர்கள் ஆதாரமற்ற செய்திகளை வெளியிட்டால் அவர்கள் அங்கீகாரம் நிரந்தரமாக ரத்து செய்யப்படலாம் என்று மத்திய அரசு தெரிவித்தது.
 3. 3 எஸ்சி-எஸ்டி சட்டத்தின் கீழ் முன் அனுமதியின்றி கைது செய்யும் நடவடிக்கைக்கு விதித்த தற்காலிக தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு.
 4. 3 செப்டம்பரிலிருந்து விற்பனை செய்யப்படும் புகையிலைப் பொருள்களின் பாக்கெட்டுகளில் 85 சதவீதம் அளவுக்கு எச்சரிக்கை விளம்பரங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிக்கை வெளியீடு.
 5. 5 கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்ற மான் வேட்டையாடிய வழக்கில் சல்மான் கானுக்கு ஐந்தாண்டு சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு.
 6. 6 பாதுகாப்பு, உள்நாட்டு விவகாரம், தொழிலாளர், சட்டம் உள்ளிட்ட 10 அமைச்சகங்களின் இணையதளங்கள் ஆறு மணி நேரம் முடங்கியதால் பரபரப்பு.
 7. 17 பாதுகாப்புத் துறையில் உறவை பலப்படுத்த இந்தியா- ஸ்வீடன் ஒப்பந்தம்.
 8. 19 மாணவர்களின் சிரமத்தை குறைக்கும் விதமாக 2-ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்க கூடாது எனவும், 3-ஆம் வகுப்பு வரையில் 3 பாடங்கள் மட்டுமே கற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் என்சிஇஆர்டி உத்தரவு.
 9. 21 12 வயதுக்கு கீழான பெண்களிடம் பாலியல் குற்றத்தில் ஈடுபடும் நபருக்கு மரண தண்டனை விதிக்கப் பரிந்துரை.
 10. 25 சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு.
 11. 26 நீண்டகாலம் முதல்வர் பதவியை வகித்தவர் என்ற பெருமையைப் பெற்ற மேற்கு வங்க முன்னாள் முதல்வர் ஜோதிபாசுவின் சாதனையை சிக்கிம் முதல்வரும், சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியின் நிறுவனருமான பவன் குமார் முறியடித்தார்.
மே
 1. 2 பத்திரிகையாளர் ஜோதிர்மய்டே கொலை வழக்கில், நிழல் உலக தாதா சோட்டா ராஜன் உள்பட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மும்பை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.
 2. 7 முன்னாள் முதல்வர்களுக்கும் அரசு இல்லம் அளித்திருந்த உத்தரப் பிரதேச அரசின் சட்டத்தை ரத்து செய்து, முதல்வர் பதவியில் இருந்து விலகிய பிறகு அவர்களும் சாதாரண குடிமக்கள்தான் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு.
 3. 11 நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் பாலியல் தொல்லை விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என்று அனைத்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
 4. 17 கர்நாடக மாநில முதல்வராக பாஜகவின் பி. எஸ். எடியூரப்பா பதவியேற்றார்.
 5. 19 நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாகவே, கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா ராஜிநாமா.
 6. 23 கர்நாடகத்தின் 24-ஆவது முதல்வராக, மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவர் ஹெச். டி. குமாரசாமி பொறுப்பேற்றார். காங்கிரஸ் கட்சியின் ஜி. பரமேஸ்வர் துணை முதல்வராகப் பதவியேற்றார்.
ஜூன்
 1. 1 திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும் பெண்ணும் இணைந்து வாழ உரிமையுண்டு என்று கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
 2. 1 2013-ஆம் ஆண்டு புத்தகயை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
 3. 5 உத்தரப் பிரதேச மாநிலம், பாக்பத் மாவட்டத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில், கி. மு-2200-1800 காலத்தைய அரசர்கள் பயன்படுத்திய தேர், வாள்கள் மற்றும் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.
 4. 8 திரிபுராவின் மாநில பழமாக அன்னாசிப் பழம் அறிவிக்கப்பட்டது.
 5. 14 ஜம்மு-காஷ்மீரில் "ரைஸிங் காஷ்மீர்' பத்திரிகையின் ஆசிரியர் சுஜாத் புகாரி பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
 6. 19 ஜம்மு-காஷ்மீரில் ஆளும் கூட்டணி அரசில் இருந்து விலக பாஜக முடிவு.
 7. 19 மக்கள் ஜனநாயக கட்சி கூட்டணியில் இருந்து பாஜக விலகியதையடுத்து, ஜம்மு-காஷ்மீர் முதல்வர் பதவியில் இருந்து மெஹபூபா முஃப்தி ராஜிநாமா செய்தார்.
 8. 20 ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது.
 9. 20 தலைமைப் பொருளாதார ஆலோசகர் பதவியில் இருந்து அரவிந்த் சுப்ரமணியன் ராஜிநாமா.
