Current Affairs-2018 in Tamil,
Dinamani ,TNPSC, UGC-NET, RRB, IBPS and othe competitive Examination
2018 - ஒரு
பின்னோக்கிய பார்வை -
வணிகம்
ஏப்ரல்
23. டிசிஎஸ்
நிறுவனத்தின் சந்தை மதிப்பு
முதல் முறையாக 10,000 கோடி
டாலரை தாண்டி சாதனை படைத்தது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸýக்குப்
பிறகு இந்த மதிப்பை எட்டும்
இரண்டாவது இந்திய நிறுவனம்
என்ற பெருமையை பெற்றது டிசிஎஸ்.
மே
4. ஃபிளிப்கார்ட்
நிறுவனத்தின் 75 சதவீத
பங்குகளை அமெரிக்காவைச்
சேர்ந்த வால்மார்ட் நிறுவனம்
கையகப்படுத்த விற்பனை செய்ய
ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின்
மதிப்பு ரூ.1.05 லட்சம்
கோடி.
ஜூலை
- 5. டிடிஹெச், பிராட்பேண்ட் சந்தையில் நுழைவதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அறிவிப்பு.
- 9. தென்கொரியாவைச் சேர்ந்த சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் உலகின் மிகப்பெரிய செல்லிடப்பேசி ஆலையை இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
- 9. வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் இணைப்புக்கு தொலைத் தொடர்புத் துறை நிபந்தனையின் பேரில் அனுமதி.
- 16. ஐடிபிஐ வங்கியின் 51 சதவீத பங்குகளை கையகப்படுத்துவதற்கு எல்ஐசி ஒப்புதல்.
ஆகஸ்ட்
- 31. ஐடியா செல்லுலார்-வோடபோன் இந்தியா இணைப்பு நடவடிக்கைகள் நிறைவுபெற்றதாக அறிவிப்பு
- செப்டம்பர்
- 17. பேங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகியவற்றை ஒருங்கிணைத்து மூன்றாவது மிகப்பெரிய வங்கியை உருவாக்க மத்திய அரசு முடிவு.
அக்டோபர்
4. தனியார்
துறையைச் சேர்ந்த ஐசிஐசிஐ
வங்கியின் தலைமைச் செயல்
அதிகாரியான சந்தா கோச்சார்
முறைகேடு புகாரில் சிக்கியதால்
பதவி விலகினார். புதிய
தலைமைச் செயல் அதிகாரியாக
சந்தீப் பக்ஷி நியமனம்.
நவம்பர்
30. உலகின்
மிகப் பிரபல மேரியாட் ஹோட்டல்,
தங்களிடம் வாடிக்கையாளர்களாக
உள்ள 50 கோடி பேரின்
ரகசிய தகவல்கள் இணையதளம்
மூலம் ஊடுருவி திருடப்பட்டதாக
அறிவிப்பு.
டிசம்பர்
- 3. கிளாக்ஸோ ஸ்மித் கிளைன் நிறுவனத்திடமிருந்து ஹார்லிக்ஸ், பூஸ்ட் உள்ளிட்ட பிரபல பிராண்டுகளை கையகப்படுத்துவதாக ஹிந்துஸ்தான் யுனிலீவர் அறிவிப்பு.
- 10 ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் பதவியிலிருந்து திடீர் ராஜிநாமா.
- 11 ரிசர்வ் வங்கியின் 25ஆவது ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமனம்.
EmoticonEmoticon