 10. 26 கடவுச் சீட்டு பெறும் முறையை எளிதாக்க, ஸ்மார்ட் செல்லிடப்பேசி வழியாக விண்ணப்பிக்கும் வகையில் செயலி அறிமுகம். மேலும், நாட்டின் எந்த பகுதியில் உள்ள கடவுச்சீட்டு அலுவலகத்தில் இருந்தும் விண்ணப்பிக்க புதிய விதிமுறை.
 11. 28 பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு(யுஜிசி) மாற்றாக இந்திய உயர்கல்வி ஆணையத்தை(ஹெச்இசிஐ) அமைக்க முடிவு செய்துள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்தது.
ஜூலை
 1. 5 கர்நாடக சட்டப் பேரவையில் முதல்வர் குமாரசாமி தாக்கல் செய்த பட்ஜெட் அறிக்கையில் ரூ.34,000 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிப்பு.
 2. 7 "நீட்' மற்றும் "ஜேஇஇ' தேர்வுகள் ஆன்லைன் முறையில் இனி ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் அறிவிப்பு.
 3. 19 ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு எதிராக சிபிஐ புதிய குற்றப்பத்திரிகை தாக்கல்.
 4. 20 பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக மக்களவையில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி.
 5. 30 12 வயதுக்கு குறைவான சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்திருத்தம் மக்களவையில் நிறைவேற்றம்.
ஆகஸ்ட்
 1. 3 உச்சநீதிமன்ற நீதிபதியாக உத்தரகண்ட் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப் நியமனம்.
 2. 9 மாநிலங்களவை துணைத் தலைவராக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஹரிவன்ஷ் நாராயண் சிங் தேர்வு.
 3. 9 பலத்த மழை காரணமாக, கேரள மாநிலம், மிகப்பெரிய அளவிலான வெள்ள பாதிப்பை சந்தித்தது. நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
 4. 16 இந்தியாவின் முன்னாள் பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாய் (93) தில்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் காலமானார்.
 5. 19 நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கும் அதிநவீன ஏவுகணை வெற்றிகரமாக சோதனை.
 6. 27 பயோ-எரிபொருளால் இயக்கப்பட்ட நாட்டின் முதல் விமானம், டேராடூனில் இருந்து தில்லியை வந்தடைந்தது.

செப்டம்பர்
 1. 1 நில பேர விவகாரம் தொடர்பாக, ஹரியாணா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, சோனியா காந்தி மருமகன் ராபர்ட் வதேரா ஆகியோர் மீது வழக்குப்பதிவு.
 2. 6 தெலங்கானா சட்டப்பேரவை பதவிக் காலம் முடிவதற்கு 6 மாதம் காலம் முன்பே கலைப்பதாக முதல்வரும், டிஆர்எஸ் தலைவருமான சந்திரசேகர் ராவ் அறிவிப்பு.
 3. 6 இந்திய, அமெரிக்க வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் (2+2) அளவிலான முதல் கட்ட பேச்சுவார்த்தை தில்லியில் நடைபெற்றது.
 4. 15 10.74 லட்சம் ஏழைக் குடும்பங்கள், ஆண்டொன்றுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு பெறும் ஆயுஷ்மான் பாரத்}தேசிய சுகாதாரத் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
 5. 19 முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்கும் அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
 6. 24 சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையத்தை பாக்யாங்கில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
 7. 25 கிரிமினல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.
 8. 26 ஆதார் திட்டம் சட்டப்படி செல்லுபடியாகும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு.
 9. 26 உச்சநீதிமன்ற வழக்கு விசாரணைகளை நேரடியாக ஒளிபரப்ப நீதிமன்றம் அனுமதி.
 10. 28 சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு.
அக்டோபர்
 1. 5 இந்திய ராணுவப் பயன்பாட்டுக்காக ரஷியாவிடம் இருந்து அதிநவீன எஸ்-400 "டிரையம்ப்' ரக ஏவுகணைகளை ரூ.37 ஆயிரம் கோடிக்கு கொள்முதல் செய்ய ரஷியா-இந்தியா ஒப்பந்தம்.
 2. 11 ஐஎன்எக்ஸ் மீடியா நிதி மோசடி வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமாக இந்தியா, ஸ்பெயின், பிரிட்டனில் இருந்த ரூ.54 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது.
 3. 16 அலாகாபாத் நகரத்தின் பெயரை "பிரயாக்ராஜ்' என மாற்றம் செய்வதற்கான முன்மொழிவுக்கு உத்தரப் பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
 4. 19 பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸில் தசராபண்டிகையையொட்டி ராவணன் உருவபொம்மை எரிப்பு நிகழ்ச்சியை காண, அப்பகுதியில் ரயில் தண்டவாளத்தில் கூடியிருந்த மக்கள் கூட்டத்தின் மீது ரயில் மோதியதில் 61 பேர் உயிரிழந்தனர். 74 பேர் காயமடைந்தனர்.
 5. 24 ஒரு நபருக்கு 3-ஆவது குழந்தை பிறக்கும் பட்சத்தில், அவர் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழப்பார் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதேபோல், பஞ்சாயத்து உறுப்பினராக இருப்பவருக்கு 3-ஆவது குழந்தை பிறந்தாலும், அவர் பதவியில் நீடிக்கும் தகுதியை இழப்பார் என்றும் கூறியது.
 6. 25 ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்ட 9 பேருக்கு எதிராக அமலாக்க இயக்குநரகம் 2-ஆவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
 7. 29 இந்தியா-ஜப்பான் இடையே ரூ.5.5 லட்சம் கோடி மதிப்பில், அதிவிரைவு ரயில், கடற்படை ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் உள்ளிட்ட 6 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
 8. 31 உலகிலேயே மிக உயரமானது (182 மீட்டர்) என்ற சிறப்பை பெற்ற, சர்தார் வல்லபபாய் படேலின் சிலையை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். குஜராத் மாநிலம், நர்மதை மாவட்டத்தில், சர்தார் சரோவர் அணைப்பகுதிக்கு அருகே, நர்மதை நதிக்கரையில், ரூ.2,989 கோடி செலவில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.
நவம்பர்
 1. 12 நாட்டிலேயே முதல் முறையாக, உள்நாட்டு நீர் வழித்தடத்தில் உருவாக்கப்பட்டுள்ள அதிநவீன பல்நோக்கு முனையத்தை உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசியில் மோடி திறந்து வைத்தார்.
 2. 14 ஜிசாட்-29 தகவல் தொடர்பு செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3-டி2 ராக்கெட், சதீஷ் தவன் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
 3. 17 அமெரிக்காவிலிருந்து கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்காக அந்தமான் நிகோபர் தீவுகளுக்குச் சென்ற ஜான் ஆலன் சாவ் (27), பழங்குடியின மக்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.
 4. 21 ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவையைக் கலைத்து ஆளுநர் சத்யபால் மாலிக் உத்தரவு.
 5. 22 பாகிஸ்தானில் உள்ள சீக்கிய புனிதத் தலமான கர்தார்பூர் குருத்வாராவுக்கு சீக்கிய யாத்ரீகர்கள் செல்வதற்கு வசதியாக இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் வழித்தடம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
 6. 26 ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் அளிக்கக் கூடாது என்று பள்ளிகளுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவு.
 7. 29 மகாராஷ்டிரத்தில் கல்வி, அரசு வேலையில் மராத்தா சமூகத்தினருக்கு 16 % இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதா சட்டப் பேரவையில் நிறைவேற்றம்.
 8. 29 2019ஆம் ஆண்டு முதல் 25 வயதுக்கு மேற்பட்டவர்களும் நீட் தேர்வு எழுதலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு.
 9. 29 இந்தியா உள்பட 9 நாடுகளின் 31 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி-சி43 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
டிசம்பர்
 1. 4 அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர வழக்கில் இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் ஜேம்ஸ் மிஷெல் துபையிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
 2. 4 எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்க கேரள மற்றும் பிகார் மாநிலங்களில் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு.
 3. 4 சித்த மருத்துவம் தொடர்பாக தொலைக்காட்சி சேனல்களில் நிகழ்ச்சி நடத்த இந்திய மருத்துவ கவுன்சில் தடை விதிப்பு.
 4. 5 குழந்தைகளின் பெயரில் வங்கிகளில் கணக்கு தொடங்க விரும்புவோர் தந்தையின் பெயருக்கு பதிலாக தாயாரின் பெயரை சேர்க்கலாம் என அரசு புதிய உத்தரவு.
 5. 7 மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமனம்.
 6. 10 பொருளாதாரக் குற்றவாளி விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவு.
 7. 11 சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. தெலங்கானாவில் டிஆர்எஸ் கட்சியும், மிúஸாரமில் மிúஸா தேசிய முன்னணி வெற்றி.
 8. 11 பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி மற்றும் பெண்களின் பெயர், இடம் போன்ற தகவல்களை ஊடகங்கள் மறைமுகமாகவும் வெளியிட உச்சநீதிமன்றம் தடை.
 9. 13 தெலங்கானா முதல்வராக டிஆர்எஸ் கட்சியின் தலைவர் கே.சந்திரசேகர் ராவ் பதவியேற்றார்.
 10. 19 ஜம்மு-காஷ்மீரில் 6 மாத ஆளுநர் ஆட்சிக்கு பிறகு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்.
 11. 25 நாட்டிலேயே மிக நீளமான "ரயில்-சாலை' இரண்டு அடுக்குப் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி
 12. செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.

EmoticonEmoticon